புரூஸ் லீ...

· 3 கருத்துகள்

மும்பை பயங்கர வாதத் தாக்குதல்...

· 4 கருத்துகள்

மும்பை பயங்கர வாதத் தாக்குதல் நிகழ்ந்து 26/11 உடன் ஒருவருட காலம்

நிறைவடைகிறது. சுமார் 195 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களின் உயிரை

பழிவாங்கிய நாளின் ஓராண்டு நினைவு தினம் வரும் 26 ம் நாள் அனுஷ்டிக்கப்

படுகிறது.அன்றைய தினத்தில் idea அலைபேசி நிறுவனம் இரவு 8.36 மணியிலிருந்து

(தாக்குதல் நடந்த நேரம் ) 9.36 வரை தன் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த

தொகையையும் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த அரசுக்கு வழங்கப் போவதாக

அறிவித்துள்ளது.5 கோடி பயனாளர்களைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு சராசரியாக மற்ற

நாட்களில் ஒரு மணி நேரத்தில் 3 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும்,

இது வரும் 26 ம் தேதி மிகவும் அதிகரிக்கும் எனவும் அந்நிறுவனம்

கணக்கிட்டுள்ளது.இதற்காக இன்று (ஞாயிறு ) முதல் தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்

போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தியை மக்கள்

அனைவருக்கும் கொண்டு செல்ல நாமும் முயற்ச்சிப்போம்.26/11 அன்று ஒரு நிமிட மெளன அஞ்சலியை இறந்தவர்களுக்காகவும் ஒரு மணி

நேர வாதத்தை இருப்பவர்களுக்காகவும் செலவழிப்போம்.மீண்டுமொரு அசம்பாவிதம் நடக்காமலிருக்க நம்மாலான

உதவியைச்செய்வோம்.

DAYTRADING செய்யும் போது செய்யக் கூடாத சில விஷயங்கள்

· 5 கருத்துகள்

நான் கடந்த 3 வருடங்களாக DAY TRADING, LONG TERM , SHORT TERM என STOCK MARKT இல் பலவகையில் INVEST செய்து வருகிறேன். என் அனுபவத்தில் DAYTRADING செய்யும் போது செய்யக் கூடாத சில விஷயங்களை உங்களுக்காக எழுதுகிறேன்.

1. WORLD MARKET ஐ பார்த்துவிட்டு சிலர் காலை MARKET OPEN ஆன உடன் வாங்கவோ, விற்கவோ செய்வார்கள். இது மிக மிக தவறான முடிவாகும். இதில் சம்பாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்னைப் பொருத்தவரை 0% என்று தான் சொல்லுவேன்.2. உங்கள் BROKERAGE நிறுவனங்களிலிருந்து வரும் ஆலோசனைகளை அப்படியே ஏற்காதீர்கள்.3. STOP LOSS போடுவதும் போடாததும் உங்கள் இஷ்டம். ஆனால் TARGET VALUE விற்க்கு SQURE OFF செய்யுங்கள். உங்கள் இலாபத்தினை முதலிலேயே தீர்மானியுங்கள்.4. வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பார்கள். இது STOCK MARKT க்கு பொறுந்தாது. நீங்கள் எவ்வளவு வாய்ப்புகளை நழுவ விடுகிறீர்களோ அவ்வளவு விஷயங்களை நீங்கள் கற்பீர்கள். ஆனால் பணத்தை நழுவ விடாதீர்கள்.5. ஒன்றை முதலில் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் STOCK MARKET இல் போட்ட பணம் திருப்பதி உண்டியலில் போட்டது என்ற எண்ணம் வரும் வரை DAY TRADING செய்ய வேண்டாம்.6. முதலில் உங்கள் தேவைக்கேற்ற BROKERAGE நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் ஒன்றிரண்டு ரூபாயையும் BROKERAGE நிறுவனத்திடம் இழக்காதீர்கள். (மேலும் ஆலோசனைக்கு என் e- mail முகவரியை தொடர்பு கொள்ளலாம்.)7. 2% இலாபத்திற்கு மேல் DAY TRADING இல் எப்போதும் TARGET ஐ FIX செய்து SQURE OFF செய்ய வேண்டாம்.8. ஐரோப்பிய மார்க்கெட் OPEN ஆன பின் டிரேடிங் ஒரு வித மந்த நிலையில் தான் நடைபெறும். அதற்க்குப் பின் டிரேடிங் செய்வது அவ்வளவு நல்லதல்ல.9. சிலர் கவனக்குறைவாக BUY பண்ண நினைத்து SELL செய்து விடுவார்கள்; SELL பண்ண நினைத்து BUY செய்து விடுவார்கள். TRADING செய்யும் போது DECIMAL VALUE க்களை மாற்றி 250.4 என்பதிற்குப் பதில் 25.04 என்று கூட நீங்கள் டைப் செய்யலாம். கவனம்...10. கரண்ட் கட், INTERNET PROBLEM இவற்றிலிருந்து தப்பிக்க TRADING செய்யத் தெரிந்த நல்ல நண்பரை வெளியூரில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.11. வாங்கும் போதோ, விற்கும் போதோ MARKET RATE க்கு TRADING செய்ய வேண்டாம். (USE ‘LIMIT’ OPTION). ஏனெனில் நமக்கு இணையத்தில் வரும் அனைத்து தகவல்களும் 5 நொடியிலிருந்து 2 நிமிடம் வரை தாமதமாகத்தான் நமக்கு கிடைக்கும்.12. எது BASE VALUE எது TOP VALUE என்பது தெரியாமல் வாங்கவோ விற்கவோ கூடாது. இதனால் வாய்ப்பை நழுவவிட்டால் பரவாயில்லை... இன்றைக்கே இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் TRADING செய்வதை மறந்து விடுங்கள்.13. நீங்கள் நினைப்பது தான் STOCK MARKET இல் நடக்கும். ஆனால் நீங்கள் தொடந்து நஷ்டம் அடைந்து கொண்டே இருப்பீர்கள். அதற்காக நீங்கள் மாற்றுப் பாதையில் என்றுமே யோசிக்கக் கூடாது.14. DISCLAIMER: TRADE AT YOUR OWN RISK (வேரென்ன சொல்ல முடியும்...)
ALL THE BEST

அனுபவம்....

· 5 கருத்துகள்

இரண்டு வருடத்திற்கு முன் திருச்சியிலிருந்து இரவு பேருந்தில் தனியாக வந்து திருப்பூரில் இறங்கினேன்.


எங்கள் வீட்டிற்குச்செல்ல மற்றொரு டவுன் பஸ் ஏற வேண்டும்.


அதற்க்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்த்து.


இப்போது மணி இரவு இரண்டு.

அந்த பேருந்து நிலையத்தில் இன்னும் முப்பது பேர் காத்துக் கொண்டிருந்தனர்.


ஒருவர் 5 ரூபாய்க்கு காகித டம்ளரில் காபி வினியோகித்துக் கொண்டிருந்த்தார். வழக்கமாக நான் வெளியில் காபி, டீ குடிப்பது இல்லை. இரவு தூங்காத களைப்பில் எனக்கும் காபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. நானும் வாங்கி குடித்தேன்.


அந்த நள்ளிரவில் அவர் சுறு சுறுப்பாக காபி வினியோகித்துக் கொண்டிருந்தார். திருப்பூரைப் பொருத்தவரை அங்கு அனைவரும் நல்ல உழைப்பாளிகள். கடந்த 12 வருடங்களில் நான் அங்கு ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்த்த்தாக எனக்கு ஞாபகம் இல்லை.


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேருந்து வந்தது. நான் இரங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கினேன். எங்கள் வீட்டிற்குச் செல்லும் சாலையில் இறங்கி நடந்தேன். ஒரே கும்மிருட்டு. யாருமே இல்லை.


திடீரென்று பின்னால் இருந்து யாரோ அழைக்கும் சத்தம். 35 வயது நிரம்பிய ஒரு பெண் தலையில் ஒரு மூட்டையையும் கையில் ஒரு பையையும் பிடித்தவாரு வந்து கொண்டிருந்தார்.


தம்பீ இதக்கொஞ்சம் பிடிங்க என்று அந்த பையை என் கையில் திணித்தார்.


நான் வந்த பேருந்தில் தான் அந்த பெண்ணும் வந்திருக்க வேண்டும்.இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.


பின் எங்கள் இருவரிடையேயான சம்பாஷனை இதோ...

(கிட்டத்தட்ட நினைவிருக்கிறது)எங்க போகனும் தங்கம்...?


இங்க தான்; அஞ்சே நிமிஷம் போயிரலாம்; நீங்க...? (இது நான்)


புதூருக்கு கண்ணு... (2 கி.மீ தொலைவு)


ஊருக்கு போயிட்டு வர்ரீங்களா....? (இது நான்)

இல்ல சாமி... வேல முடிஞ்சு இப்ப தான் வரேன்.


காத்தால ரேஷன்ல அரிசி வாங்கிட்டு கம்பெனிக்கு எடுத்துட்டு போயிட்டேன்.

தூக்க முடியல....

பையு கனமா இருக்க கண்ணு....?


இல்ல பரவாயில்லங்க.... இப்ப தான் வேல முடிஞ்சதா? (இது நான்)


ஆமாங்கண்ணு... காலையில 9 மணிக்கு போனா இப்ப தான் விடுவாங்க...

சனிக்கிழம வரைகும் இப்படி தான்...


எனக்கு இதைக் கேட்டதும் என்னவோ போலிருந்த்து.....

நீ வேலைக்கு போரயா தம்பீ.....?


இல்ல ஸ்கூலுக்கு போரேன். (ஏனோ காலேஜ் என்று சொல்ல தோணவில்லை)

பன்னெண்டாவது...

எம் பொண்ணு பத்தாவது படிக்கிரா...

(அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை....)

இப்போது மணி 3.30 இன்னும் 5 மணி நேரத்தில் மீண்டும் அந்தப் பெண்

வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்.

அவளுடைய சம்பளம், கணவன் பற்றி கேட்கவேண்டும் போலிருந்த்து.

சம்பளம் என்ன இலட்ச ரூபாயா கொடுக்கப் போகிறார்கள்?

தினமும் 17 மணி நேரம் வேலை செய்கிறாள்; பின் யார் இருந்து என்ன பிரையோஜனம்?

சும்மா இருந்து விட்டேன்....

நான் தொடர்ந்து அவள் வீடு வரை போகலாம் என்று நினைத்தேன்.

வேணாஞ்சாமி... இள வயசு தனியா எப்படி திரும்பி வருவ என்றவாரே என்

கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்....


(அந்த பெண்ணின் முகம் கூட சரியாக ஞாபகம் இல்லை; அப்போதே மறந்து விட்டேன்; ஆனால் இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை; இதை எழுத வேண்டும் போல் இருந்த்து; எழுதி விட்டேன்)

.......................................................................................................................................................................

TELE PHONE BILL இல் ஆகஸ்ட் மாதம் 550 க்கு பதில் 1600 ரூபாயை போட்டு என் தலையில் மிளகாய் அரைத்திருந்தனர். அது தொடர்பாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் இருந்த BSNL OFFICE க்கு போயிருந்திருந்தேன்.


நான் பார்க்க வேண்டிய அதிகாரி 10 மணிக்கு பதில் 11 மணிக்கு சாவகாசமாக வந்தார்.


வந்ததும் பக்கத்து அறையிலிருந்த பெண்ணிடம் கதையளக்க சென்று விட்டார். நான் பொறுமையாக உக்கார்ந்திருந்தேன். அவர் தன் அறைக்கு வந்ததும் நான் உள்ளே நுழைந்தேன்.


அவரது மேஜை மேலிருந்த PHONE அடித்துக் கொண்டே இருந்த்து. அதை கவனிக்காமல் COMPUTER ON செய்வதும் நான் கொடுத்த லெட்டரையும் , பில்லையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.


ஒரு வாரம் ஆகும் என்றார்.


தன் மேஜை மேலிருந்த ஃபோன் நம்பரை எனக்கு கொடுத்தார்.


நான் மெதுவாக பேச ஆரம்பித்தேன்.


சிறிது நேரத்தில் அனைவரும் எங்களையே பார்க்கும் படி கார சார மாக விவாதிக்க ஆரம்பித்து விட்டோம்.


கடைசியாக அவர் தன் மொபைல் எண்ணை என்னிடம் கொடுத்ததும் தான் நான் அங்கிருந்து வெளியேறினேன்.


(அதுவும் அவர் என் கல்லூரியின் முன்னாள் மாணவராம்... அது தெரிந்த பின் தான் தன் நம்பரைக் கொடுத்தார்.)

வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.


மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தேன்.


12 messages received.


Open செய்து பார்த்தேன்.


Congratulations….

Congratulations da machi…

Congrats da…


‘ ’

‘ ’

‘ ’

‘ ’


‘ ’


‘ ’


Treat eppa da….?


கடைசியாக இப்படி ஒரு மெசேஜ்


Machaan… result came da. U ve got selected in ESSAR STEELS da…

(Campus Interview வில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது...)

இப்போதே விழித்துக் கொள்வோம்....

· 1 கருத்துகள்

ஒரு பதிவரின் கருத்துக்களுக்கு நாம் எதிர்ப்பை பின்னூட்டத்தில் தெரிவிப்போம். அல்லது எதிர்ப்பதிவை எழுதுவோம். ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக என் பதிவிற்கு எதிர்ப்பதிவை நானே எழுதுகிறேன். என் முந்தய பதிவினை இங்கு அழுத்தி படித்துக்கொள்ளுங்கள்.


இதில் நான் இன்னும் 20-30 ஆண்டுகளில் உலகம் நம் இந்தியர்கள் கைகளில் என்று எழுதியிருக்கிறேன்.


இன்று நம் நாட்டில் 110 கோடி பேர் வாழ்கிறோம்.இந்த 110 கோடி பேரும் தினமும் மூன்று வேலை சாப்பிட வேண்டும்.


110 கோடி பேருக்கும் குடிக்க தண்ணீர் வேண்டும்.
நினைத்துப் பாருங்கள்; நாம் எவ்வளவு உணவைப் பயிரிட வேண்டும்;


எவ்வளவு தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும்.


2030 இல் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட அதிகமாகக்கூட இருக்கலாம்.


அப்போது நம் மக்கள் தொகை எப்படியும் 150 கோடியைத் தொட்டு விடும்.

(இந்தியாவின் doubling time அதாவது மக்கள் இரட்டிப்பாகும் ஆண்டுகள் 28 என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2038 இல் மக்கள் தொகை 200 கோடியாகக் கூட இருக்கலாம்.)

ஆக இத்தனை பேருக்கும் நாம் உணவையும் நீரையும் வழங்க வேண்டும்.

அதற்கான முயற்ச்சிகளை நாம் இப்போதே எடுக்க வேண்டும்.


நாம் அதைச் செய்கிறோமோ என்றால் நிச்சயமாக இல்லை....


வளர்ந்த நாடுகள் எல்லாம் இப்போதே விழித்துக் கொண்டு விட்டன.


அவர்கள் இப்போதே தண்ணீரை சேமித்து விவசாயத்தை ஊக்கு விக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களது முதலீட்டை எல்லாம் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் போட்டு அதைப் பன்மடங்காக்கும் வித்தையை கற்றுக்கொண்டு விட்டார்கள்.


FII எனப்படும் foreign institutional investors கள் நம் பங்குச்சந்தையை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டார்கள். பங்குச்சந்தையில் ஏற்றமோ இரக்கமோ இப்போது அவர்கள் கையில் தான்.


multi national company களுக்கு நான் நீ என்று ஒவ்வொரு மாநிலத்தரும் போட்டி போட்டுக் கொண்டு விவசாய நிலத்தை அவர்கள் தொழிற்சாலை அமைக்க கொடுத்து வருகிறோம்.அவர்கள் வருகை நம் நாட்டை நோக்கி இருப்பதன் காரணத்தை நான் முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் அதற்க்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.அவர்கள் நாட்டில் இப்போது தொழிற் சாலைகளை துவங்க கெடு பிடிகள் அதிகம்.

அது தவிர இந்தியா ஒரு பலமான வியாபாரச் சந்தையை பெற்றுள்ளது.


இந்தியச் சந்தைகளில் விலை போகாத பொருட்களே இல்லை எனலாம்.

அது தவிர அவர்கள் நாட்டை விட குறைந்த கூலிக்கு இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சுலபம்.இப்போதே ஜப்பானில் கப்பல் மேல் விவசாயத்தைத் துவங்கி விட்டார்கள்.நம் நாட்டில் டாலர் சிட்டியின் (திருப்பூரின்) நிலை என்ன தெரியுமா?


இங்கு விவசாய நிலத்தை அழித்து தொழிற் சாலை துவங்கி சாயக் கழிவால் நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் மாசுபடுத்தி ஏற்றுமதி செய்யும் துணிகளை அனாவசியமாக $30 செலவில் வாங்கி போட்டுக்கொண்டு அவர்கள் விவசாயத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.
ஏன் அவர்களுக்கு தொழிற் சாலை அமைத்து பின்னலாடை தயாரிக்கத் தெரியாதா என்ன?ஆக மொத்தத்தில் நாம் அவர்கள் செல்லும் பாதைக்கு எதிர்த்திசையில் செல்கிறோம்.
அதாவது "கோழியை பிடிக்க நினைத்து வீட்டு கூரையை இடித்த கதை" என்பது இதுதான்.இப்போதே ஆறு வழிச் சாலைகள் அமைக்கிறேன் என்று சாலையோர மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள்;தொழிற்சாலை , வீடுகள் கட்டுகிறேன் என்று ஏரி, குளங்களை எல்லாம் மூடி விட்டார்கள்.விவசாய நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் சூறையாடி விட்டார்கள்.இப்போதே பணவீக்கம் கட்டுக்குள் இருந்தும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் அவற்றின் விலை ஏற்றம் நின்றபாடில்லை.எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதைச் சேமிக்க வழியின்றி எல்லாம் கடலுக்குத்தான் செல்கின்றன.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்குமாம்.இதே பாதையில் நாம் பயணித்தால் அப்போரைத் துவங்கும் தலையாய பணி நம்மைத்தான் வந்து சேரும்.

உலகம் நம் இந்தியர்கள் கையில்...

· 4 கருத்துகள்

இன்றைய தேதியில் நம் நாட்டின் மக்கள் தொகை 114 கோடி என்கிறது ஒரு கணக்கெடுப்பு நிறுவனம். சிலர் 125 என்கிறார்கள். இன்னும் சிலர் 118 என்கிறார்கள். ஆகா மொத்தத்தில் நாம் 110 கோடியை தாண்டியாகிவிட்டது.


இது கவலைக்குரிய விஷயமாக நாம் நினைத்தாலும் உலக நாடுகள் நம்மை இதற்காக பொறாமையுடன் பார்க்கின்றன என்று நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?


ஆனால் உண்மை இதுதான்...1990களில் இந்தியாவுடனான உறவை வளர்த்துக்கொள்ள எந்த ஒரு மேற்க்கத்தைய நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை. (ரஷ்யாவைத் தவிர). பிற நாட்டுத் தலைவர்களின் கால் தடங்கள் இந்திய மண்ணில் பதிந்தகாக பெரியதொரு வரலாறு இல்லை. நம் நாட்டுத் தலைவர்கள் தான் வெளி நாட்டுப் பயணங்களில் பிற நாட்டு உறவை வளர்த்து வந்தார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்....அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனமும் அந்நிய முதலீட்டில் முதலில் பார்ப்பது நம்மைத்தான்.இதனால் தான் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அரிப்பெடுத்து எதற்கெடுத்தாலும் நம்மை சீண்டுகிறார்கள்.சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.எல்லா நாட்டு மக்கள் தொகை வளர்ச்சியையும் மூன்றாகப் பிரிக்கலாம்.வளரும் மக்கள் தொகை;


(இந்தியா, பிலிபைன்ஸ்,எதியோபியா)

நிலையான மக்கள் தொகை;


(அமெரிக்கா,கனடா, பிரான்ஸ் )
சுருங்கும் மக்கள் தொகை.


(ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்)இவை வயதின் அடிப்படையிலான மக்கள் தொகையைக் குறிக்கிறது...இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது. மனிதனின் வாழ் நாள் கணிசமான அளவு உயந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் வயதானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேல் முதியவர்கள் தான் இருப்பார்கள்.
அவர்களைப் பராமரிக்கவே 20 விழுக்காட்டுக்கும் மேல் இளைஞர்கள் தேவைப்படும்.ஆனால் இங்கு தான் நம் இந்தியர்கள் போட்டியின்றி வென்று விட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகளில் நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தான் முதியவர்கள் இருப்பார்கள்.


அதாவது நாம் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்டிருப்போம்.

(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )அதாவது இன்னும் 20 -30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் நாடு நம் நாடுதான்.அந்த இளம் தலை முறையினருக்கு போதுமான அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து விட்டால் போதும் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து உலகம் நம் இந்தியர்கள் கையில்...அதாவது நமக்கு தினமும் ஆறு மணிநேரம் தான் வேலை...


மாதக்கடைசியில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்....


இப்போது வெளிநாட்டினர் செய்வது போல் ஏடா கூடமான நிகழ்ச்சிகளை நடத்தி காசைக் கரியாக்கி கும்மியடிக்கலாம்...அதற்கான வேலைகளை நம் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்....
(கும்மியடிப்பதற்கு இல்லை... நாட்டை முன்னேற்றுவதற்கு...)நம் நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி, முதலீட்டுக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார்கள்.இந்நிலை தொடரும் போது நம் நாட்டின் GDP (மொத்த உற்ப்பத்தியின் அளவீட்டு எண்) 2015 இல் இத்தாலியையும், 2020 இல் பிரான்சையும், 2032 இல் ஜப்பானையும் விஞ்சிவிடுமாம்.வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டுக்கு மேல் தான் இருக்குமாம்...உள்கட்டமைப்பு வசதி, ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு என்று எல்லா வசதிகளும் நிறைந்த இடமாக இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக சென்னை உருவெடுத்து வருகிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....(பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன.....)

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!!!

· 6 கருத்துகள்

இந்த பதிவை காலையிலேயே போட்டுவிடலாம் என்று பார்த்தால் 8-10 கரண்ட் கட். ஆனால் பதிவு இதைப்பற்றித்தான்.


நான் மின்சார உற்ப்பத்தி குறைவால் கரண்ட் கட் இங்கு மட்டும் தான் என்று நினைத்தால் பாகிஸ்தானிலும் அப்படித்தானாம். இங்கு தினமும் இரண்டு மணிநேரம்; சில நேரம் மூன்று மணி நேரம் கூட...


பாகிஸ்தானில் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.


ஆனால் இப்போது அவர்கள் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள்.


கரண்ட் கட் செய்வதிற்க்குப் பதில் கடிகார நேரத்தை மாற்றிவிட்டார்கள்.


புரியவில்லையா?


நேற்று முதல் பாகிஸ்தானில் எல்லா கடிகாரமும் ஒரு மணி நேரம் பின்னோக்கி பயணம் செய்து விட்டது. அதாவது ஒரு மணி நேரத்தை எல்லாரும் கடிகாரத்தில் குறைத்துக் கொண்டார்கள்.


இதில் என்ன லாபம் இருக்கிறது?


அப்படி கேளுங்கள்!!!தினமும் மின்சார செலவு அதிகம் ஆகும் நேரம் காலை 6-7.30


இப்போது கடிகாரத்தை மாற்றி வைத்தால் காலை வழக்கமாக 7.20 க்கு உதிக்கும் சூரியன் 6.20 க்கு உதிப்பது போலாகும். எனவே காலையில் எழுந்ததும் சூரியன் வந்தது போலாகும். எனவே மின்சார பயன்பாடு ஒரு மணி நேரம் சேமிக்கப்படும்.இது காலையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோருக்கு உதவியாக இருக்குமாம்.கோடை காலத்தில் இந்த ஒரு மணி நேரத்தை சரி செய்து கொள்வார்களாம்.


(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )ஐரோப்பா கண்டத்தில் ஏற்கனவே இந்த முறை பின்பற்றப் படுகிறதாம். அவர்கள் வசந்த காலத்தில் ஒரு மணி நேரத்தை அதிகப் படித்திக் கொண்டு பின்னர் அதை இலையுதிர் காலத்தில் சரி செய்து கொள்வார்களாம்.நேற்று முதல் இது பாகிஸ்தானில் அமலுக்கு வருகிறதாம்.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!!!நாமும் நம் 'கலைஞரிடம்' எடுத்துச் சொல்லி இந்த இரண்டு மணி நேர கரண்ட் கட் பிரச்சனைய குறைச்ச்சிருவோமா!!!!!

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets