இந்தியாவின் சாபக்கேடு!!!
லேபிள்கள்:
அரசியல்
"I would go to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant." --- Mahatma Gandhi May 1939
அறுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை எழுபதாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாய் கேள்விப் பற்றிருப்போம். ஆனால் இவர்கள் (காங்கிரசார்) ஒரு பூசணிக்காயை மற்றொரு பெரிய பூசணிக்காயைக் கொண்டு மறைக்கிறார்கள்! ஒரு ஊழலைப் பற்றி பேசுவதற்குள் மற்றொரு ஊழல்! அதற்குள் இன்னொரு ஊழல்!
ஊழல் செய்தால் பதவியைப் பிடிங்கிவிடுகிறார்கள்! ஊழல் செய்த பணத்தை????
ஊழல் செய்தால் பதவியைப் பிடிங்கிவிடுகிறார்கள்! ஊழல் செய்த பணத்தை????
நட்வர் சிங் ஐ ஞாபகம் இருக்கிறதா? அவர் பதவியைப் பறித்து ஆறாண்டுகள் ஆகிவிட்டது. அவர் ஊழல் செய்த பணம்??? ம்ம்ம்ம்.....
நாம் கல்மாடியை மட்டுமல்ல, எல்லா களவாணிகளையும் மறந்துவிடுவோம்!
இதோ இவர்கள் பொற்கால ஆட்சி:
உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல்
ஈராக்குடனான இத்திட்டத்தில் நட்வர்சிங் மற்றும் அவரது மகனால் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி இருவரும் கட்சியிலிருந்து நீக்கப் பட்டனர்
மது கோடா கறுப்புப் பண விவகாரம்
4000 கோடி அளவிலான பணத்தை வெளுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
இதோ இவர்கள் பொற்கால ஆட்சி:
உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழல்
ஈராக்குடனான இத்திட்டத்தில் நட்வர்சிங் மற்றும் அவரது மகனால் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி இருவரும் கட்சியிலிருந்து நீக்கப் பட்டனர்
மது கோடா கறுப்புப் பண விவகாரம்
4000 கோடி அளவிலான பணத்தை வெளுக்க முயன்றதாக குற்றச்சாட்டு
2G ஸ்பெக்ட்ரம் ஊழல்
போதும் என்ற அளவில் தகவல்கள் எல்லாருக்கும் தெரியும்
காமன் வெல்த் முறைகேடு
வெளிநாட்டினரிடமும் மானம் போக 15000 கோடிக்கு இதில் ஊழல்
ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிட மோசடி
குடியிருப்புகளை முதல்வர் மற்றும் குடும்பத்தார் கையகப் படுத்தியதாக குற்றச்சாட்டு
IPL ஊழல்
சசி தரூர், லலித் மோடி மற்றும் புனே குதிரப்பண்ணையாளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றசாட்டு
நிலக்கரி ஊழல்
முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் இதிலும் Rs 85000 கோடி மோசடி நடை பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டுக்கு பண விவகாரம்,
பெயர் சொல்லும் படியாக இவர்கள் இன்னும் எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்றவில்லை. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை 7 கால ஆண்டு ஆட்சியில் இன்னமும் நிறைவேற்றவில்லை. (இதில் லோக் பால் மசோதாவை நிறைவேற்ற இன்னும் எத்தனை ஆண்டு ஆகுமோ?)
இவர்கள் பொருளாதார மாமேதைகள் என்றால் அதுவும் இல்லை. பணவீக்கத்தை காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இல் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெறுவோம் என்றார்கள்! அதைதான் பார்த்தோமே!!!!
பெட்ரோல் டீசல் விலை மாதமொருமுறை உயர்கிறது.
இதில் இலங்கை சீனா வசம் சாய்ந்துவிடும் என்று பயம்,
பாகிஸ்தானோடு போர் மூண்டால் பொருளாதாரம் சீரழியும் என்று பயம்,
பயங்கரவாததிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் ஒட்டு போய்விடுமென பயம் ,
மம்தாவிடம் பயம்,
நக்சலைட்டுகளிடம் பயம்.!
இன்னும் எதற்ககெல்லாம் பயந்து கொண்டு எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் இருக்கப் போகிறீர்களோ?
எது எப்படியானாலும் பொருளாதாரத்தில் நாம் முன்னேறிக் கொண்டுதான் இருப்போம் என்பது எல்லாருக்கும் தெரியும்! அதை காங்கிரஸ் வகையறாக்கள் நன்கு புரிந்து கொண்டு இஷ்டப்படி ஆள்கிறார்கள்!
கடைசியில் இந்தியாவை நாங்கள் தான் வல்லரசாக்கினோம் என்று சொல்லாமலிருந்தால் சரி!



1 கருத்துரைகள்:
சூப்பர் சார் தொடர்ந்து எழுதுங்க
கருத்துரையிடுக