அனுபவம்....

இரண்டு வருடத்திற்கு முன் திருச்சியிலிருந்து இரவு பேருந்தில் தனியாக வந்து திருப்பூரில் இறங்கினேன்.


எங்கள் வீட்டிற்குச்செல்ல மற்றொரு டவுன் பஸ் ஏற வேண்டும்.


அதற்க்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்த்து.


இப்போது மணி இரவு இரண்டு.

அந்த பேருந்து நிலையத்தில் இன்னும் முப்பது பேர் காத்துக் கொண்டிருந்தனர்.


ஒருவர் 5 ரூபாய்க்கு காகித டம்ளரில் காபி வினியோகித்துக் கொண்டிருந்த்தார். வழக்கமாக நான் வெளியில் காபி, டீ குடிப்பது இல்லை. இரவு தூங்காத களைப்பில் எனக்கும் காபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. நானும் வாங்கி குடித்தேன்.


அந்த நள்ளிரவில் அவர் சுறு சுறுப்பாக காபி வினியோகித்துக் கொண்டிருந்தார். திருப்பூரைப் பொருத்தவரை அங்கு அனைவரும் நல்ல உழைப்பாளிகள். கடந்த 12 வருடங்களில் நான் அங்கு ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்த்த்தாக எனக்கு ஞாபகம் இல்லை.


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேருந்து வந்தது. நான் இரங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கினேன். எங்கள் வீட்டிற்குச் செல்லும் சாலையில் இறங்கி நடந்தேன். ஒரே கும்மிருட்டு. யாருமே இல்லை.


திடீரென்று பின்னால் இருந்து யாரோ அழைக்கும் சத்தம். 35 வயது நிரம்பிய ஒரு பெண் தலையில் ஒரு மூட்டையையும் கையில் ஒரு பையையும் பிடித்தவாரு வந்து கொண்டிருந்தார்.


தம்பீ இதக்கொஞ்சம் பிடிங்க என்று அந்த பையை என் கையில் திணித்தார்.


நான் வந்த பேருந்தில் தான் அந்த பெண்ணும் வந்திருக்க வேண்டும்.இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.


பின் எங்கள் இருவரிடையேயான சம்பாஷனை இதோ...

(கிட்டத்தட்ட நினைவிருக்கிறது)எங்க போகனும் தங்கம்...?


இங்க தான்; அஞ்சே நிமிஷம் போயிரலாம்; நீங்க...? (இது நான்)


புதூருக்கு கண்ணு... (2 கி.மீ தொலைவு)


ஊருக்கு போயிட்டு வர்ரீங்களா....? (இது நான்)

இல்ல சாமி... வேல முடிஞ்சு இப்ப தான் வரேன்.


காத்தால ரேஷன்ல அரிசி வாங்கிட்டு கம்பெனிக்கு எடுத்துட்டு போயிட்டேன்.

தூக்க முடியல....

பையு கனமா இருக்க கண்ணு....?


இல்ல பரவாயில்லங்க.... இப்ப தான் வேல முடிஞ்சதா? (இது நான்)


ஆமாங்கண்ணு... காலையில 9 மணிக்கு போனா இப்ப தான் விடுவாங்க...

சனிக்கிழம வரைகும் இப்படி தான்...


எனக்கு இதைக் கேட்டதும் என்னவோ போலிருந்த்து.....

நீ வேலைக்கு போரயா தம்பீ.....?


இல்ல ஸ்கூலுக்கு போரேன். (ஏனோ காலேஜ் என்று சொல்ல தோணவில்லை)

பன்னெண்டாவது...

எம் பொண்ணு பத்தாவது படிக்கிரா...

(அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை....)

இப்போது மணி 3.30 இன்னும் 5 மணி நேரத்தில் மீண்டும் அந்தப் பெண்

வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்.

அவளுடைய சம்பளம், கணவன் பற்றி கேட்கவேண்டும் போலிருந்த்து.

சம்பளம் என்ன இலட்ச ரூபாயா கொடுக்கப் போகிறார்கள்?

தினமும் 17 மணி நேரம் வேலை செய்கிறாள்; பின் யார் இருந்து என்ன பிரையோஜனம்?

சும்மா இருந்து விட்டேன்....

நான் தொடர்ந்து அவள் வீடு வரை போகலாம் என்று நினைத்தேன்.

வேணாஞ்சாமி... இள வயசு தனியா எப்படி திரும்பி வருவ என்றவாரே என்

கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்....


(அந்த பெண்ணின் முகம் கூட சரியாக ஞாபகம் இல்லை; அப்போதே மறந்து விட்டேன்; ஆனால் இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை; இதை எழுத வேண்டும் போல் இருந்த்து; எழுதி விட்டேன்)

.......................................................................................................................................................................

TELE PHONE BILL இல் ஆகஸ்ட் மாதம் 550 க்கு பதில் 1600 ரூபாயை போட்டு என் தலையில் மிளகாய் அரைத்திருந்தனர். அது தொடர்பாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் இருந்த BSNL OFFICE க்கு போயிருந்திருந்தேன்.


நான் பார்க்க வேண்டிய அதிகாரி 10 மணிக்கு பதில் 11 மணிக்கு சாவகாசமாக வந்தார்.


வந்ததும் பக்கத்து அறையிலிருந்த பெண்ணிடம் கதையளக்க சென்று விட்டார். நான் பொறுமையாக உக்கார்ந்திருந்தேன். அவர் தன் அறைக்கு வந்ததும் நான் உள்ளே நுழைந்தேன்.


அவரது மேஜை மேலிருந்த PHONE அடித்துக் கொண்டே இருந்த்து. அதை கவனிக்காமல் COMPUTER ON செய்வதும் நான் கொடுத்த லெட்டரையும் , பில்லையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.


ஒரு வாரம் ஆகும் என்றார்.


தன் மேஜை மேலிருந்த ஃபோன் நம்பரை எனக்கு கொடுத்தார்.


நான் மெதுவாக பேச ஆரம்பித்தேன்.


சிறிது நேரத்தில் அனைவரும் எங்களையே பார்க்கும் படி கார சார மாக விவாதிக்க ஆரம்பித்து விட்டோம்.


கடைசியாக அவர் தன் மொபைல் எண்ணை என்னிடம் கொடுத்ததும் தான் நான் அங்கிருந்து வெளியேறினேன்.


(அதுவும் அவர் என் கல்லூரியின் முன்னாள் மாணவராம்... அது தெரிந்த பின் தான் தன் நம்பரைக் கொடுத்தார்.)

வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.


மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தேன்.


12 messages received.


Open செய்து பார்த்தேன்.


Congratulations….

Congratulations da machi…

Congrats da…


‘ ’

‘ ’

‘ ’

‘ ’


‘ ’


‘ ’


Treat eppa da….?


கடைசியாக இப்படி ஒரு மெசேஜ்


Machaan… result came da. U ve got selected in ESSAR STEELS da…

(Campus Interview வில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது...)

5 கருத்துகள்:

ஹாலிவுட் பாலா சொன்னது…

வாழ்த்துகள்.. ராம்! :) :) ரொம்ப சந்தோஷம்!!!

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

நன்றி பாலா...

BONIFACE சொன்னது…

வாழ்த்துக்கள் ராம்,,,இனி சப்பாத்தி தான் !!!!

பின்னோக்கி சொன்னது…

வாழ்த்துக்கள். கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை அற்புதம். மகிழுங்கள்.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

நன்றி பின்னோக்கி, boni

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets