ஒரு வாக்காளருக்கு நாம் ஓட்டுப் போடுவதற்க்கான காரணங்கள்:

1. உங்களுக்கு அந்த கட்சியினால் ஏதாவது ஆதாயம் கிடைத்திருக்கலாம். (இலவச நிலம், பணம், தொலைக்காட்சி,..................)

2. ஒரு சில கட்சித்தலைவர்களை மனதில் வைத்து அவர்களின் வேட்பாளர்கள் யார் என்று கூட தெரியாமல் கண்மூடித்தனமாக வாக்களிப்பது.


3. நீங்கள் ஒரு தலைவரால் கவரப்பட்டு (கருணாநிதி, ஜெயல்லிதா, வாஜ்பாய், )அவரது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

4. எப்போதோ யாருடனோ ஒன்றாக நின்று போட்டோ எடுத்ததை ஞாபகமாக வைத்து அவருக்கு வாக்களித்தல்.


5. எப்படியும் இவர் ஜெயிக்கப் போவதில்லை; பின் எதற்காக என் வாக்கை வீண் செய்ய வேண்டும் என்று நல்ல வேட்பாளரை புறக்கணித்து மற்றொருவருக்கு வாக்களிப்பது.

6. முக்கியமாக, உங்கள் ஜாதியைச் சேர்ந்த வாக்காளருக்கு வாக்களிப்பது.


7. உங்கள் எதிர்கால லாபம் கருதி முன் பின் தெரியாத வாக்காளருக்கு வாக்களிப்பது. (அரசு ஊழியர்கள் தி.மு.க விற்கும், சிறுபான்மையினர் பி.ஜெ.பி க்கு எதிராக காங்கிரஸுக்கும்)

8. பணம் வாங்குவதும் தவறில்லை, கொடுப்பதும் தவறில்லை, ஆனால் பணம் வாங்கிய கட்சிக்கு எதிராக ஓட்டளிப்பது துரோகம்; இப்படி செய்வது தவறு என்ற கிறுக்குத்தனமான கொள்கையுடன் வாக்களித்தல்.


9. எப்போதோ யாரோ ஒருவர் உங்களை ஒரு கட்சியில் சேர்த்து விட்டிருப்பார். கட்சிக்காரன் என்கிற முறையில் கட்சியின் கொள்கைபற்றி கூட தெரியாமல் அந்த கட்சிக்கு வாக்களிப்பது.

10. உங்களுக்கு பிடித்த மாநிலக் கட்சி மாற்றி மாற்றி எந்த ஒரு மத்திய கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் முட்டாள் தனமாக வாக்களிப்பது.


11. தீவிர விசுவாசத்தினால் வாக்களிப்பது. (அண்ணா, எம்.ஜி.ஆர், இன்னும் சிலர் காங்கிரஸ் கட்சி விசுவாசிகளாக வாழ்நாள் முழுவதும் வாக்களிப்பதைப் பார்திருக்கிறேன்.)

12. நான் ஓட்டுப் போட்டா மட்டும் இவர் ஜெயிக்கவா போறார் என்று நல்ல வேட்பாளரை ஒதுக்கி மற்ற ஒருவருக்கு ஓட்டளிப்பது.


13. சுயேட்சை வேட்பாளர் நல்லவராக இருந்தாலும் அவர் வென்றால் அரசு திட்டங்கள் நமது ஊருக்கு கிடைக்காது என்று அதிபுத்திசாலித்தனமாக யோசித்து வேரு ஒருவருக்கு வாக்களிப்பது.

14. இந்த வேட்பாளர் தான் என் வீடுதேடி வந்து வாக்கு கேட்டவர் என்ற நல்லெண்ண(?) அடிப்படையில் அவருக்கே வாக்களிப்பது.


15. இவற்றிற்கெல்லாம் மேலாக, என் ஓட்டு எபோதும் ஜெயிக்கும் வாக்காளருக்குத் தான் என்று வலிமையான கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பது. என் ஓட்டு எப்போதும் தோற்கக் கூடாது என்ற ஒரு பாமரத்தனமான எண்ணம்.

16. நல்லவரோ கெட்டவரோ... எங்கள் ஊரில் இவர் பெயர் பிரபலம் (அ) எங்கள் ஊரே இவரால்தான் பிரபலம் என்று வாக்களிப்பது. (பொங்கலூர் ப....., வெள்ளகோயில் சா....., வாழப்பாடி ரா....., வீரபாண்டி ஆ....., பொள்ளாச்சி ஜெ......., ஆற்காடு வீ...., திருப்பூர் சி...., பல்லடம் செ,ம....., திண்டிவனம் ரா....., திருச்சி சி.., ஸ்ரீவில்லிப்புத்தூர் தாமரை...., )


17. (இது தவிர வாக்காளரின் பெயர் என் பெயராக இருந்த்து;
அவர் எங்கள் ஊர்காரர்;
வாக்குச் சாவடியில் கண்ணைமூடி பட்டனை அழுத்தினேன்;
அந்த கட்சியின் சின்னம் எனக்கு பிடித்திருந்த்து எனவே ஓட்டு போட்டேன் என்றெல்லாம் கூட நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.)


வாக்களிக்கும் மக்களில் 99 சதவீத்த்தினர் இந்த காரணத்திற்காக மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்று நூறு சதவிகிதம் அடித்துச் சொல்ல்லாம்.

பார்த்தீர்களா நாம் ஒருவருக்கு வாக்களிப்பதற்க்கு எப்படி எல்லாம் யோசிக்கிறோம் என்று.

இப்படி யோசிக்காமல் வாக்களித்துத்தான் நாம் இன்னும் இதே நிலைமையில் இருக்கிறோம். நாம் ஆட்சியாளர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டு நம் எல்லா முன்னேற்றத்திற்கும் நாமாகவே முட்டிமோதி வளர்ந்து வருகிறோம். இன்று நீங்கள் இருக்கும் இடத்தை அடைய நீங்கள் செய்த முயற்சிகளே காரணம்.

ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஆட்சியாளரை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டால் போதும் உங்கள் முயற்சியால் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.


எவ்வளவு தான் விலைவாசி ஏறினாலும் நாம் அதை சமாளிக்கும் திறமை பெற்றிருக்கிறோம் பார்த்தீர்களா? ஆனால் நாம் என்றாவது விலைவாசியை குறைக்கும் அரசை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோமா?

எல்லாவற்றிற்கும் அரசை குறைகூற மட்டும் தயாராகும் நாம், ஒரு நல்ல அரசை அமைக்க நம் ஆட்காட்டி விரலை தயார்செய்வதில்லையே.....!


நாம் தேர்வறையில் செய்யும் தவறை விட வாக்குச்சாவடியில் செய்யும் தவாறால் தான் நம் வாழ்க்கை புரட்டிப் போடப்படுகின்றன என்று நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.


வாக்களிக்கும் நாள் என்பது நம்மைப் பொருத்தவரை ஒரு விடுமுறை நாளாக மட்டுமே தானே நாம் பார்க்கிறோம். ஆனால் அது உங்கள் எதிர்காலத்தை ஏதோ ஒரு வழியில் பாதிக்கப் போகும் நாள் என்று என்றாவது நினைத்திருக்கிறோமா?

எந்த ஒரு அரசியல்வாதியையும் உண்மையில் குறைகூற நம்மில் எவருக்குமே தகுதியில்லை. எல்லாத்தவறும் நம்மேல் தான்.

எத்தனை காலத்திற்க்குத் தான் நாம் இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கப் போகிறோமோ தெரியவில்லை.


ஒரு நாள் செய்யும் தவறால் ஆண்டாண்டு காலமாக நாம் கஷ்டப்படுவதை தடுக்க வாக்களிக்கும் போது ஒரு கண நேரமாவது யோசியுங்களேன்... ப்ளீஸ்!!!!

8 கருத்துகள்:

பின்னோக்கி சொன்னது…

கண்டிப்பா அடுத்த தடவை ஓட்டு போடுறதுக்கு முன்னாடி இந்த பதிவ இன்னொருதடவை படிச்சுட்டு போறேன்.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

மிக்க நலம். உங்களைப் போலவே அனைவரும் யோசித்தால் நல்லது பின்னோக்கி

ரிஷபன் சொன்னது…

எந்த ஒரு அரசியல்வாதியையும் உண்மையில் குறைகூற நம்மில் எவருக்குமே தகுதியில்லை. எல்லாத்தவறும் நம்மேல் தான்.
நூற்றுக்கு நூறு சரி..

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

எத்தனை காலம் தான் நாம் ஏமாந்து இருக்கப்
போகிறோமோ...உண்மையான வரிகள்!

தியாவின் பேனா சொன்னது…

அருமை!

தியாவின் பேனா சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

திவ்யாஹரி சொன்னது…

நாம் என்றாவது விலைவாசியை குறைக்கும் அரசை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோமா?

எல்லாவற்றிற்கும் அரசை குறைகூற மட்டும் தயாராகும் நாம், ஒரு நல்ல அரசை அமைக்க நம் ஆட்காட்டி விரலை தயார்செய்வதில்லையே.....!

நல்லவர்னு நம்பி ஓட்டு போட்டோம் ஒருவருக்கு ..
எந்த கட்சியிலும் சேராமல் வென்று காட்டுவேன் என்றார்...
அதே போல வென்றார்..
பின் எவ்வளவு வாங்கலாமோ வாங்கிட்டு ஒரு கச்சியில் சேர்ந்துட்டார்..
அடுத்தவன் பணத்துக்கு ஆசை படுகிற வரைக்கும்..
சில பேர் மட்டுமே பயன் பெறுவார்..
பல பேர் வேடிக்கை தான் பார்க்க வேண்டி உள்ளது நண்பரே..
நடைமுறையில் இதுவும் தானே உள்ளது?

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

அதுவும் நம்ம பழக்கப் படுத்தியதுதானே.... (இன்னும் எத்தனையோ சுயேட்சைகள் மற்ற மாநிலத்தில் மக்களுக்காக தொடர்ந்து போராடுகிறார்களே திவ்யா... உ. தா. அருணாச்சலபிரதேஷ். )

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets