உயர் கல்வி/தமிழகம்...

· 30 கருத்துகள்
இந்தியா/தமிழ்நாடு கல்லூரிகள்:
  
      இங்கு click செய்து Top universities in world 2009 ஐ தெரிந்து கொள்ளுங்கள்.
                  

         தேட வேண்டாம்! 
   இந்தியா இந்த வரிசையில் இல்லை.

    இன்னும் 15 வருடங்களில் உலகின் No 1 நாடு இந்தியா தானாம்! பலரும் சொல்கிறார்கள்! ஏன் நானே கூட ஒரு பதிவு எழுதியிறுக்கிறேன்.

      ஆனால் இதெல்லாம் பொருளாதரத்தில் மட்டுமே! மேலே உள்ள பட்டியலில் நாம் சேர இன்னும் 15 வருடங்கள் போதுமென எனக்குத் தோன்றவில்லை.
      தமிழ்நாட்டின் தற்போதைய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா? 350.
     இதில் இன்னும் 100 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளனவாம்.
     இங்கு மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பொறியாளர்கள் உருவாகிறார்கள்.
     இப்போதே திருப்பூரில் வேலைக்கு ஆள் எடுத்தால் வரிசையில் சில எஞ்சினியர்களைப் பார்க்க முடிகிறது. இன்னும் போகப் போக என்ன ஆகுமோ?
  இப்போது துவங்கப்படும் கல்லூரிகள் எல்லாம் IIT களோ IIM களோ இல்லை. கருப்புப் பண முதலைகள் அதை வெளுப்பதற்காக துவங்கும் மேலுமொரு நிறுவனம்... அவ்வளவே!
  அய்யா! அரசியல்வாதிகளே! உங்கள் பணத்தைப் போட்டு சுவிட்சர்லாந்தை வேண்டுமானால் இன்னமும் வளப்படுத்துங்கள். ஆனால் இந்த நாட்டைக் கெடுக்க தரக்குறைவான கல்வி நிறுவனங்களைத் துவங்காதீர்கள்.
செக்
நுழைவுத்தேர்வு:
    
           நுழைவுத்தேர்வு இல்லாவிட்டால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவார்களாம்! ஏன்?

   கிராமப்புறப் பள்ளிகளில் போதிய வசதியும் கல்வித்தரமும் இல்லையாம்!
         இதற்கு கிராமப்புற பள்ளிகளை அல்லவா மேம்படுத்த வேண்டும். நுழைவுத்தேர்வை இரத்து செய்வது எந்த வகையில் ஞாயம்?
       (பிள்ளையார் தேடி குரங்கு பிடித்த கதை இது தான்!)

இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவது ஒரு புறம் இருக்கட்டும் 

இதனால் ஒரே புத்தகத்தை இரண்டு வருடம் இரவு பகல் பார்க்காமல் படித்து குருட்டுமனப்பாடம் செய்யும் திறமையை மாணவர்களுக்குச் சில பள்ளிகள் இப்போது போதிக்கத் துவங்கி விட்டன. 

இதனால் தான் PG, MS, PhD படிக்கும் சாதாரண கல்லூரி மாணவர்களுக்கும் IIT மாணவர்களுக்கும் இடையெ மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. நம் கல்வித்தரத்தை உலகளவு உயர்த்த நுழைவுத்தேர்வு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது!

மறுபடியும் செக்

பொதுத்தேர்வு:
    நுழைவுத்தேர்வு தான் இல்லை என்றாகிவிட்ட்து. சரி பொதுத் தேர்வாவது கடினமாக இருக்க வேண்டாமா? அதுவும் இல்லை
படத்தைப் பெரிது படுத்தி பார்க்கவும்.


200/200 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையைப் பாருங்கள்...
இவர்களில் 199/200 எடுத்த மாணவனை விட 200/200 எடுத்த மாணவன் எந்த வகையில் திறமையானன் என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இனிமேல் 200/200 எடுத்தால் மட்டும் நீங்கள் விரும்பும் பாடப் பிரிவு விரும்பிய கல்லூரியில் கிடைக்கும் என்று நிச்சையம் இல்லை.

இதிலும் நம் கல்விமுறை சரியில்லை தான்....! 

மீண்டும் ஒரு செக்

இட ஒதுக்கீடு:

   இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் இன்னும் எனக்கு விளங்கவில்லை.
1950, 60 களில் சட்டம் உருவாக்கப் பட்டபோது இருந்த நிலை வேறு; இப்போதைய நிலை வேறு! இன்னுமா இந்த இட ஒதுக்கீட்டைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்?
 
  அதுவும் கல்வித்துறையில் கூட?

       இட ஒதுக்கீட்டால் 190 கட் ஆப் எடுக்கும் ஒரு பிரிவு மாணவனுக்குக் கிடைக்கும் ஒரு பாடப் பிரிவு 198 கட் ஆப் எடுக்கும் ஒரு மாணவனுக்குக் கிடைப்பதில்லை.
 
  அப்புறம் படித்தவனுக்கு என்ன மரியாதை?

      இட ஒதுக்கீட்டால் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒரு சமூகம் முன்னுக்கு வருமாம்....!!!
         
     மண்ணாங்கட்டி....!
நாம் இருப்பது 1947 இல் இல்லை. 2010 இல்...

இட ஒதுக்கீடு முழுவதும் இப்போது அரசியல் ஆக்கப் பட்டுவிட்டது...!

         ஒரு சமூகம் கல்வியில் பின் தங்கியிருந்தால் நல்ல தரமான கல்வியை அளிக்க முயலுங்கள்...! பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் கல்வியை இலவசமாக்க் கொடுங்கள்...! (கலர் டிவி இலவசமாக கிடைக்கும் போது கல்வி கிடைக்கக் கூடாதா?)
       இதை விட்டுவிட்டு இட ஒதுக்கீட்டை அளித்து அளித்து அது இப்போது ஒரு வியாதி ஆகி விட்டது....!
      (தற்போது இந்தப் பகுதியில் ஒரு பலமிக்க(?) கட்சி ஒரு குறிப்பிட்ட மக்களை மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக அறிவிக்க வேண்டி கூட்டணி பேரம் பேசி வருகிறதாம்!)

     ஆக இப்படியே நாம் இருந்தோமானால் Top universities in world 2025 பட்டியலிலும் நம் நாட்டை நாம் தேடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்...

        இதில் இப்போது புதிதாக பொறியியலை(ENGINEERING) தமிழில் கொண்டுவரப் போகிறார்களாம்....! என் தாய் மொழிப் பற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்திவிட்டு கூறினால் எனக்கு இதிலும் உடன்பாடு இல்லை...!
    
   (பதிவின் கருத்து பிடிக்காவிட்டால் காரணத்துடன் பின்னூட்டமிடலாம்!)

என் முதல் கவிதை.....

· 20 கருத்துகள்

நான் வேலையில் இருந்து ஓய்வு பெறப்போகும் நாள்;
கணிணியுடன் மணியைப் பார்க்காமல் money க்காக போராடிய நிமிடங்கள்;

சிற்றுண்டி உண்ணாத காலை வேளைகள்;

மூச்சு விட நேரமற்ற மதிய உணவு இடைவேளைகள்;

Tea time ஐ எதிபார்த்து அமர்ந்திருந்த தருணங்கள்;

பணி உயர்விற்கான போராட்டங்கள்;

Loss of pay யின் வலிகளைவிட மேலதிகாரி தரும் ரணங்கள்;

அறுந்து போன wire களுடனும், உடைந்து போன நாற்காலிகளுடன், அழுக்கடைந்த காருடனான வாரத்தின் ஒற்றை விடுமுறை நாட்கள்;

மேலதிகாரியின் வசைக்கும், பாராட்டுக்கும் இடையே பணிபுரிந்த நாட்கள்;

தூங்காத இரவுகள்;


இன்றே கடைசி நாள்;

எல்லாம் முடிந்த்து;

முதன்முதலாக நிம்மதியாக சுவாசிக்கிறேன்.....!

கண்ணாடித் திரையில்,

நரை விழுந்த தலையும்,

திரை விழுந்த கண்ணும்,

பிதுங்கிய கன்ன்ங்களுடன்,

தொப்பை வயிறுடன்

இன்று என் பிம்பம் என்னை ஏளனப்புன்னகை செய்கிறது...!
அலைபேசியின் சத்தம் கேட்டு விழித்தெழுந்தேன்;

இரவு மணி 12.01

Happy birthday to u Ram என்றது என் தோழியின் குரல்;

என் 21ம் பிறந்த நாளின் முதல் சில மணித்துளிகள் கவலையுடன் கரைய

ஆரம்பித்தன.....!

.............

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets