என் முதல் கவிதை.....

நான் வேலையில் இருந்து ஓய்வு பெறப்போகும் நாள்;
கணிணியுடன் மணியைப் பார்க்காமல் money க்காக போராடிய நிமிடங்கள்;

சிற்றுண்டி உண்ணாத காலை வேளைகள்;

மூச்சு விட நேரமற்ற மதிய உணவு இடைவேளைகள்;

Tea time ஐ எதிபார்த்து அமர்ந்திருந்த தருணங்கள்;

பணி உயர்விற்கான போராட்டங்கள்;

Loss of pay யின் வலிகளைவிட மேலதிகாரி தரும் ரணங்கள்;

அறுந்து போன wire களுடனும், உடைந்து போன நாற்காலிகளுடன், அழுக்கடைந்த காருடனான வாரத்தின் ஒற்றை விடுமுறை நாட்கள்;

மேலதிகாரியின் வசைக்கும், பாராட்டுக்கும் இடையே பணிபுரிந்த நாட்கள்;

தூங்காத இரவுகள்;


இன்றே கடைசி நாள்;

எல்லாம் முடிந்த்து;

முதன்முதலாக நிம்மதியாக சுவாசிக்கிறேன்.....!

கண்ணாடித் திரையில்,

நரை விழுந்த தலையும்,

திரை விழுந்த கண்ணும்,

பிதுங்கிய கன்ன்ங்களுடன்,

தொப்பை வயிறுடன்

இன்று என் பிம்பம் என்னை ஏளனப்புன்னகை செய்கிறது...!
அலைபேசியின் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன்;

இரவு மணி 12.01

Happy birthday to u Ram என்றது என் தோழியின் குரல்;

என் 21ம் பிறந்த நாளின் முதல் சில மணித்துளிகள் கவலையுடன் கரைய

ஆரம்பித்தன.....!

.............

20 கருத்துகள்:

ஹாலிவுட் பாலா சொன்னது…

:) :) - வாழ்த்து சொல்லி வரவேற்றா... இன்னும் நிறைய கவிதை எழுதுவீங்களா ராம்? :)

பலா பட்டறை சொன்னது…

::)))

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

ஹாலிவுட் பாலா -->

:) /*:) - வாழ்த்து சொல்லி வரவேற்றா... இன்னும் நிறைய கவிதை எழுதுவீங்களா ராம்? :)*/

அவ்வ்வ்வ்வளளளளவு மோமோமோசமாமாமாவாவா... இருக்க்க்குதுதுதுது....

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

நீங்கள் பயப்படும்படி இல்லை. இத்தோடு முடித்துக் கொள்ளப்படும். (horror movie பாத்த effectல comment வருதே!!!1)

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

நன்றி பலா பட்டறை

புலவன் புலிகேசி சொன்னது…

ம் நல்லா இருக்கு

அண்ணாமலையான் சொன்னது…

நமக்கு முன்னாடியே எச்சரிக்கைலாம் வந்துடுச்சா? பேஷ் பேஷ்..

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ புலவன் புலிகேசி said...

/*ம் நல்லா இருக்கு*/
கொஞ்சம் ஆறுதல் நீங்கதான்...


................................................

@ அண்ணாமலையான் said...
/*நமக்கு முன்னாடியே எச்சரிக்கைலாம் வந்துடுச்சா? பேஷ் பேஷ்..*/

அப்போ நீங்களும் பாராட்ட வரல...!

ரிஷபன் சொன்னது…

வாங்க.. கவிதையில கலக்குங்க..
கணிணியுடன் மணியைப் பார்க்காமல் money க்காக போராடிய நிமிடங்கள்..யதார்த்த படப் பிடிப்பு

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ ரிஷபன்:
/*வாங்க.. கவிதையில கலக்குங்க..
கணிணியுடன் மணியைப் பார்க்காமல் money க்காக போராடிய நிமிடங்கள்..யதார்த்த படப் பிடிப்பு*/


அப்பாடா..! எந்த வரியவாவது யாராவது பாராட்டமாட்டார்களா என இருந்தேன்...

மிக்க நன்றி ரிஷபன்.

திவ்யாஹரி சொன்னது…

நல்லா இருக்கு ராம்..
குறிப்பாக..

"கணிணியுடன் மணியைப் பார்க்காமல் money க்காக போராடிய நிமிடங்கள்.." real-ஆ எழுதிருக்கீங்க..
எங்கள் முதல் கவிதைக்கு உங்கள் பதிவு எவ்வளவோ மேல். தொடர்ந்து எழுதுங்கள்..

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

@ திவ்யாஹரி said...
/*எங்கள் முதல் கவிதைக்கு உங்கள் பதிவு எவ்வளவோ மேல்.*/

ஆக நான் ஒரு பதிவ ஒண்ணும் கீழ் ஒண்ணா எழுதிருக்கேன். அப்படிதானே!

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

பாராட்டிற்கு நன்றி திவ்யா...

திவ்யாஹரி சொன்னது…

எப்படி சொன்னாலும் புரிஞ்சிக்கிறீங்க.. நீங்க ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்க ராம்..

sakthi சொன்னது…

நல்லா இருக்கு.தொடர்ந்து எழுதுங்க

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

மிக்க நன்றி சக்தி...

நிலாமதி சொன்னது…

உங்கள் முயற்சிக்கு பாராட்டு .மேலும் முயற்சி செய்து ....பல கவிதைகள் படைக்க் வாழ்த்துக்கள்.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி நிலா மதி...

புலவன் புலிகேசி சொன்னது…

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

கோமதி அரசு சொன்னது…

கனவு கவிதை அருமை.

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets