இப்போதே விழித்துக் கொள்வோம்....

ஒரு பதிவரின் கருத்துக்களுக்கு நாம் எதிர்ப்பை பின்னூட்டத்தில் தெரிவிப்போம். அல்லது எதிர்ப்பதிவை எழுதுவோம். ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக என் பதிவிற்கு எதிர்ப்பதிவை நானே எழுதுகிறேன். என் முந்தய பதிவினை இங்கு அழுத்தி படித்துக்கொள்ளுங்கள்.


இதில் நான் இன்னும் 20-30 ஆண்டுகளில் உலகம் நம் இந்தியர்கள் கைகளில் என்று எழுதியிருக்கிறேன்.


இன்று நம் நாட்டில் 110 கோடி பேர் வாழ்கிறோம்.இந்த 110 கோடி பேரும் தினமும் மூன்று வேலை சாப்பிட வேண்டும்.


110 கோடி பேருக்கும் குடிக்க தண்ணீர் வேண்டும்.
நினைத்துப் பாருங்கள்; நாம் எவ்வளவு உணவைப் பயிரிட வேண்டும்;


எவ்வளவு தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும்.


2030 இல் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட அதிகமாகக்கூட இருக்கலாம்.


அப்போது நம் மக்கள் தொகை எப்படியும் 150 கோடியைத் தொட்டு விடும்.

(இந்தியாவின் doubling time அதாவது மக்கள் இரட்டிப்பாகும் ஆண்டுகள் 28 என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2038 இல் மக்கள் தொகை 200 கோடியாகக் கூட இருக்கலாம்.)

ஆக இத்தனை பேருக்கும் நாம் உணவையும் நீரையும் வழங்க வேண்டும்.

அதற்கான முயற்ச்சிகளை நாம் இப்போதே எடுக்க வேண்டும்.


நாம் அதைச் செய்கிறோமோ என்றால் நிச்சயமாக இல்லை....


வளர்ந்த நாடுகள் எல்லாம் இப்போதே விழித்துக் கொண்டு விட்டன.


அவர்கள் இப்போதே தண்ணீரை சேமித்து விவசாயத்தை ஊக்கு விக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களது முதலீட்டை எல்லாம் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் போட்டு அதைப் பன்மடங்காக்கும் வித்தையை கற்றுக்கொண்டு விட்டார்கள்.


FII எனப்படும் foreign institutional investors கள் நம் பங்குச்சந்தையை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டார்கள். பங்குச்சந்தையில் ஏற்றமோ இரக்கமோ இப்போது அவர்கள் கையில் தான்.


multi national company களுக்கு நான் நீ என்று ஒவ்வொரு மாநிலத்தரும் போட்டி போட்டுக் கொண்டு விவசாய நிலத்தை அவர்கள் தொழிற்சாலை அமைக்க கொடுத்து வருகிறோம்.அவர்கள் வருகை நம் நாட்டை நோக்கி இருப்பதன் காரணத்தை நான் முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் அதற்க்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.அவர்கள் நாட்டில் இப்போது தொழிற் சாலைகளை துவங்க கெடு பிடிகள் அதிகம்.

அது தவிர இந்தியா ஒரு பலமான வியாபாரச் சந்தையை பெற்றுள்ளது.


இந்தியச் சந்தைகளில் விலை போகாத பொருட்களே இல்லை எனலாம்.

அது தவிர அவர்கள் நாட்டை விட குறைந்த கூலிக்கு இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சுலபம்.இப்போதே ஜப்பானில் கப்பல் மேல் விவசாயத்தைத் துவங்கி விட்டார்கள்.நம் நாட்டில் டாலர் சிட்டியின் (திருப்பூரின்) நிலை என்ன தெரியுமா?


இங்கு விவசாய நிலத்தை அழித்து தொழிற் சாலை துவங்கி சாயக் கழிவால் நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் மாசுபடுத்தி ஏற்றுமதி செய்யும் துணிகளை அனாவசியமாக $30 செலவில் வாங்கி போட்டுக்கொண்டு அவர்கள் விவசாயத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.
ஏன் அவர்களுக்கு தொழிற் சாலை அமைத்து பின்னலாடை தயாரிக்கத் தெரியாதா என்ன?ஆக மொத்தத்தில் நாம் அவர்கள் செல்லும் பாதைக்கு எதிர்த்திசையில் செல்கிறோம்.
அதாவது "கோழியை பிடிக்க நினைத்து வீட்டு கூரையை இடித்த கதை" என்பது இதுதான்.இப்போதே ஆறு வழிச் சாலைகள் அமைக்கிறேன் என்று சாலையோர மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள்;தொழிற்சாலை , வீடுகள் கட்டுகிறேன் என்று ஏரி, குளங்களை எல்லாம் மூடி விட்டார்கள்.விவசாய நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் சூறையாடி விட்டார்கள்.இப்போதே பணவீக்கம் கட்டுக்குள் இருந்தும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் அவற்றின் விலை ஏற்றம் நின்றபாடில்லை.எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதைச் சேமிக்க வழியின்றி எல்லாம் கடலுக்குத்தான் செல்கின்றன.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்குமாம்.இதே பாதையில் நாம் பயணித்தால் அப்போரைத் துவங்கும் தலையாய பணி நம்மைத்தான் வந்து சேரும்.

1 கருத்துகள்:

ஹாலிவுட் பாலா சொன்னது…

இது ஓகே! :)

மக்கள் தொகையை அட்வாண்டேஜாக பார்ப்பதை என்னால் ஏற்க முடியலை. ரொம்ப கஷ்டப் படப் போறாங்க.

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets