அட விடுங்கப்பா.... இதிலயுமா...

· 3 கருத்துகள்

நேற்றைய இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோணி(71) மற்றும் யுவராஜ் சிங்கின்(78) அதிரடியில் ஆஸ்திரேலியாவை பத்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வென்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிகி பாண்டிங் இடம் கேட்டபோது,


"எங்கள் அணி வீரர்களை குறைகூற முடியாது; அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்; ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்றார்."மேலும் அவர் கூறுகையில் "நேற்றைய பயிற்சியின் போது பிட்ச் மிகவும் சேறாக, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ; ஆனால் இந்திய வீரர்கள் வரும் போது இது பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டு விடும்; இது எங்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது " என்று குறை கூறியுள்ளார்.


நேற்றைய இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோணி(71) மற்றும் யுவராஜ் சிங்கின்(78) அதிரடியில் ஆஸ்திரேலியாவை பத்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வென்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிகி பாண்டிங் இடம் கேட்டபோது, "எங்கள் அணி வீரர்களை குறைகூற முடியாது; அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்; ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்றார்."


இது ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.மேலும் அவர் கூறுகையில் "நேற்றைய பயிற்சியின் போது பிட்ச் மிகவும் சேறாக, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ; ஆனால் இந்திய வீரர்கள் வரும் போது இது பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டு விடும்; இது எங்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது " என்று குறை கூறியுள்ளார்.இது பாகிதானின் ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.அட விடுங்கப்பா.... இதிலயுமா...

கச்சா எண்ணெய்-2

· 1 கருத்துகள்

கச்சா எண்ணெய்-1

கச்சா எண்ணெய் உலகெங்கும் பரவலாகக் காணப்பட்டாலும் அதிக அளவில், குறைந்த உற்ப்பத்திச் செலவில், சில நாடுகளில் மட்டும் பிரித்தெடுக்கப்படுகிறது.

ஈரான், ஈராக், குவைத், கத்தார், Saudi அரேபியா, Venezuele
இவற்றில் மிக அதிக அளவிலும்
Indonesia, Libyan Arab Jamahiriya, United Arab Emirates, Algeria, Nigeria, Ecuador, Angola and Gabon
போன்ற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலும் உற்ப்பத்தி செய்யப்படுகின்றன.


ஆரம்ப நாட்களில் கச்சா எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்கள் தேவைக்கேற்ப கச்சா எண்ணையின் விலையினை நிர்ணயித்து விற்க்கத்துவங்கின.

சில நாடுகள் விலை குறைவாக விற்க வளர்ந்த நாடுகளால் நிர்பந்திக்கப்பட்டன.(இது போன்ற அரசியல் சமாச்சாரங்கள் நமக்கு இப்போதைக்கு வேண்டாம்.)

இந்நிலையில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம் நிறைந்த தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபரின் தீவிர முயற்சியால் OPEC (The Organization of the Petroleum Exporting Countries) உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஆதிக்கத்தினை எதிர்த்துக்கும் இயக்கம் என இது முன்பு பேசப்பட்டாலும் OPEC கச்சா எண்ணெய் தொடர்பாக சில முடுவுகளை எடுக்கத்துவங்கியது.

Iran,

Iraq,

Kuwait,

Saudi Arabia

and Venezuela

ஆகிய நாடுகளின் தலைவர்கள் OPEC ஐ உருவாக்கி கச்சா எண்ணையின் விலையினை நிர்ணயம் செய்தனர். இது உலக நாடுகளின் சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு நிலைப்பாட்டினை உருவாக்கியது.

கச்சா எண்ணெய் உற்ப்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் நாடுகளின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்தன.
ஆனாலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து டாலரில் விற்கப்பட்டது.

இது ஏன் தெரியுமா?

ஆரம்ப நாட்களில் வெளிநாடுகளுடனான வர்த்தகத்திற்கு பண்ட மாற்று முறையினைப் பயன்படுத்தினர். ஆனால் இது வணிகத்தில் இரு சாராருக்கும் இடையே ஒரு வித ஏற்ற தாழ்வான வர்த்தகத்தினை ஏற்ப்படுத்தியது.
பின்னர் வர்த்தகம் தங்கத்தில் நடைபெற்றது.
ஆனால் தங்கம் வர்த்தகத்திற்கு போதுமான அளவு உற்ப்பத்தி செய்யப்பட வில்லை. எனவே உலக நாடுகளிடையே வாணிகம் செய்ய ஒரு பொதுவான நாணயம் தேவைப்பட்டது. ஆனால் அந்த பொதுவான நாணயத்தின் மதிப்பில் ஒரு நிச்சயத்தன்மையும், நண்பகத்தன்மையும் தேவைப்பட்டது.

இதற்க்கு அந்த நாணயம் வளர்ந்த நாடுகளில் ஒன்றின் நாணயமாகத்தான் இருக்க முடியும். 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம், இராணுவம் என்று எல்லாதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்காவின் டாலரை பொது நாணயமாக ஏற்க மற்ற நாடுகளால் முடிவு செய்(விக்கப்)யப்பட்டது.

ஏனெனில் 1940-45 களில் நடைபெற்ற உலகப்போரில் எல்லா நாட்டு பொருளாதாரமும் பின்னோக்கிப் பயணம் செய்யில் அமெரிக்க டாலர் மட்டும் அவ்வளவாக வீழ்ச்சியடைய வில்லை. அமெரிக்க உலகப்போரில் அவ்வளவாக பங்கேற்காவிட்டாலும் (!!??) அந்த நாணயத்தின் மதிப்பில் ஏற்ற தாழ்வுகள் எக்காலத்திலும் குறைவாக் இருக்குமாறு அதன் ஆட்சியாளர்கள் அந்நாட்டை திறம்பட வளர்ச்சிப்பாதையில் செலுத்திவிட்டனர்.

கடந்த ஆண்டு இறுதியில் உலகமுழுதும் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும் கூட டாலரின் மதிப்பில் மிகப்பெரிய அளவிலான ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பதை மறுக்க முடியாது.
ஆகவே தான் அனைத்து நாடுகளும் வர்த்தகத்திற்கு டாலரை ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.
இதன் காரணமாகத்தான் அந்நியச் செலாவணி என்றொரு நாணயப் பரிவர்த்தன முறையினை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கத் துவங்கின.


அந்நியச் செலாவணி பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்...
(தொடரும்....)

கச்சா எண்ணெய் -1

· 2 கருத்துகள்

(இது ஒரு தொடர் பதிவு.... இன்று முதல் ஆரம்பம் )


பஞ்ச பூதங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
எங்கோ படித்தது நினைவிருக்கிறது....

நிலம்,
நீர்,
காற்று ,
ஆகாயம்,
நெருப்பு.


இவற்றில் ஒன்று குறைந்தாலும் உலகில் எந்த ஒரு ஜீவராசியும் வாழ தகுதியற்றதாகிவிடும். அகவே தான் இவை பஞ்ச பூதங்கள்.
இவை இயற்கையால் உருவாக்கப்பட்டவை. நம்மால் உருவாக்கப்பட்டவை அல்லவே.19 ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வேண்டுமானால் நாம் மேற்க்கண்ட வரிகளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்
ஆனால் இவற்றுடன் இப்போது ஆறாவதாக ஒன்றை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம்.


அது கச்சா எண்ணெய்;19 ம் நூற்றாண்டில் உபயோகமற்ற திரவம் என்று கருதப்பட்ட கச்சா எண்ணெய் மட்டும் இன்று இல்லாவிட்டால் நீங்களும், நானும் ஏன் நம் நாட்டு பிரதமரும் கூட பட்டினிதான்....உங்களால் எங்கும் செல்ல முடியாது;


உங்களுக்கு உணவு கிடைக்காது;


மருந்து கிடைக்காது;


போக்குவரத்து இல்லை;

உற்ப்பத்தி இல்லை;

முன்னேற்றம் இல்லை;

பிறகென்ன!!!


மீண்டும் உலகம் கற்க்காலத்திற்க்கு திரும்ப வேண்டியத்துதான்;கட்டிடங்களை இடித்து வயல்வெளியாக்க வேண்டும்;

சாலைகளை தகர்த்து வாய்க்கால்களை உருவாக்க வேண்டும்;

வீடுகளை இடித்து ஏரிகளை உருவாக்க வேண்டும்;
நடக்கிற காரியமா இது?நீங்கள் கூறலாம்....


மின்சாரம் உள்ளதே என்று!


ஏற்கனவே நாளுக்கு மூன்று மணிநேரம் அதற்க்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள்; மழைக்காலத்திலேயே இப்படி என்றால் கோடையில் கேட்கவும் வேண்டுமா?சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் அந்த இலக்கை அடைவது மிகவும் கடினம்;
48000 ரூபாய் செலவில் சூரிய ஒளியினை மின்சாரமாக்கு இயந்திரத்தை அமைத்தால் ஒரு குடும்பம் அதனால் பயனடையுமாம்; இதில் அதனை பத்திரமாக பராமரிக்க வேண்டும்;எவ்வளவு செலவாகும்?


எவ்வளவு இடம் தேவைப்படும்?


hydro power:
இங்கு குடிப்பதற்கு நீர் இல்லை இனி எங்கு மின்சாரம் தயாரிக்க முடியும்?wind energy:
இந்த வருடம் கேள்விக்குறி...
வருங்காலமும் அப்படித்தான்.
ஆக கச்சா எண்ணெய் இல்லாவிட்டால் உலகம் பகலிலும் இருண்டுவிடும்;


இது படி பார்த்தால் கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் இன்னும் 50 வருடங்களுக்கு கவலையின்றி வாழும்.
அவர்கள் சொன்ன விலைக்குத்தான் நாம் வாங்க வேண்டும்;
சென்ற ஆண்டில் 147$ க்குச்சென்ற கச்சா எண்ணெய் விலை பின் 35$ க்கு குறைந்து தற்ப்போது மீண்டும் 80$ க்கு சென்று விட்டது.
இதற்காகத்தான் எப்போதும் பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி இதனால் மற்ற அத்தியாவசிய பொருள்களின் விலையும் ஏறி எல்லாம் கடைசியில் வந்து நம் தலையில் விழுகிறது...ஆனால் நாம் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை... இன்னும் 160 cc, 180 cc, 220 cc என்று பெற்றோலை உறிஞ்சும் வாகனங்களை வாங்குவதில் குறியாக இருக்கிறோம்;அலுவலகத்தினானாலும், வீட்டிலானாலும் காரிலும் A/C இல்லாமல் இருப்பதில்லை;வாரமொருமுறை வரும் குடிநீரையும் அது வந்தபின் வீணாக்குவோம்;தவறை நம் பக்கம் வைத்துக்கொண்டு அரசை குறை கூறுவதை என்று தான் நிறுத்தப்போகிறோமோ தெரியவில்லை;கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்தால் எதிர்காலம் நம் கையில்...

(தொடரும்.....)(அதிருக்கட்டும் நாம் ஏன் கச்சா எண்ணையை டாலரில் வாங்கு கிறோம் என்று தெரியுமா...????டாலர்; நாட்டின் பொருளாதார எதிர்காலம்; பணவீக்கம்; பங்கு சந்தை பற்றி வரும் நாட்களில் எழுதவிருக்கிறேன் ... காத்திருங்கள்.......)(ஓட்டு போடுபவர்கள் என்னை நண்பனாக (follower) ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)


நன்றி!

டைம் பாஸ்.....!

· 8 கருத்துகள்


உங்கள் புத்திசாலித்தனத்தினை பரிசோதிக்கும் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன...அதற்கான பதில்களை ஒவ்வொரு கேள்விக்கும் கிழே கொடுத்துள்ளேன். select all கொடுத்து பார்த்துக்கொள்ளுங்கள்...கேள்விகள்:

1. மூன்று பூனைகள் மூன்று எலிகளை தின்ன மூன்று நிமிடங்கள் ஆகும் என்றால் நூறு பூனைகள் நூறு எலிகளை தின்ன எத்தனை நிமிடங்கள் ஆகும்?

பதில்:

நூறு என்று நீங்கள் கூறியிருந்தால் உங்கள் தலையில் நீங்களே

குட்டிக்கொல்லுங்கள், சரியான விடை 'மூன்று'.2. டாக்டர் உங்களிடம் மூன்று மாத்திரைகளை கொடுத்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரையை சாப்பிடச்சொல்கிறார். மூன்று மாத்திரைகளையும் உண்ண எவ்வளவு நேரம் ஆகும்?

பதில்: ஒன்றரை என்று சொன்னவர்கள் மறுபடியும் தலையில்

குட்டிக்கொல்லுங்கள், சரியான விடை 'ஒன்று'.3. ஜூலியின் அப்பாவிற்கு ஐந்து குழந்தைகள்

nana

nene

nini

nono

?

ஐந்தாவது குழந்தையின் பெயரைகண்டுபிடியுங்கள்...

பதில்:

nunu என்று பதில் சொன்னவர்கள் மீண்டும்..... வேண்டாம் இப்போது உங்கள் காதை

நீங்களே திருவிக்கொள்ளுங்கள். சரியான பதில் "ஜூலி"


4. நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். (நான் என்ன உசேன் போல்ட்டா என்று கேட்பது காதில் விழுகிறது. ஒரு பேச்சுக்குதானே......! சும்மா நெனைங்க!!!) நீங்கள் இரண்டாவதாக ஓடுபவரை முந்திச்சென்றால், இப்போது நீங்கள் எந்த இடத்தில் ஓடுகிறீர்கள்?


முதலிடத்தில் அல்ல; இரண்டாவது இடத்தில் தான்!!!!


5. அதே ஓட்டப்பந்தயத்தில், நீங்கள் கடைசி இடத்தில் இருப்பவரை முந்தி ஓடினால் இப்போது உங்கள் நிலை?

ஹா ஹா ஹா!!! கடைசியில் ஓடுபவரை எப்டிங்க முந்த முடியும்? அவரால்தான்

மத்தவங்கள முந்த முடியும்.6. கால்குலேடர எடுக்காம, நிதானமா யோசிக்காம சட்டுன்னு பதில சொல்லுங்க...

1000 உடன் 40 ஐ கூட்டுங்கள்;

மறுபடியும் 1000 ஐ கூட்டுங்கள்;

இப்போது 30 ஐ கூட்டுங்கள்;

மறுபடியும் 1000 ஐ கூட்டுங்கள்;

இப்போது 20 ஐ கூட்டுங்கள்;

மீண்டும் 1000 ஐ கூட்டுங்கள்;

அதோடு 10 ஐ கூட்டி பதிலை சொல்லுங்கள்.


பதில் 5000 என்று சொன்னவர்கள் தோப்புக்கரணம் போடவேண்டியதுதான். பதில் 41007. 30'பாதியால் ' வகுத்து 10 ஐ கூட்டினால் என்ன வரும்?


பதில்: 70 ( 30 வகுத்தல் ½ + 10)


இப்போ கொஞ்சம் மொக்கையான கேள்விகள்:


(டேய்...! நீ இதுவரைக்கும் சொன்னதே அப்டிதான் இருந்துச்சுன்னு சொல்லக்கூடாது.... ஆமா!!!)


8. நம்ம பிரதமரோட பேறு கி.பி.1952 ல என்ன?


அப்பவும் மன்மோகன் சிங்குதான்! அவரு இன்னும் பேர மாத்தல!

ஹி! ஹி!


9. நம்ம ஆளு ஒருத்தர் அமெரிக்காவுல கடையில போய் காப்பி ஆர்டர் பண்ணினார். சர்வர் காப்பிய டேபுள் மேல வச்சுட்டு போய்ட்டார். திடீர்னு நம்ம ஆளோட friend ஒருத்தர் கடைக்கு வந்தார். நம்மாளப் பார்த்ததும் இவருடன் அமர்ந்து விட்டார். பின்

what is before u? என்று கேட்டார். நம்ம ஆளு 'டீ' அப்டீன்னு பதில் சொன்னார். ஏன்?


ஏன்னா.... U க்கு முன்னாடி T தான...!!! ஹி! ஹி!


அப்டியே தலைல, காதுல கைல iodex தடவிக்கிட்டே எல்லாரும் ஓட்டுபோடுங்க பாப்போம்!!!


( சும்மனாச்சுக்கும்...! எனக்கு தெரியாதா நம்ம பதிவர்கள் எல்லாரும் புத்திசாளிங்கன்னு...!!!??? ஹி! ஹி! ஹி!)நம்ம எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிருவோம். அதனால இத உங்க வீட்டுல இருக்கற குழந்தைகள் கிட்ட கேளுங்க. அவுங்க தப்பா பதில் சொல்றதே ஒரு அழகுதான்.(ஓட்டு போடுபவர்கள் என்னை நண்பனாக (follower) ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)நன்றி!

நெஞ்சை நெகிழ்விக்கும் ஒரு உண்மைசம்பவம்.......

· 4 கருத்துகள்

நெஞ்சை நெகிழ்விக்கும் ஒரு உண்மைசம்பவம்.......


Ann Hernandez என்ற பெண்ணும் Alan Tomaska என்பவரும் அமேரிக்காவில் வசிக்கும் நண்பர்கள்.


Hernandez இன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இருவரும் கடற்க்கரை சென்று மது அருந்துவது வழக்கம். அதன் பின் Hernandez காகிதத்தில் ஒரு செய்தியினை எழுதி அதனை மது பாட்டிலில் அடைத்து கடலில் வீசிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள். இது Tomaska விற்கு வேடிக்கையாயிருக்கும். ஆனால் Hernandez இதை தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் செய்து வந்தாள்.அவள் அவ்வாறு வீசிய பாட்டில்களில் ஒன்றினை ஆறு வருடங்களுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டு தம்பதிகள் Michel and Daniele Onesime 3000 மையிலுக்கு அப்பாலுள்ள பிரான்ஸ் நாட்டு கடற்கரையில் பார்த்துள்ளனர்.அதில் அவளுடைய பெயரும் விலாசமும் இருந்துள்ளது. அந்த தம்பதிகள் அந்த விலாசத்திற்கு கடிதம் எழுதினர். ஆனால் அக்கடிதம் திரும்பி இவர்களிடமே வந்தது.


அவளது ஊருக்கு மின்னஞ்சல் அனுப்பியபோது அவ்வூரின் president இடமிருந்து பதில் வந்தது."அவள் அறுவை சிகிச்சையின் போது இறந்துவிட்டால் " என்று...பின் அந்த பாட்டில் கடிதம் பற்றி அவளது நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.அதனை கேள்விப்பட்ட அவளது நண்பர்கள் நெகிழ்ந்து போயினர்...கடிதம் , குறுந்தகவல் , தொலைபேசி இல்லாத இவர்களுக்கிடையிலான தொடர்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. Michel and Daniele Onesime தம்பதிகள் Hernandez வை பற்றிய விவரங்களை அவளது நண்பரிடம் கேட்டு வாங்கிச்சென்றுள்ளனர்.....இவர்களது கடல் கடந்த நட்பு உருவாகும்போது Hernandez உயிருடன் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான விஷயம்....இதனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சென்று பார்க்கவும்.(ஓட்டு போடுபவர்கள் என்னை நண்பனாக (follwer) ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets