உயர் கல்வி/தமிழகம்...
இந்தியா/தமிழ்நாடு கல்லூரிகள்:
  
      இங்கு click செய்து Top universities in world 2009 ஐ தெரிந்து கொள்ளுங்கள்.
                  

         தேட வேண்டாம்! 
   இந்தியா இந்த வரிசையில் இல்லை.

    இன்னும் 15 வருடங்களில் உலகின் No 1 நாடு இந்தியா தானாம்! பலரும் சொல்கிறார்கள்! ஏன் நானே கூட ஒரு பதிவு எழுதியிறுக்கிறேன்.

      ஆனால் இதெல்லாம் பொருளாதரத்தில் மட்டுமே! மேலே உள்ள பட்டியலில் நாம் சேர இன்னும் 15 வருடங்கள் போதுமென எனக்குத் தோன்றவில்லை.
      தமிழ்நாட்டின் தற்போதைய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 350.
     இதில் இன்னும் 100 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளனவாம்.
     இங்கு மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பொறியாளர்கள் உருவாகிறார்கள்.
     இப்போதே திருப்பூரில் வேலைக்கு ஆள் எடுத்தால் வரிசையில் சில எஞ்சினியர்களைப் பார்க்க முடிகிறது. இன்னும் போகப் போக என்ன ஆகுமோ?
  இப்போது துவங்கப்படும் கல்லூரிகள் எல்லாம் IIT களோ IIM களோ இல்லை. கருப்புப் பண முதலைகள் அதை வெளுப்பதற்காக துவங்கும் மேலுமொரு நிறுவனம்... அவ்வளவே!
  அய்யா! அரசியல்வாதிகளே! உங்கள் பணத்தைப் போட்டு சுவிட்சர்லாந்தை வேண்டுமானால் இன்னமும் வளப்படுத்துங்கள். ஆனால் இந்த நாட்டைக் கெடுக்க தரக்குறைவான கல்வி நிறுவனங்களைத் துவங்காதீர்கள்.
செக்
நுழைவுத்தேர்வு:
    
           நுழைவுத்தேர்வு இல்லாவிட்டால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவார்களாம்! ஏன்?

   கிராமப்புறப் பள்ளிகளில் போதிய வசதியும் கல்வித்தரமும் இல்லையாம்!
         இதற்கு கிராமப்புற பள்ளிகளை அல்லவா மேம்படுத்த வேண்டும். நுழைவுத்தேர்வை இரத்து செய்வது எந்த வகையில் ஞாயம்?
       (பிள்ளையார் தேடி குரங்கு பிடித்த கதை இது தான்!)

இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவது ஒரு புறம் இருக்கட்டும் 

இதனால் ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் இரவு பகல் பார்க்காமல் படித்து குருட்டுமனப்பாடம் செய்யும் திறமையை மாணவர்களுக்குச் சில பள்ளிகள் இப்போது போதிக்கத் துவங்கி விட்டன. 

இதனால் தான் PG, MS, PhD படிக்கும் சாதாரண கல்லூரி மாணவர்களுக்கும் IIT மாணவர்களுக்கும் இடையெ மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. நம் கல்வித்தரத்தை உலகளவு உயர்த்த நுழைவுத்தேர்வு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது!

மறுபடியும் செக்

பொதுத்தேர்வு:
    நுழைவுத்தேர்வு தான் இல்லை என்றாகிவிட்ட்து. சரி பொதுத் தேர்வாவது கடினமாக இருக்க வேண்டாமா? அதுவும் இல்லை
படத்தைப் பெரிது படுத்தி பார்க்கவும்.


200/200 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையைப் பாருங்கள்...
இவர்களில் 199/200 எடுத்த மாணவனை விட 200/200 எடுத்த மாணவன் எந்த வகையில் திறமையானன் என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இனிமேல் 200/200 எடுத்தால் மட்டும் நீங்கள் விரும்பும் பாடப் பிரிவு விரும்பிய கல்லூரியில் கிடைக்கும் என்று நிச்சையம் இல்லை.

இதிலும் நம் கல்விமுறை சரியில்லை தான்....! 

மீண்டும் ஒரு செக்

இட ஒதுக்கீடு:

   இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.
1950, 60 களில் சட்டம் உருவாக்கப் பட்டபோது இருந்த நிலை வேறு; இப்போதைய நிலை வேறு! இன்னுமா இந்த இட ஒதுக்கீட்டைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்?
 
  அதுவும் கல்வித்துறையில் கூட?

       இட ஒதுக்கீட்டால் 190 கட் ஆப் எடுக்கும் ஒரு பிரிவு மாணவனுக்குக் கிடைக்கும் ஒரு பாடப் பிரிவு 198 கட் ஆப் எடுக்கும் ஒரு மாணவனுக்குக் கிடைப்பதில்லை.
 
  அப்புறம் படித்தவனுக்கு என்ன மரியாதை?

      இட ஒதுக்கீட்டால் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு சமூகம் முன்னுக்கு வருமாம்....!!!
         
     மண்ணாங்கட்டி....!
நாம் இருப்பது 1947 இல் இல்லை. 2010 இல்...

இட ஒதுக்கீடு முழுவதும் இப்போது அரசியல் ஆக்கப் பட்டுவிட்டது...!

         ஒரு சமூகம் கல்வியில் பின் தங்கியிருந்தால் நல்ல தரமான கல்வியை அளிக்க முயலுங்கள்...! பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் கல்வியை இலவசமாக்க் கொடுங்கள்...! (கலர் டிவி இலவசமாக கிடைக்கும் போது கல்வி கிடைக்கக் கூடாதா?)
       இதை விட்டுவிட்டு இட ஒதுக்கீட்டை அளித்து அளித்து அது இப்போது ஒரு வியாதி ஆகி விட்டது....!
      (தற்போது இந்தப் பகுதியில் ஒரு பலமிக்க(?) கட்சி ஒரு குறிப்பிட்ட மக்களை மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக அறிவிக்க வேண்டி கூட்டணி பேரம் பேசி வருகிறதாம்!)

     ஆக இப்படியே நாம் இருந்தோமானால் Top universities in world 2025 பட்டியலிலும் நம் நாட்டை நாம் தேடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

        இதில் இப்போது புதிதாக பொறியியலை(ENGINEERING) தமிழில் கொண்டுவரப் போகிறார்களாம்....! என் தாய் மொழிப் பற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்திவிட்டு கூறினால் எனக்கு இதிலும் உடன்பாடு இல்லை...!
    
   (பதிவின் கருத்து பிடிக்காவிட்டால் காரணத்துடன் பின்னூட்டமிடலாம்!)

30 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

ராம்.. அந்த list நல்லா பாடம் சொல்லி தர்ற list-ஆ இருக்கும்.. நீங்க நல்லா fees வாங்குற list பாருங்க.. இந்தியா first இடத்துல இருக்கும்.. இது கூட தெரியாத பிள்ளையா இருக்கீங்க ராம்.. ஐயோ ஐயோ.. good post ram.. ஆனா யார் இதெல்லாம் யோசிக்க போறாங்க.. ?

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ திவ்யாஹரி:

ஆமாம்.... நான் கூட அதிகம் பீஸ் வாங்குற காலேஜ் பத்தி எழுதலாம்னு இருக்கேன்...

திவ்யாஹரி சொன்னது…

do it first my friend.

வெற்றி சொன்னது…

//ஆமாம்.... நான் கூட அதிகம் பீஸ் வாங்குற காலேஜ் பத்தி எழுதலாம்னு இருக்கேன்...//

எதுவாக இருந்தாலும் படிப்பு முடிந்த பின் செய்யுங்கள்..தேவையில்லாத பிரச்சனைகள் வந்தாலும் வரும் !

ரிஷபன் சொன்னது…

என் தாய் மொழிப் பற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்திவிட்டு கூறினால் எனக்கு இதிலும் உடன்பாடு இல்லை...!
இப்படி வெளிப்படையா பேசினா.. அதிலயும் பிரச்னை பண்ண ஆட்கள் ரெடி..

sakthi சொன்னது…

Long gap ????????

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//இவர்களில் 199/200 எடுத்த மாணவனை விட 200/200 எடுத்த மாணவன் எந்த வகையில் திறமையானன் என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.//


//இதை விட்டுவிட்டு இட ஒதுக்கீட்டை அளித்து அளித்து அது இப்போது ஒரு வியாதி ஆகி விட்டது....!//

மேற்கண்ட இரண்டு வரிகளும் நீங்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.

இட ஒதுக்கீடு காரணமாக வாய்ப்பு குறைக்கப் பட்ட மறுக்கப் பட்ட சமுதாயத்திலிருந்து வரும் மாணவர்களில் தகுதி உள்ளவர்களைத்தான் தேர்தெடுக்கிறார்கள். சுத்தமாக தேர்ச்சி அடையாதவர்கள அல்ல, அந்த மாணவர்களின் மதிப்பெண் நீங்கள் கூறியது போல முன்னேறிய சமுதாய மாணவர்ன் வாங்கிய மதிப்பெண்ணை விட ஒன்று அல்லது இரண்டு குறைந்து இருக்கலாம். அதனால் அவனது திறமை எந்த அளவில் குறைந்து போய்விட்டது என்று நீங்களே கேட்கிறீர்கள். ஆனால் அதனால்தான் கல்வியின் தரம், கல்லூரியின் கற்பிக்கும் திறன் எப்படிக் குறைய முடியும்?

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

// (தற்போது இந்தப் பகுதியில் ஒரு பலமிக்க(?) கட்சி ஒரு குறிப்பிட்ட மக்களை மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக அறிவிக்க வேண்டி கூட்டணி பேரம் பேசி வருகிறதாம்!)//

இது போன்ற பேரங்கள் கண்டிப்பாக தடுக்கப் பட வேண்டியவை. இவைதான் இட ஒதுக்கீட்டை கேலிப் பொருள் ஆக்குவன..,

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//இட ஒதுக்கீட்டால் 190 கட் ஆப் எடுக்கும் ஒரு பிரிவு மாணவனுக்குக் கிடைக்கும் ஒரு பாடப் பிரிவு 198 கட் ஆப் எடுக்கும் ஒரு மாணவனுக்குக் கிடைப்பதில்லை.//

யோசித்துப் பாருங்கள். அனைத்து மாணவர்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி இருக்கிறதா?

ஒருவன் சமதளத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறான். ஒருவன் பள்ளத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறான். பள்ளத்திலிருந்து மேலே வர முயற்சிப்பவனுக்கு உதவுவது தவறா?

முன்னேறிய சமுதாய மாணவனுக்கு படிப்பதற்கு இருக்கும் சூழல் வேறு. மறுக்கப் பட்ட சூழல் மாணவனின் நிலை வேறு.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//ஆக இப்படியே நாம் இருந்தோமானால் Top universities in world 2025 பட்டியலிலும் நம் நாட்டை நாம் தேடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்...//

டாப் ரேன்க் என்பது ஆசிரியர்களால் வருவதா? மாணவர்களால் வருவதா? அல்லது மிக முக்கியப் பங்காற்றுவது யார்?

ஆசிரியர்கள் என்றால் இப்போது பெரும்பாண்மையாய் இருப்பவர்கள் யார்? மாணவர்கள் என்றால் இந்திய அளவில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் யார்?

(இந்தக் கேள்வி நீங்கள் கல்லூரியின் தரத்திற்கும் இட ஒதுக்கீட்டுக்கும் முடிச்சுப் போட்டதால் வந்தது?)

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் கல்வியை இலவசமாக்க் கொடுங்கள்..//

நல்ல விஷயம். வரவேற்க வேண்டிய விஷயம். சமுதாயத்தில் மறுக்கப் பட்ட நிலையில் இருப்பவர்கள் அவர்களை விட முதலில் கவனம் செலுத்தப் பட வேண்டியவர்கள். சமுதாய ஏற்றத்தாழ்வு என்பது முதலில்சரி செய்யப் பட வேண்டிய விஷயம்.ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயமெ விரைந்து வளர்ச்சி காண முடியும்.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//இதை விட்டுவிட்டு இட ஒதுக்கீட்டை அளித்து அளித்து அது இப்போது ஒரு வியாதி ஆகி விட்டது....!//

தாயார் உணவு கொடுக்கும் கொடுக்கும் நேரத்தில் தாயாரிடன் உணவை எதிர்பார்ப்பது தவறல்ல்லவே.. இன்னும் சொல்லப் போனால் கூடுதல் உணவு கேட்பதும் தவறல்லவே. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் திட்டமிடுவது தாயாரின் கடமை.

அதே நேரத்தில் குழந்தைகளின் பசியால்தான் குடும்பம் சீரழிவதாகச் சொல்பவர்களை தவிர்ப்பதும் தாயாரின் கடமை. அப்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி சீராக அமையும்.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.//

உண்மையில் இதுதான் உங்கள் பிரச்சனை.

இந்தத் தளத்தில் கொஞ்ச நேரம் உலாவி வாருங்கள்.


பிறகு அதைப் பற்றிப் பேசலாம்,

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//இதனால் ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் இரவு பகல் பார்க்காமல் படித்து குருட்டுமனப்பாடம் செய்யும் திறமையை மாணவர்களுக்குச் சில பள்ளிகள் இப்போது போதிக்கத் துவங்கி விட்டன.

//

இதற்கும் இட ஒதுக்கீடுக்கும் என்ன தொடபு?

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ வெற்றி:
எதுவாக இருந்தாலும் படிப்பு முடிந்த பின் செய்யுங்கள்..தேவையில்லாத பிரச்சனைகள் வந்தாலும் வரும் !

reply: கல்லூரி நிர்வாகத்தை நாங்கள் எப்போதோ எதிர்க்க ஆரம்பித்து விட்டோம்.... இது ஒன்றும் புதிதல்ல... உங்கள் அன்புக்கு நன்றி!

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ ரிஷபன்:
//என் தாய் மொழிப் பற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்திவிட்டு கூறினால் எனக்கு இதிலும் உடன்பாடு இல்லை...!//
இப்படி வெளிப்படையா பேசினா.. அதிலயும் பிரச்னை பண்ண ஆட்கள் ரெடி..


reply: ஆமாம் உண்மை தான் ரிஷபன்! ஆனால் என் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்! உண்மையில் எனக்கு அத்திட்டம் பிடிக்கவில்லை.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ sakthi said...

Long gap ????????

reply:: இன்னும் மூன்று மாதத்திற்குப் பின் என் அனுபவங்களை எழுதுவேன் சக்தி! Long gap ???????? ஏன் என்று அப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

BONIFACE சொன்னது…

என் கல்லூரி ஆசிரியர் நேற்று என்னிடம் சொன்னது""நான் படிக்கும் வரை எனக்கு எதுவுமே தெரியாதுபா இங்கவந்துதான் தெரிஞ்சுகிட்டேன்""
எப்படி இருக்கு கல்லூரிகல்நு பாருங்க....

BONIFACE சொன்னது…

தகுதியற்ற கல்லூரிகள் பொறியியல் படித கூலி ஆட்களை உருவாக்குகிரார்கள்,,,,,

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ SUREஷ் (பழனியிலிருந்து) said...

reply: முதலில் என் மனம் புண்படாமல் என் கருத்துக்கு எதிராக பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி!

//*மேற்கண்ட இரண்டு வரிகளும் நீங்கள் எழுதியது என்று நினைக்கிறேன்.

இட ஒதுக்கீடு காரணமாக வாய்ப்பு குறைக்கப் பட்ட மறுக்கப் பட்ட சமுதாயத்திலிருந்து வரும் மாணவர்களில் தகுதி உள்ளவர்களைத்தான் தேர்தெடுக்கிறார்கள். சுத்தமாக தேர்ச்சி அடையாதவர்கள அல்ல, அந்த மாணவர்களின் மதிப்பெண் நீங்கள் கூறியது போல முன்னேறிய சமுதாய மாணவர்ன் வாங்கிய மதிப்பெண்ணை விட ஒன்று அல்லது இரண்டு குறைந்து இருக்கலாம். அதனால் அவனது திறமை எந்த அளவில் குறைந்து போய்விட்டது என்று நீங்களே கேட்கிறீர்கள். ஆனால் அதனால்தான் கல்வியின் தரம், கல்லூரியின் கற்பிக்கும் திறன் எப்படிக் குறைய முடியும்?*//

reply: நான் ஏனோ தானோ என்று பதிலளிப்பதாக நினைக்க வேண்டாம்! முதலில் இப்போதுள்ள கட்-ஆப் முறையால் 198 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் 200 எடுத்த மாணவனுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் நுழைவுத் தேர்வால் மட்டுமே திறமையான மாணவர்களை அடையாளம் காட்ட முடியும். எனவே நான் மேற்படி கூறியுள்ளது தற்போதைய முறை சரியில்லை என்பதை உணர்த்தவே தான். தவிர நுழைவுத்தேர்வு இருந்த காலத்தில் இட ஒதுக்கீட்டால் 270/300 எடுத்த மாணவனும் 285/200 எடுத்த மாணவனும் ஒரே தரத்தில் வைக்கப் படுகிறார்கள். இதனால் 270/300 எடுத்த மாணவனுக்கு வாய்ப்பு கிடைப்பதை நான் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை. ஆனால் இதனால் 284/300 எடுத்த மாணவனது வாய்ப்பு பறிபோகிறது என்பது தான் என் குமுறல்.

//*இது போன்ற பேரங்கள் கண்டிப்பாக தடுக்கப் பட வேண்டியவை. இவைதான் இட ஒதுக்கீட்டை கேலிப் பொருள் ஆக்குவன..,*//

reply: மிக்க நன்றி...

//*யோசித்துப் பாருங்கள். அனைத்து மாணவர்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி இருக்கிறதா?

ஒருவன் சமதளத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறான். ஒருவன் பள்ளத்திலிருந்து மேலே வர முயற்சிக்கிறான். பள்ளத்திலிருந்து மேலே வர முயற்சிப்பவனுக்கு உதவுவது தவறா?

முன்னேறிய சமுதாய மாணவனுக்கு படிப்பதற்கு இருக்கும் சூழல் வேறு. மறுக்கப் பட்ட சூழல் மாணவனின் நிலை வேறு.*//

reply: மிகவும் சரி... இதற்க்கு என் பதிவிலேயே பதில் உள்ளது. அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அளிப்பதற்குப் பதில் அவர்கள் கல்வித்தரத்தை முன்னேற்றப் பாடுபடாத அரசின் மேல் தான் நான் குற்றம் சுமத்துகிறேன்! அவர்களது சமூக சூழலை மாற்ற வேண்டியது ஒரு அரசின் கடமை...


reply: சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளாகியும் அவர்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் இட ஒதுக்கீட்டை மட்டுமே அரசு கொடுப்பது எனக்கு தவறாகப் படுகிறது! கலர் டிவி இலவசமாக கிடைக்கும் போது கல்வி இலவசமாக கிடைப்பதில் ஒரு தவறும் இல்லை!


//*இந்தக் கேள்வி நீங்கள் கல்லூரியின் தரத்திற்கும் இட ஒதுக்கீட்டுக்கும் முடிச்சுப் போட்டதால் வந்தது?*//

reply : இதிலுள்ள உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன்!


//* நல்ல விஷயம். வரவேற்க வேண்டிய விஷயம். சமுதாயத்தில் மறுக்கப் பட்ட நிலையில் இருப்பவர்கள் அவர்களை விட முதலில் கவனம் செலுத்தப் பட வேண்டியவர்கள். சமுதாய ஏற்றத்தாழ்வு என்பது முதலில்சரி செய்யப் பட வேண்டிய விஷயம்.ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயமெ விரைந்து வளர்ச்சி காண முடியும்.*//


reply: மிகவும் நன்றி....!

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ SUREஷ் (பழனியிலிருந்து) said...
அதே நேரத்தில் குழந்தைகளின் பசியால்தான் குடும்பம் சீரழிவதாகச் சொல்பவர்களை தவிர்ப்பதும் தாயாரின் கடமை. அப்போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி சீராக அமையும்.*//


reply: உண்மையில் அனைவரது பசியைப் போக்குவதாக இருந்தால் நாம் அதை வரவேற்கலாம். ஆனால் இப்போதுள்ள கல்விமுறைப்படி ஒரு குழந்தையின் உணவைப் பறித்து மற்றொரு குழந்தைக்கு உணவு பரிமாறுவது போல் உள்ளது. இதில் அனைவருக்கும் சம உரிமை கிடைத்தால் மகிழ்ச்சியே!


//*//இதனால் ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் இரவு பகல் பார்க்காமல் படித்து குருட்டுமனப்பாடம் செய்யும் திறமையை மாணவர்களுக்குச் சில பள்ளிகள் இப்போது போதிக்கத் துவங்கி விட்டன.


இதற்கும் இட ஒதுக்கீடுக்கும் என்ன தொடபு?*//


reply: மன்னிக்கவும்.....! இது "நுழைவுத்தேர்வு" என்ற தலைப்பின் கீழ் நான் எழுதியுள்ளேன். இட ஒதுக்கீட்டிற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நுழைவுத்தேர்வு இல்லாததால் மாணவர்களது சிந்திக்கும் திறன் குறைந்து வருவது உண்மையே!


//இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.//

உண்மையில் இதுதான் உங்கள் பிரச்சனை.


reply: இதிலும் உண்மை உள்ளதாக எனக்கும் தோன்றுகிறது. ஆனால் இதனை கல்வித்துறையில் நான் எதிர்ப்பதாகவும் எழுதியுள்ளேன்.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@BONIFACE said...

//*என் கல்லூரி ஆசிரியர் நேற்று என்னிடம் சொன்னது""நான் படிக்கும் வரை எனக்கு எதுவுமே தெரியாதுபா இங்கவந்துதான் தெரிஞ்சுகிட்டேன்""
எப்படி இருக்கு கல்லூரிகல்நு பாருங்க....*//

reply: ஆமாம்! மாணவர்களுக்குத் தெரியாத எத்தனையோ குளறுபடிகள் இன்னமும் இருக்கின்றன!

//*தகுதியற்ற கல்லூரிகள் பொறியியல் படித கூலி ஆட்களை உருவாக்குகிரார்கள்,,,,,*//


reply: 100% உண்மை....

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//ஆனால் இப்போதுள்ள கல்விமுறைப்படி ஒரு குழந்தையின் உணவைப் பறித்து மற்றொரு குழந்தைக்கு உணவு பரிமாறுவது போல் உள்ளது.//


நலிவடைந்த குழந்தைக்கு சற்று சத்தான உணவு, மற்ற குழந்தைகளுக்கு சராசரியான உணவு.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//முதலில் இப்போதுள்ள கட்-ஆப் முறையால் 198 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் 200 எடுத்த மாணவனுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் நுழைவுத் தேர்வால் மட்டுமே திறமையான மாணவர்களை அடையாளம் காட்ட முடியும். //


நுழைவுத்தேர்வில் 60 வாங்கியவருக்கும், 63 வாங்கியவருக்கும் வித்தியாசம் உள்ளதா தல?

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//நுழைவுத்தேர்வு இருந்த காலத்தில் இட ஒதுக்கீட்டால் 270/300 எடுத்த மாணவனும் 285/200 எடுத்த மாணவனும் ஒரே தரத்தில் வைக்கப் படுகிறார்கள்.//


எல்லாப் போட்டித்தேர்வுகளிலும் ஏறக்குறைய அதே நிலைதான் உள்ளது. தேர்ச்சியடைந்த மாணவர்களில் முதல் மதிப்பெண் எடுத்தவரும் தேர்ச்சி அடைந்தவர்களில் கடைசி மதிப்பெண் எடுத்தவரும் சமநிலையில் வைக்கப் படுகிறார்கள்.

ஒரே வித்தியாசம் கலந்தாய்வில் முன்னவருக்கு அதிக வாய்ப்புகள் அவ்வளவே..,

இது இட ஒதுக்கீடு இல்லாத இடங்களில் நடக்கும் போட்டித்தேர்வுகளுக்கும் பொருந்தும்.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//ஆனால் இதனால் 284/300 எடுத்த மாணவனது வாய்ப்பு பறிபோகிறது என்பது தான் என் குமுறல்.//

கட் ஆஃப் 285 எனும்போது 284க்கு வாய்ப்பு பறிபோவது என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அளிப்பதற்குப் பதில் அவர்கள் கல்வித்தரத்தை முன்னேற்றப் பாடுபடாத அரசின் மேல் தான் நான் குற்றம் சுமத்துகிறேன்! //

வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதில் இட ஒதுக்கீடுதான் இருப்பதில் சிறந்த வழி என்பது என்கருத்து.

படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி சூழல் அமைந்தால் கண்டிப்பாக உரிமை மறுக்கப் படும் மாணவர்கள் மற்றவர்களுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என்பது அவர்களின் கல்வியை உயர்த்துவது மூலமே நடத்த முடியும். எனவே கல்விச்சாலையே முதல் படியாக அமைய முடியும்

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ SUREஷ் (பழனியிலிருந்து) said...

reply: ஆகட்டும்... நானும் இடஒதுக்கீட்டில் தான் கல்லூரியில் படித்து scholarship பெறுகிறேன். நான் இட ஒதுக்கீட்டில் படிப்பவர்களை எதுவுமே கூறவில்லை. இன்னும் இட ஒதுக்கீடு பெறுமாறு மக்களை வைத்திருக்கும் அரசை தான் குற்றம் கூறுகிறேன். சிரமம் பாராமல் பின்னூட்டமிட்டதற்கு நன்றி!

nallathambi சொன்னது…

Hi brother,,

ungal karuthu unmai yaaha illai,,,

ida othukkeedum,,tamil vazhi engineeringum miha miha important,,,,,,

innum neengal athai patriya arivai valarthuk kondaal naattukku nallathu,,,,,

Nallathambi
nallathambi002@gmail.com

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ nallathambi said...

REPLY:: வருகைக்கு நன்றி.....! நான் இதற்க்கு உங்களுடன் தனிப்பட்ட முறையில் விவாதம் செய்து கொள்கிறேன் நண்பரே! எனது முகவரி! s.ramkumar.be@gmail.com

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets