தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸா? பிஜெபியா?

தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸா? பிஜெபியா?

13 /05 /2009 --- தமிழ் நாட்டில் மக்களவை தேர்தல் நடை பெரும் நாள்.


நாட்டின் தலைவிதியை நிர்ணையம் செய்யும் ஒரு சில மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. இந்நிலையில் நாம் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முன் கடந்த கால நிகழ்வுகளையும் அலச வேண்டியுள்ளது.


13 December 2001 -- பிஜெபி ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்சல் குரு என்ற தீவிரவாதி உயுருடன் பிடி பட்டான். நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை அளித்தது.


பிஜெபி ஆட்சிக்கு பின் வந்த காங்கிரஸ் இன்று வரை தண்டனையை நிறைவேற்றவில்லை. இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து காங்கிரஸ் இன்று வரை தண்டனையை நிறைவேற்றவில்லை என்பது பிஜெபிஇன் குற்றச்சாட்டு.

பாராளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற வேதனை இன்னும் நம்மிடம் மட்டும் உள்ளது.


December 24, 1999 -- கந்தகார்,கத்மண்டு விமானம் கடத்தப்பட்டது. தீவிரவாதிகளின் நிபந்தனையின் பெயரில் சில தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

அப்போதைய உள்துறை அமைச்சரின் செயல்பாடு சரி இல்லை என தற்ற்போது காங்கிரஸ் பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

குண்டு வெடிப்புகள், நாள், இறந்தோர்:

New Delhi October 2005 -------- 62
Varanasi march 2006 -------- 26
Mumbai july2006 ---------- 200
Malegaon. september2006 ----------- 30
train february 2007 -------- 66
Hyderabad may2007 ------------ 11
Hyderabad auguest2007 ------------ 30
Ajmer october2007 ---------- 2
Rampur january2008 ------------ 8
Jaipur may2008 ----------- 65
Bangalore july2008 ------------- 2
Ahmedabad july2008 ------------- 30
Delhi september2008 ------------ 24
Delhi september2008 ------------ 1
Guwahati april2009 -------------- 6

(source:http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080058674)

இதில் தமிழகத்தில் ஒரு குண்டு வெடிப்பு கூட இல்லை என்று நம்மால் பெருமைப்பட இயலாது...
தற்போதும் மும்பை நரிமன் இல்ல தாக்குதலில் 160 கு மேற்ற்பட்டோர் இறந்தும், அதற்கான காரணம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் நாம் இன்றுவரை எந்த நடவடிக்கையும் பாகிஸ்தான்க்கு எதிராக எடுக்க வில்லை என்பது நிதர்சனமான உண்மை.
மாறி மாறி இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினாலும் இறப்பது அப்பாவி பொது மக்கள் தான்.
எது எப்படியோ, நாம் நமது கடமையை சரிவர செய்தாக வேண்டி உள்ளது....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets