உலகம் நம் இந்தியர்கள் கையில்...

இன்றைய தேதியில் நம் நாட்டின் மக்கள் தொகை 114 கோடி என்கிறது ஒரு கணக்கெடுப்பு நிறுவனம். சிலர் 125 என்கிறார்கள். இன்னும் சிலர் 118 என்கிறார்கள். ஆகா மொத்தத்தில் நாம் 110 கோடியை தாண்டியாகிவிட்டது.


இது கவலைக்குரிய விஷயமாக நாம் நினைத்தாலும் உலக நாடுகள் நம்மை இதற்காக பொறாமையுடன் பார்க்கின்றன என்று நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?


ஆனால் உண்மை இதுதான்...1990களில் இந்தியாவுடனான உறவை வளர்த்துக்கொள்ள எந்த ஒரு மேற்க்கத்தைய நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை. (ரஷ்யாவைத் தவிர). பிற நாட்டுத் தலைவர்களின் கால் தடங்கள் இந்திய மண்ணில் பதிந்தகாக பெரியதொரு வரலாறு இல்லை. நம் நாட்டுத் தலைவர்கள் தான் வெளி நாட்டுப் பயணங்களில் பிற நாட்டு உறவை வளர்த்து வந்தார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்....அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனமும் அந்நிய முதலீட்டில் முதலில் பார்ப்பது நம்மைத்தான்.இதனால் தான் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அரிப்பெடுத்து எதற்கெடுத்தாலும் நம்மை சீண்டுகிறார்கள்.சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.எல்லா நாட்டு மக்கள் தொகை வளர்ச்சியையும் மூன்றாகப் பிரிக்கலாம்.வளரும் மக்கள் தொகை;


(இந்தியா, பிலிபைன்ஸ்,எதியோபியா)

நிலையான மக்கள் தொகை;


(அமெரிக்கா,கனடா, பிரான்ஸ் )
சுருங்கும் மக்கள் தொகை.


(ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்)இவை வயதின் அடிப்படையிலான மக்கள் தொகையைக் குறிக்கிறது...இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது. மனிதனின் வாழ் நாள் கணிசமான அளவு உயந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் வயதானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேல் முதியவர்கள் தான் இருப்பார்கள்.
அவர்களைப் பராமரிக்கவே 20 விழுக்காட்டுக்கும் மேல் இளைஞர்கள் தேவைப்படும்.ஆனால் இங்கு தான் நம் இந்தியர்கள் போட்டியின்றி வென்று விட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகளில் நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தான் முதியவர்கள் இருப்பார்கள்.


அதாவது நாம் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்டிருப்போம்.

(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )அதாவது இன்னும் 20 -30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் நாடு நம் நாடுதான்.அந்த இளம் தலை முறையினருக்கு போதுமான அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து விட்டால் போதும் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து உலகம் நம் இந்தியர்கள் கையில்...அதாவது நமக்கு தினமும் ஆறு மணிநேரம் தான் வேலை...


மாதக்கடைசியில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்....


இப்போது வெளிநாட்டினர் செய்வது போல் ஏடா கூடமான நிகழ்ச்சிகளை நடத்தி காசைக் கரியாக்கி கும்மியடிக்கலாம்...அதற்கான வேலைகளை நம் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்....
(கும்மியடிப்பதற்கு இல்லை... நாட்டை முன்னேற்றுவதற்கு...)நம் நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி, முதலீட்டுக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார்கள்.இந்நிலை தொடரும் போது நம் நாட்டின் GDP (மொத்த உற்ப்பத்தியின் அளவீட்டு எண்) 2015 இல் இத்தாலியையும், 2020 இல் பிரான்சையும், 2032 இல் ஜப்பானையும் விஞ்சிவிடுமாம்.வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டுக்கு மேல் தான் இருக்குமாம்...உள்கட்டமைப்பு வசதி, ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு என்று எல்லா வசதிகளும் நிறைந்த இடமாக இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக சென்னை உருவெடுத்து வருகிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....(பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன.....)

4 கருத்துகள்:

ஹாலிவுட் பாலா சொன்னது…

நல்ல ரோடும், குடிக்க நல்ல தண்ணியும் அப்ப(வாவது) கிடைக்குமா.. தலைவரே?

வரதராஜலு .பூ சொன்னது…

பார்ப்போம் நீங்கள் கூறுவது நடக்கிறதா என்று

ஹாலிவுட் பாலா கூறுவது நடந்தாலே அதிகம்.

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

உங்கள் இருவரது கேள்விக்காக நாளை ஒரு பதிவு எழுதுகிறேன் பொறுத்திருங்கள்....

ரோஸ்விக் சொன்னது…

அப்படியொரு நிகழ்வுக்காகத் தான் நாம் ஏங்குகிறோம். வெல்க பாரதம்!

நல்ல பகிர்வு நண்பா. வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets