பிறகு எதற்க்கடா சுதந்திரதினம்....?

1947 ஆகஸ்ட் 15:

இரவு நேரத்தில் இந்தியாவின் கோடிக்கனக்கான மக்கள் உரக்கம் இன்றி தங்கள் நாட்டின் சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிரார்கள்; இனிப்புகளை பரிமாரிக்கொள்கிறார்கள்.

ஆனால் இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தா என்று பலராலும் சொல்லப்படும் மகாத்மா காந்தி,,, கொல்கத்தா நகரின் ஒரு வீட்டில் அமைதியாக தன் உடையை நூற்றுக்கொண்டிருக்கிறார். அவரது முகம் அவரது உள்ளத்தின் தனலை கொண்டிருக்கவில்லை.

ரூஸ்வெல்ட், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா எனும் உலகம் போற்றும் தலைவர்களால் பாராட்டப்பட்டவர் தற்போது அமைதியாக தன் உடையை நூற்றுக்கொண்டிருக்கிறார். தன் என்னம் ஈடெரவில்லை என்பதை நினைத்து வருத்ததில் அமைதி பூன்டிருன்தார். பின் நாளில் நடக்க இருப்பதை எண்ணி மனம் வெம்புகிறார்...

அஹிம்சையின் நாயகன்...

அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைக்கா விட்டாலும் அவர் பெயரில் அமைதிக்கான நோபல் பரிசொன்று வ்ழங்கப்பட்டது. உண்மையில் அவர் இன்னும் சிரிது காலம் வாழ்ந்திருன்தால் அவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கும்.

சரி நாம் மேற்கொன்டு தொடருவோம்...

நமது தமிழ் நாட்டின் முதல் முதலமைச்சர் யார் தெரியுமா...?

திரு சுப்பராயலு (1920-1921)

ஆம்... நம்மவர்கள் அப்போதே ஆளத்துவங்கி விட்டார்கள்.
சுதந்திரம் பெறாமலேயே ஆள துவங்கிவிட்டனர்.

அவர்களுக்கு அடிமையாய்... நம் மக்களுக்கு எஜமானராய்... எதனால்......?

ஆங்கிலேயர்களுக்கு சலாம் போட்டவர்களுக்கு எல்லாம் தொழில் துவங்கவும், தொழிலதிபர் ஆகவும் வாய்ப்பு கிடைத்ததனால்... வசதி படைத்தோருக்கு எல்லாம் (அப்போது பிராமணர்கள் எல்லாம் வசதி படைத்தவர்களாக இருன்தனர்) அரசு வேலை கிடைத்ததினால்... பண்ணையக்காரர்களுக்கு 'பதுக்க' அனுமதி வழங்கப்பட்டதினால்...

இது ஒரு புறம்...

மற்றொருபுறம் விலைவாசி உயர்வினால் பஞ்சம், பட்டினி...(வழக்கம் போல் ஏழைகளின் வீட்டில் தான்...)

காந்தியடிகள் இந்த ஏற்ற தாழ்வுள்ள மக்களுடன் தான் விடுதலைக்காக அஹிம்சை எனும் ஆயுதம் ஏந்தி போராடத்துவங்கினார்.


இந்த ஏற்ற தாழ்வுகளை களைய வேண்டும்;
ஏழைகளின் பஞ்சம் போக்க வேண்டும்;
சுதந்திரம் பெற்றாக வேண்டும்...

யாரை உடன் அழைப்பது...? யாரை நம்பி போராடுவது....?

பணக்காரர்கள் விடுதலைக்கு பாடுபடவில்லை...
ஏழைகள் தங்கள் உணவுக்காக மட்டுமே பாடுபடும் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் தான் காந்தியடிகள் இந்த ஏற்ற தாழ்வுள்ள மக்களுடன் விடுதலைக்காக அஹிம்சை எனும் ஆயுதம் ஏன்தி பொராடத்துவங்கினார்.

தன் சொத்து சுகங்களை துரந்து, அரை கதர் ஆடை உடுத்தி புறப்பட்டார்.

உண்ண உணவு இல்லாதவர்கள் அவருடன் இணைந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்; வேலை ஏதுமற்றோர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர்; உப்பு வாங்க திரானியற்றோர் உப்புசத்யாகிரகத்தில் பங்கேற்றனர்.

தொழிலதிபர்களும், வசதி படைத்தொரும், அரசு ஊழியர்களும் தத்த்ம் வேலையை மட்டுமே பார்துக்கொன்டிருந்தனர்.

நீதித்துறை,

அது ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது கைகூலிகளுக்கும் அடிபணிந்து நின்றது.

காந்தியடிகள் 1938ல் சிறைடயில் இருந்தார்:

6 வருட சிறை தன்டனை:

அந்த காலகட்டத்தில் சுதந்திரபோராட்டத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லை... அதற்கு காரணம் யாருக்கும் அக்கரை இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. (ஆனால் அப்போது சுபாஷ் படை திரட்டும் பனியில் ஈடுபட்டிருன்தார்)

1947 ஆகஸ்ட் 15

இந்தியா சுதந்திரம் பெற்றது...

ஆனால் இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தா என்று பலராலும் சொல்லப்படும் மகாத்மா காந்தி,,, கொல்கத்தா நகரின் ஒரு வீட்டில் அமைதியாக தன் உடையை நூற்றுக்கொண்டிருக்கிறார். அவரது முகம் அவரது உள்ளத்தின் தனலை கொண்டிருக்கவில்லை.


"சுதந்திரம் பெற்றதும் காஙிரஸை கலைத்துவிடுங்கள்; இல்லவிட்டால் அது லஞ்ச லாவன்யத்தையும் ஊழலையும் வளர்த்து நாட்டை வேரருத்துவிடும்..." -காந்தியடிகள்.

இன்று நமது கரன்சி நோட்டுகளில் வெள்ளை பல் தெரிய சிரிக்கும் இவரது சொல்லைக் கேட்க அன்று யாருக்கும் மனமில்லை.

அதன் பின் அனைத்து நிகழ்வுகளும் அவரது கட்டுப்பாட்டை மீறி நிகழவாயின.

சுதந்திரத்திற்கு பின் அனைத்து நிகழ்வுகளில் இருந்தும் காந்தியடிகள் பெரும்பாலும் விலகியே நின்றார்.

இறுதிவரை தன் கோட்பாடுகளில் உறுதியாய் நின்று மரணத்தயும் தழுவினார்.

இன்று: 2009 ஆகஸ்ட் 15

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏறக்குறைய முடிந்துவிட்டன.
ஏறக்குறைய 62 ஆண்டுகள் முடிந்து விட்டன.

காந்தியடிகள் எதற்க்கு பாடுபட்டாரோ அந்தநிலையை இன்னும் நாம் அடையவில்லை… அவரது சுமைகள் இரக்கப்படவில்லை...

அன்றும் இன்றும்
அன்று:

ஆங்கிலேயர்களுக்கு சலாம் போட்டவர்களுக்கு எல்லாம் தொழில் துவங்கவும், தொழிலதிபர் ஆகவும் வாய்ப்பு கிடைத்து... வசதி படைத்தொருக்கு எல்லாம் (அப்போது பிராமணர்கள் எல்லாம் வசதி படைத்தவர்களாக இருந்தனர்) அரசு வேலை கிடைத்தது... பண்ணையக்காரர்களுக்கு 'பதுக்க' அனுமதி வழங்கப்பட்டது...

இன்று:
பனவசதியுடன் அரசியல் செல்வாக்கு பெற்றோர் மட்டும் தொழில் துவங்கவும், தொழிலதிபர் ஆகவும் வாய்ப்பு கிடைக்கிறது... அரசு வேலைகளில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது... அரசியல் செல்வாக்கு பெற்றோர் பதுக்கலில் ஈடுபடுகிறார்கள்...

அன்று:
மறுபக்கம் விலைவாசி உயர்வினால் பஞ்சம், பட்டினி...(வழக்கம் போல் ஏழைகள் வீட்டில் தான்...)

இன்று:
அதே விலைவாசி உயர்வு, அதே வேலையின்மை....

அன்று:
பணக்காரர்கள் விடுதலைக்கு பாடுபடவில்லை...

இன்று:
பணக்காரர்கள் ஓட்டு போடுவது இல்லை... (ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களிடம் இவர்களுக்குத்தான் முதல் மரியாதை. இவர்களைத்தான் முதலில் சந்திப்பர்; ஓட்டு போட்டவரை மறந்துவிடுவர்.)

அன்று:
உண்ண உணவு இல்லாதவர்கள் அவருடன் இனைந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்; வேலை ஏதுமற்றோர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர்; உப்பு வாங்க திரானியற்றோர் உப்புசத்யாகிரகத்தில் பங்கேற்றனர்.

இன்று:
இன்று அவர்கள் ஓட்டு போடும் அடிமைகளாக... சிந்திக்கத்தெரியாத குருடர்களாக...

அன்று:
நீதித்துறை, ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது கைகூலிகளுக்கும் அடிபணிந்து நின்றது.

இன்று:
நீதித்துறையில் அரசியல் கட்சிகளின் தலையாட்டி பொம்மை... (நீங்கள் பேருந்தில் யாரை வேண்டுமானாலும் உயுருடன் வைத்து எரிக்கலாம்; நடுப்பகளில் என்த ஒரு தொலைக்காட்சி அலுவலகத்திலும் புகுந்து யாரை வேண்டுமானாலும் கொல்லலாம். ஆனால் நீங்கள் கட்சி சார்புடையவர் எனில் உங்களுக்கு தண்டணை இல்லை. தண்டணை உண்டு... ஆட்சி மாற்றம் வந்தால்???)


அங்கே ஈழத்தில் நாம் செத்துக்கொண்டிருக்கிறோம். அதனைத்தீர்க்க ஆளில்லை….. இங்கு அம்பானி சகோதரர்களிடையே பிரட்சனையாம்!!! அதற்க்கு ஆட்சி கவிழ்ந்தது போல் துடிக்கிறார்கள்.

பத்து ரூபாய் திருடினால் அவனை திருடன் என்கிறோம்... பல கோடி திருடுபவனுக்கு பதவி அளிக்கிறோம்...

அடே முட்டாள் மக்களே... ஓட்டு போடும் இயந்திரமே... என்ன சுதந்திரம் கிடைத்துவிட்டதென மார்தட்டி பெருமைப்படுகிறாய்? எதற்க்கடா சுதந்திரதினம் கொண்டாடுகிறாய்....?

ஓட்டிற்க்காக பிச்சை வாங்கி உன் தாயை விற்று (பாரதத்தாய்… அட நம்ம இந்தியா தாங்க...) வாழும் அற்ப புழுக்களே... கொஞ்சம் சிந்தியுங்கள்...

தொழில் நுட்பட்தைத்தவிர வேறு எதில் அன்றைக்கும் இன்றைக்கும் வேறுப்ட்டுள்ளோம்...?

எல்லோரிடமும் தன் தாய்திரு நாட்டில் சொல்லிக்கொல்ல காணி நிலம் இருக்கிறதா?

விவசாயத்தில் தன்னிறைவு பெற்றோமா?
அட... உண்ண உணவில்லாத கூட்டத்தயாவது குறைக்க முடிந்ததா?

பிறகு எதற்க்கடா சுதந்திரதினம்....?

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஓட்டிற்க்காக பிச்சை வாங்கி உன் தாயை விற்று (பாரதத்தாய்… அட நம்ம இந்தியா தாங்க...) வாழும் அற்ப புழுக்களே... கொஞ்சம் சிந்தியுங்கள்...

பெயரில்லா சொன்னது…

மிகச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இதை விளங்கிக்கொள்ளும் தன்மை நம் தமிழர்களிடம் இருக்கிறதா என்பது தான் கேள்வி குறி?

ஆடுகிறவளை ஆடவிட்டு பார்க்கவேண்டும். கலை கூத்தடிப்பவனை கூத்துமேட்டில் பார்க்கவேண்டும். இவர்கள் எல்லாம் தமிழனுக்கு தலைவன் ஆனால் தமிழன் என்றைக்குமே அடிமைதான். அடிமைதான்.. அடிமைதான்....

yalini சொன்னது…

உண்மையில் நாட்டில் இப்போதுள்ள நடை முறையை அப்படி எழுதியுள்ளீர்கள்
நம் தாயை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனகுமுறல்...!

என் நடை பாதையில்(ராம்) சொன்னது…

இந்த பதிவு எழுதிய போது போதிய வரவேற்ப்பு இல்லை. ஆனால் இப்போது உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும் போது மன நிறைவாக உள்ளது யாழினி. நன்றி....

Lee சொன்னது…

Very good

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets