மும்பை பயங்கர வாதத் தாக்குதல்...

மும்பை பயங்கர வாதத் தாக்குதல் நிகழ்ந்து 26/11 உடன் ஒருவருட காலம்

நிறைவடைகிறது. சுமார் 195 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களின் உயிரை

பழிவாங்கிய நாளின் ஓராண்டு நினைவு தினம் வரும் 26 ம் நாள் அனுஷ்டிக்கப்

படுகிறது.அன்றைய தினத்தில் idea அலைபேசி நிறுவனம் இரவு 8.36 மணியிலிருந்து

(தாக்குதல் நடந்த நேரம் ) 9.36 வரை தன் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த

தொகையையும் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த அரசுக்கு வழங்கப் போவதாக

அறிவித்துள்ளது.5 கோடி பயனாளர்களைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு சராசரியாக மற்ற

நாட்களில் ஒரு மணி நேரத்தில் 3 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும்,

இது வரும் 26 ம் தேதி மிகவும் அதிகரிக்கும் எனவும் அந்நிறுவனம்

கணக்கிட்டுள்ளது.இதற்காக இன்று (ஞாயிறு ) முதல் தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்

போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தியை மக்கள்

அனைவருக்கும் கொண்டு செல்ல நாமும் முயற்ச்சிப்போம்.26/11 அன்று ஒரு நிமிட மெளன அஞ்சலியை இறந்தவர்களுக்காகவும் ஒரு மணி

நேர வாதத்தை இருப்பவர்களுக்காகவும் செலவழிப்போம்.மீண்டுமொரு அசம்பாவிதம் நடக்காமலிருக்க நம்மாலான

உதவியைச்செய்வோம்.

4 கருத்துகள்:

Cable Sankar சொன்னது…

என்ன தான் அவர்கள் ஒரு காஸுக்காக செய்வதாய் ஐடியா செய்தாலும்.. இதனால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மைலேஜ் மிக அதிகம். அதனால் இம்மாதிரியான நிகழ்வுகளை வைத்து காசு பண்ணி, அதை தானம் செய்வது.. கொஞ்சம் இடறலாகத்தான் இருக்கிறது..

பின்னோக்கி சொன்னது…

ம்..ம்... இன்னும் ஒரு துக்க தினம் நினைவு கூற.

புலவன் புலிகேசி சொன்னது…

என்னைப் பொறுத்த வரை ஐடியா நிறுவன ஐடியா விளம்பரம் தானே தவிர தேசப்பற்றே அல்ல...

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

என்னதான் இது idea நிறுவனத்திற்கு லாபகரமாக இருந்தாலும் கொஞ்சமாவது நம் நாட்டிற்கு நல்லது நடந்தால் சரிதான்

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets