டைம் பாஸ்.....!


உங்கள் புத்திசாலித்தனத்தினை பரிசோதிக்கும் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன...அதற்கான பதில்களை ஒவ்வொரு கேள்விக்கும் கிழே கொடுத்துள்ளேன். select all கொடுத்து பார்த்துக்கொள்ளுங்கள்...கேள்விகள்:

1. மூன்று பூனைகள் மூன்று எலிகளை தின்ன மூன்று நிமிடங்கள் ஆகும் என்றால் நூறு பூனைகள் நூறு எலிகளை தின்ன எத்தனை நிமிடங்கள் ஆகும்?

பதில்:

நூறு என்று நீங்கள் கூறியிருந்தால் உங்கள் தலையில் நீங்களே

குட்டிக்கொல்லுங்கள், சரியான விடை 'மூன்று'.2. டாக்டர் உங்களிடம் மூன்று மாத்திரைகளை கொடுத்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரையை சாப்பிடச்சொல்கிறார். மூன்று மாத்திரைகளையும் உண்ண எவ்வளவு நேரம் ஆகும்?

பதில்: ஒன்றரை என்று சொன்னவர்கள் மறுபடியும் தலையில்

குட்டிக்கொல்லுங்கள், சரியான விடை 'ஒன்று'.3. ஜூலியின் அப்பாவிற்கு ஐந்து குழந்தைகள்

nana

nene

nini

nono

?

ஐந்தாவது குழந்தையின் பெயரைகண்டுபிடியுங்கள்...

பதில்:

nunu என்று பதில் சொன்னவர்கள் மீண்டும்..... வேண்டாம் இப்போது உங்கள் காதை

நீங்களே திருவிக்கொள்ளுங்கள். சரியான பதில் "ஜூலி"


4. நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். (நான் என்ன உசேன் போல்ட்டா என்று கேட்பது காதில் விழுகிறது. ஒரு பேச்சுக்குதானே......! சும்மா நெனைங்க!!!) நீங்கள் இரண்டாவதாக ஓடுபவரை முந்திச்சென்றால், இப்போது நீங்கள் எந்த இடத்தில் ஓடுகிறீர்கள்?


முதலிடத்தில் அல்ல; இரண்டாவது இடத்தில் தான்!!!!


5. அதே ஓட்டப்பந்தயத்தில், நீங்கள் கடைசி இடத்தில் இருப்பவரை முந்தி ஓடினால் இப்போது உங்கள் நிலை?

ஹா ஹா ஹா!!! கடைசியில் ஓடுபவரை எப்டிங்க முந்த முடியும்? அவரால்தான்

மத்தவங்கள முந்த முடியும்.6. கால்குலேடர எடுக்காம, நிதானமா யோசிக்காம சட்டுன்னு பதில சொல்லுங்க...

1000 உடன் 40 ஐ கூட்டுங்கள்;

மறுபடியும் 1000 ஐ கூட்டுங்கள்;

இப்போது 30 ஐ கூட்டுங்கள்;

மறுபடியும் 1000 ஐ கூட்டுங்கள்;

இப்போது 20 ஐ கூட்டுங்கள்;

மீண்டும் 1000 ஐ கூட்டுங்கள்;

அதோடு 10 ஐ கூட்டி பதிலை சொல்லுங்கள்.


பதில் 5000 என்று சொன்னவர்கள் தோப்புக்கரணம் போடவேண்டியதுதான். பதில் 41007. 30'பாதியால் ' வகுத்து 10 ஐ கூட்டினால் என்ன வரும்?


பதில்: 70 ( 30 வகுத்தல் ½ + 10)


இப்போ கொஞ்சம் மொக்கையான கேள்விகள்:


(டேய்...! நீ இதுவரைக்கும் சொன்னதே அப்டிதான் இருந்துச்சுன்னு சொல்லக்கூடாது.... ஆமா!!!)


8. நம்ம பிரதமரோட பேறு கி.பி.1952 ல என்ன?


அப்பவும் மன்மோகன் சிங்குதான்! அவரு இன்னும் பேர மாத்தல!

ஹி! ஹி!


9. நம்ம ஆளு ஒருத்தர் அமெரிக்காவுல கடையில போய் காப்பி ஆர்டர் பண்ணினார். சர்வர் காப்பிய டேபுள் மேல வச்சுட்டு போய்ட்டார். திடீர்னு நம்ம ஆளோட friend ஒருத்தர் கடைக்கு வந்தார். நம்மாளப் பார்த்ததும் இவருடன் அமர்ந்து விட்டார். பின்

what is before u? என்று கேட்டார். நம்ம ஆளு 'டீ' அப்டீன்னு பதில் சொன்னார். ஏன்?


ஏன்னா.... U க்கு முன்னாடி T தான...!!! ஹி! ஹி!


அப்டியே தலைல, காதுல கைல iodex தடவிக்கிட்டே எல்லாரும் ஓட்டுபோடுங்க பாப்போம்!!!


( சும்மனாச்சுக்கும்...! எனக்கு தெரியாதா நம்ம பதிவர்கள் எல்லாரும் புத்திசாளிங்கன்னு...!!!??? ஹி! ஹி! ஹி!)நம்ம எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிருவோம். அதனால இத உங்க வீட்டுல இருக்கற குழந்தைகள் கிட்ட கேளுங்க. அவுங்க தப்பா பதில் சொல்றதே ஒரு அழகுதான்.(ஓட்டு போடுபவர்கள் என்னை நண்பனாக (follower) ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)நன்றி!

8 கருத்துகள்:

ஹாலிவுட் பாலா சொன்னது…

எவ்வளவோ.. எச்சரிக்கையா இருந்தும்.. முதல் கேள்விக்கு மட்டும்தான் சரியா பதில் சொன்னேன்.

தலையும்.. காதும்... வலிக்குதுங்க! :( :(

ராம்... சொன்னது…

//*
நம்ம எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிருவோம். அதனால இத உங்க வீட்டுல இருக்கற குழந்தைகள் கிட்ட கேளுங்க. அவுங்க தப்பா பதில் சொல்றதே ஒரு அழகுதான்.*//

பாலா... இது உங்களுக்குத்தான்....

ஹாலிவுட் பாலா சொன்னது…

2 1/2 வயசுலயேவா? :) ஆனா இந்த பதிவை ”ஸ்டார்” போட்டு வச்சிருக்கேன். நாளைக்கு ஆஃபீஸில்.. சீன் போடலாமில்ல! :)

ராம்... சொன்னது…

ஜமாய்ங்க பாலா....

KISHORE சொன்னது…

2 அண்ட் 3 தான் சரியா சொன்னேன்.. பாலா உங்கள விட நான் ஒரு மார்க் அதிகம்.. ஜாலி..

ராம்... சொன்னது…

//* எனக்கு தெரியாதா நம்ம பதிவர்கள் எல்லாரும் புத்திசாளிங்கன்னு...!!!??? ஹி! ஹி! ஹி!*//

இது உங்களுக்கு கிஷோர்...
கிஷோரா கொக்கா?

திவ்யாஹரி சொன்னது…

(டேய்...! நீ இதுவரைக்கும் சொன்னதே அப்டிதான் இருந்துச்சுன்னு சொல்லகூடாதுன்னு சொல்லிட்டிங்கல்ல மறந்துட்டேன்.. ஹி ஹி ஹி..

சும்மா ஜோக்..

5 கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டேன் என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க நண்பா.. நான் புதுசு..

திவ்யாஹரி சொன்னது…

en husband ellathukkum sariya pathil sollitanga nanba...

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets