ஒரு ரூபாய் நாணயங்களை பற்றி ஒரு ஷாக் நியூஸ்...

· 1 கருத்துகள்


"சில்லற இல்லைனா எதுக்குயா பஸ்ல ஏறுரீங்க.....?"


இந்த திட்டு வாங்காத பேருந்து பயணிகள் இருக்கவே முடியாது.


ஆனால் அந்த ஒரு ரூபாய் சில்லறையை வைத்து சிவாஜி படத்தில் ரஜினி உலக பணக்காரராகி விடுவார். நாமும் அவர் ஸ்டைல்ல பணக்காரர் ஆகிடலாம்னு பாத்தா ஒரு ருபாய் தேவப்படுதே!!!!!!


சரின்னு கடைக்கு போய் இரண்டு ரூபாய் கொடுத்து சில்லறை கேட்டால் ஒரு ரூபாய்க்கு நான்கு ஐம்பது காசுகள் தான் கிடைக்குது. ஒரு ரூபாய் நாணயமே இல்லை.


எங்க போச்சு எல்லாம்?


எல்லாம் கடத்தப்பட்டுவிட்டன. ஆம் ...!!! ஒரு ரூபாயை கடத்தி ஒரு கும்பல் உலக பணக்காரனாகி வருகிறது....


மேற்க்கொண்டு படியுங்கள்....ஒரு ரூபாய் நாணயங்களின் கடத்தலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் ஒரு ரூபாய் நாணயங்களைப்பற்றி தெரிந்து கொள்வோம்.ஒரு ரூபாய் நாணயம் ferritic stainlesssteel என்ற உலோகக்கலவையால் ஆனது. இதன் முக்கியமான உலோகங்கள் இரும்பு, குரோமியம் மற்றும் நிக்கல். இவற்றில் குரோமியம் 20 சதவிகிதத்தில் உள்ளது. இதன் விலை மிகவும் அதிகம். அடுத்து நிக்கல் 5 சதவிகிதம் உள்ளது. இதன் விலையோ மிகவும் அதிகம். நிக்கல்(1கி கி
5000 ரூபாய் (இந்தியாவில் ) ). 4.85 கிராம் எடையுள்ள நாணயத்தில் 2 கிராம் அளவில் இந்த இரண்டு உலோகங்கள் உள்ளன. கனிம வளம் குறைவான நாடுகளில் இவற்றின் விலை மிக அதிகம். எனவே தான் ஒரு ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன.

இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் குரோமியம் உற்ப்பத்தி அதிகம்.கனடா, தாய்லாந்து நாடுகளை தவிர மற்ற நாடுகளில் நிக்கல் உற்ப்பத்தி குறைவு. எனவே இங்கு விலை குறைவு. ஆனால் மற்ற நாடுகளில் இதன் விலை பல மடங்கு அதிகம் . ஏனெனில் இதன் பயன்பாடு அதிகம். அதிக துருப்பிடிக்காத தன்மை கொண்டதால் இவை இரண்டும் எல்லா வாகனங்களின் உலோக மேற்ப்பரப்பில் coating ஆக பயன்படுகிறது. பாத்திரம் தயாரித்தல், எஞ்சின் பாகங்கள், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு என இதன் பயன்பாட்டினை சொல்லிக்கொண்டே போகலாம்.


இந்தியாவில் இருந்து இந்த நாணயங்கள் பங்களாதேஷ் க்கு கடத்தப்பட்டு பின் நாணயங்கள் உருக்கப்பட்டு உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்.


'தொலைபேசி அழைப்பு, எடை பரிசோதிக்கும் இயந்திரம்,சிறுவர்கள் விளையாடும் இயந்திரம், பிச்சை என ஒரு ரூபாய் நாணயங்கள் ஒட்டு மொத்தமாக சேர்க்கப்பட்டு கிடைப்பதால் இதனை சேகரிப்பது சுலபம்

. பணத்திற்க்காக சிலர் ஒரு ரூபாய் நாணயங்களை மொத்தமாக கடத்தல் காரர்களுக்கு விற்று விடுகின்றனர்.


மனிதன், தங்கம், சந்தன மரம், மணல், ரேஷன் அரிசி இந்த வரிசையில் ஒரு ரூபாய் நாணயமும் சேர்ந்து விட்டது. இதனால் தான் ஒரு ரூபாய் நாணயத்தின் தட்டுபாடு அதிகமாகிவிட்டது.


இதெல்லாம் பேருந்தில் நம்மை திட்டும் கண்டக்டருக்கு தெரியவா போகிறது...?


சரி அப்படியே ஒரு பெருமூச்சு விட்டுட்டு ஓட்டு போட்டுட்டு போங்க.....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets