எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!!!

இந்த பதிவை காலையிலேயே போட்டுவிடலாம் என்று பார்த்தால் 8-10 கரண்ட் கட். ஆனால் பதிவு இதைப்பற்றித்தான்.


நான் மின்சார உற்ப்பத்தி குறைவால் கரண்ட் கட் இங்கு மட்டும் தான் என்று நினைத்தால் பாகிஸ்தானிலும் அப்படித்தானாம். இங்கு தினமும் இரண்டு மணிநேரம்; சில நேரம் மூன்று மணி நேரம் கூட...


பாகிஸ்தானில் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.


ஆனால் இப்போது அவர்கள் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள்.


கரண்ட் கட் செய்வதிற்க்குப் பதில் கடிகார நேரத்தை மாற்றிவிட்டார்கள்.


புரியவில்லையா?


நேற்று முதல் பாகிஸ்தானில் எல்லா கடிகாரமும் ஒரு மணி நேரம் பின்னோக்கி பயணம் செய்து விட்டது. அதாவது ஒரு மணி நேரத்தை எல்லாரும் கடிகாரத்தில் குறைத்துக் கொண்டார்கள்.


இதில் என்ன லாபம் இருக்கிறது?


அப்படி கேளுங்கள்!!!தினமும் மின்சார செலவு அதிகம் ஆகும் நேரம் காலை 6-7.30


இப்போது கடிகாரத்தை மாற்றி வைத்தால் காலை வழக்கமாக 7.20 க்கு உதிக்கும் சூரியன் 6.20 க்கு உதிப்பது போலாகும். எனவே காலையில் எழுந்ததும் சூரியன் வந்தது போலாகும். எனவே மின்சார பயன்பாடு ஒரு மணி நேரம் சேமிக்கப்படும்.இது காலையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோருக்கு உதவியாக இருக்குமாம்.கோடை காலத்தில் இந்த ஒரு மணி நேரத்தை சரி செய்து கொள்வார்களாம்.


(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )ஐரோப்பா கண்டத்தில் ஏற்கனவே இந்த முறை பின்பற்றப் படுகிறதாம். அவர்கள் வசந்த காலத்தில் ஒரு மணி நேரத்தை அதிகப் படித்திக் கொண்டு பின்னர் அதை இலையுதிர் காலத்தில் சரி செய்து கொள்வார்களாம்.நேற்று முதல் இது பாகிஸ்தானில் அமலுக்கு வருகிறதாம்.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!!!நாமும் நம் 'கலைஞரிடம்' எடுத்துச் சொல்லி இந்த இரண்டு மணி நேர கரண்ட் கட் பிரச்சனைய குறைச்ச்சிருவோமா!!!!!

6 கருத்துகள்:

புலவன் புலிகேசி சொன்னது…

//நாமும் நம் 'கலைஞரிடம்' எடுத்துச் சொல்லி இந்த இரண்டு மணி நேர கரண்ட் கட் பிரச்சனைய குறைச்ச்சிருவோமா!!!!!//

நல்ல யோசனைதான் நம்மாளுக கேப்பாங்களா??

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

//நல்ல யோசனைதான்!!! கேப்பாங்களா?//

நல்ல யோசனையா! அப்ப கேக்கமாட்டாங்க....

பின்னோக்கி சொன்னது…

தமிழ் வருடப்பிறப்பை மாத்துனவருக்கு இதெல்லாம் ஜீ..ஜீப்பி... 1 மணி நேரம் என்ன ? 4 மணி நேரமாக் கூட மாத்துவாரு

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

சரியா சொன்னிங்க பின்னோக்கி... இவுங்க கணக்கா சொன்னது 2; கணக்குல வராம 4 (ஐயோ! நான் கரண்ட் கட் ஆகுற நேரத்த சொன்னேன்!)

வெண்ணிற இரவுகள்....! சொன்னது…

//நாமும் நம் 'கலைஞரிடம்' எடுத்துச் சொல்லி இந்த இரண்டு மணி நேர கரண்ட் கட் பிரச்சனைய குறைச்ச்சிருவோமா//
மிகச்சரி

ரோஸ்விக் சொன்னது…

விருது கொடுப்போம் என்று சொல்லிப்பாருங்கள். :-)

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets