முதல் திருட்டு! (கொஞ்சம் மொக்கை தான் !)
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பஸ்சின் முன் படிக்கட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு ஸ்டாப்பிலும் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான பெண் ஒரு கையில் செல்லும் ஒரு கையில் கொஞ்சம் பணமுமாக பேருந்தில் ஏறினாள்!
அவள் கையிலிருந்த ஒரு சில ரூபாய் நோட்டுகளிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு என் முன்னே விழுந்தது! அதை நான் எடுத்து அவளி(ரி)டம் தரும் முன் அவள் சிறிது நகர்ந்து முன்னே சென்று விட்டாள்.
நான் எடுத்ததை யாரும் கவனிக்கவில்லை என்று எனக்கு தெரியும்.
இப்போதே கொடுத்துவிடலாமா இல்லை அப்புறம் கொடுக்கலாமா?
அந்த ஐம்பது ரூபாய் தாள் இப்போது என் பாக்கெட்டில்!!!!!
அவள் இறங்கும் போது கொடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.
ஆனால் நேரம் ஆக ஆக என் மனதில் ஒரு சிறிய தடுமாற்றம்.
இந்த ஐம்பது ரூபாய் நோட்டை திரும்ப கொடுத்துத்தான் ஆக வேண்டுமா?
இதுவே இரு ஆண்டுகளுக்கு முன்பு என்றால் அது நூறு ரூபாய் நோட்டாக இருந்தாலும் உடனே கொடுத்திருப்பேன்.
என்ன ஆச்சு எனக்கு....!
ஏதேதோ யோசித்துப் பார்த்தேன்!
கடைசியில்தான் அது தெரிந்தது....
விலைவாசியேற்றம் என்னுள் இரண்டு ஆண்டுகளில் இத்தகைய தாக்கத்தை ஏற்ப்படுத்தி விட்டது....!
இப்போது ஒரு ஐம்பது ரூபாய் நோட்டுக்காக என் மனசாட்சியுடன் சண்டை பிடிக்கத் தயாராகி விட்டேன்.
எனக்கே என் மேல் கோவம் வந்தது....
ஆனால் நான் என்ன செய்ய முடியும்!
ஆனால் அவள் பணத்தைத் தவறவிட்டது போன்று தெரியவில்லை.....!
இருந்தாலும் என் மனசாட்சி என்னை முறைத்தது....
சரி பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துவிடத் தீர்மானித்தேன்.
அவள் இறங்கும் பஸ் ஸ்டாப் வந்தது.
என் அருகே வந்து நின்ற அவளிடம் "is it yours?" என்றேன்.
"sorry! t s nt mine!" என்றாள்.
அவளது உதட்டசைவிற்கும் அந்த வார்த்தை என் காதில் விழுவதற்கும் இடைப்பட்ட இடைவெளி கொஞ்சம் அதிகம் தான்! (அவள் அவ்வளவு அழகாய் இருந்தாள்!)
சொல்லி விட்டு அவள் போய்க்கொண்டிருந்தாள்.....!
ஆனால் இப்போதும் என் மனசாட்சி என்னும் கோர்ட்டில் நான் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருந்தேன்! (அவள் தான் தன்னுடையது இல்லை என்று சொல்லி விட்டாளே! இன்னும் நான் ஏன் குற்றவாளி என்று தெரிய வேண்டுமா? கீழே உள்ள வெற்றிடத்தை select செய்து படித்துக் கொள்ளவும்.)
என்னை நானே திருப்திப் படுத்த.....!!!
9 கருத்துரைகள்:
அந்த சைகாலஜிகல் டச் எனக்குப் பிடித்திருந்தது.. எதிர்பாராத விதமாய் முடித்தது..
nijamma ithu:(
@ ரிஷபன் said...
//*அந்த சைகாலஜிகல் டச் எனக்குப் பிடித்திருந்தது.. எதிர்பாராத விதமாய் முடித்தது..*//
REPLY:: நன்றியோ நன்றி...!
@ padma said...
//*nijamma ithu:(*//
REPLY:: ஐயோ!!! சும்மாங்க......
எல்லாம் பிரமை.., அவ்வளவுதான்..,
ஹா ஹா ஹா :)))) குறும்பு !
மிகவும் அருமை வாழ்த்துக்கள் !
ஹா..ஹா.ஹா.. முடியல..
கொஞ்சம் இல்லை.. மரண மொக்கை.. ஏன் இப்படி??
//நாம் தினமும் கிடைக்கும் கொஞ்சம் ஒய்வு நேரங்களில் கூட ஒய்வு எடுத்து கொள்ளாமல் உடலை வருத்தி கொண்டு நம்மால் முடிந்த வரை சிறப்பான பதிவை எழுதுகிறோம். இதை நம் நண்பர்களும் வாசகர்களும் படித்து மகிழ்வார்கள். ஆனால் சில ஈன பிறவிகள் நாம் சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டு நோகாமல் நோம்பு கும்பிட்டு வந்தார்கள் ஆனால் இனிமேல் அப்படி எதுவும் அவர்களால் பண்ண முடியாது உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்தை கூட அவன் காப்பி செய்ய முடியாது.//
கருத்துரையிடுக