நான் ரசித்த விளம்பரங்கள் 2009....

· 8 கருத்துகள்

நான் ரசித்த விளம்பரங்கள் 2009:
விளம்பரங்களின் காணொளிகள் தமிழில் கிடைக்கவில்லை.... தொலைக்கட்சியில் பார்த்துக் கொள்ளுங்கள்.


10. AIRTEL:
ஒரு சின்ன பையன் தன் தந்தையின் MOBILE NUMBER ஐ தன் நண்பர்களிடம் தரும் விளம்பரம். பார்க்க நன்றாக இருக்கும்.


9. HAMAM SOAP
“சோப்பால இருக்குமோ” என ஒரு குழந்தையின் அம்மா கேட்பது நன்றாக இருக்கும். (ஹி! ஹி! அந்த விளம்பர நடிகையை எனக்கு கொஞ்சம் பிடிக்கும்! அதான். )

8. BRU: ஆனந்தம் BRUவுடன் ஆரம்பம்.

10% இப்போ அதிகம் என்பதை மிக அழகாக சொல்லும் விளம்பரம்.

7. AIRTEL:
இவர்கள் தான் என் நண்பர்கள் என்று ஷாருக்கான் தன் பழைய நண்பர்களை நினைவுகூறும் விதம் மிக அழகாக இருக்கும்.

6. VIVEL SHAMPOO:
கல்லூரி மாணவர்களின் கிண்டலும் கேளியுமாக, இரு அழகான பெண்களுடன் கலக்கலாக இருக்கும். (த்ரிஷா கூட படிக்க கொடுத்து வச்சிருக்கனுமே!)

5. RIN: தன்னம்பிக்கை இவ்வளவு பிரகாசிக்கும் போது உடை பிரகாசிக்க்க் கூடாதா?

“ரெண்டு சக்கரம் தான் வித்தியாசம் அங்கிள்; நாளைக்கு அதுவும் வந்துரும்” என அந்த பையன் சொல்லுவது நல்லாயிருக்கும்.


4. CARBURY SHOTS: ரெண்டு ரூபாயில ரெண்டு லட்டு

சிரிப்பை வரவழைக்கும் விளம்பரம். காட்டிக் கொடுத்தால் கொன்றுவிடுவேன் என்று சொல்லிவிட்டு தப்பியொடும் திருடன் பணப்பையை அங்கேயே தவர விடுவதும் பின் அவனை காட்டிக் கொடுப்பதும், அவனை காட்டிக் கொடுத்தால் சன்மாணம் என்று தெரிந்த்தும் சந்தோஷப் படுவதும் ரொம்பவே சிரிப்பை சிரிப்பை வரவழைக்கும்.
(இதன் காணொளி கிடைக்கவில்லை.)


3. DOCOMO: DO THE NEW
எதற்காக எல்லாரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக பார்த்துவிட்டு சந்தொஷமாக பாடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். அதிலும் அந்த மூன்று பெண்களும் ரொம்ப அழகா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
க பாடுவார்கள். (வேறு எதுனாச்சும் எதிர்பாத்தீங்களா?)

2. SURF EXEL:

நம்ம ரோஸி மிஸ் நாய் குட்டி செத்து போச்சு!!! ஊவ்வ்வ்வ்வ்.... என்றதுமே எனக்கு சிரிப்பு வந்திடும். அந்த பையனின் செயல்கள் வேடிக்கையாயிருக்கும்.

1. BINGO: NO CONFUSION GREAT COMBINATION

இந்த BINGO விளம்பரங்களை அடிசிக்க ஆளே இல்லை. எப்படிதான் யோசிப்பாங்களோ? இந்த விளம்பரத்தில் வரும் அந்த பெண்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ணின் கையில் இருக்கும் BINGO ரொம்ப சுவையா இருக்கும். வாங்கி சாபிட்டு பாருங்க... (ஹி! ஹி!)


ஓக்கே! இப்போ முதல் இடத்தையும் தாண்டி ஒரு விளம்பரக் காணொளி. (முதல் இடத்தையும் தாண்டியா? எப்புடி?) ஏன்னா இதில் வரும் நடிகர்(?) எதையும் தாண்டுவார். இதை நீங்க ரொம்பவே ரசிச்சு(?) பாப்பீங்கன்னு நம்பி போட்டிருக்கேன். பாருங்க....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஒரு வாக்காளருக்கு நாம் ஓட்டுப் போடுவதற்க்கான காரணங்கள்:

· 8 கருத்துகள்

1. உங்களுக்கு அந்த கட்சியினால் ஏதாவது ஆதாயம் கிடைத்திருக்கலாம். (இலவச நிலம், பணம், தொலைக்காட்சி,..................)

2. ஒரு சில கட்சித்தலைவர்களை மனதில் வைத்து அவர்களின் வேட்பாளர்கள் யார் என்று கூட தெரியாமல் கண்மூடித்தனமாக வாக்களிப்பது.


3. நீங்கள் ஒரு தலைவரால் கவரப்பட்டு (கருணாநிதி, ஜெயல்லிதா, வாஜ்பாய், )அவரது கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.

4. எப்போதோ யாருடனோ ஒன்றாக நின்று போட்டோ எடுத்ததை ஞாபகமாக வைத்து அவருக்கு வாக்களித்தல்.


5. எப்படியும் இவர் ஜெயிக்கப் போவதில்லை; பின் எதற்காக என் வாக்கை வீண் செய்ய வேண்டும் என்று நல்ல வேட்பாளரை புறக்கணித்து மற்றொருவருக்கு வாக்களிப்பது.

6. முக்கியமாக, உங்கள் ஜாதியைச் சேர்ந்த வாக்காளருக்கு வாக்களிப்பது.


7. உங்கள் எதிர்கால லாபம் கருதி முன் பின் தெரியாத வாக்காளருக்கு வாக்களிப்பது. (அரசு ஊழியர்கள் தி.மு.க விற்கும், சிறுபான்மையினர் பி.ஜெ.பி க்கு எதிராக காங்கிரஸுக்கும்)

8. பணம் வாங்குவதும் தவறில்லை, கொடுப்பதும் தவறில்லை, ஆனால் பணம் வாங்கிய கட்சிக்கு எதிராக ஓட்டளிப்பது துரோகம்; இப்படி செய்வது தவறு என்ற கிறுக்குத்தனமான கொள்கையுடன் வாக்களித்தல்.


9. எப்போதோ யாரோ ஒருவர் உங்களை ஒரு கட்சியில் சேர்த்து விட்டிருப்பார். கட்சிக்காரன் என்கிற முறையில் கட்சியின் கொள்கைபற்றி கூட தெரியாமல் அந்த கட்சிக்கு வாக்களிப்பது.

10. உங்களுக்கு பிடித்த மாநிலக் கட்சி மாற்றி மாற்றி எந்த ஒரு மத்திய கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் முட்டாள் தனமாக வாக்களிப்பது.


11. தீவிர விசுவாசத்தினால் வாக்களிப்பது. (அண்ணா, எம்.ஜி.ஆர், இன்னும் சிலர் காங்கிரஸ் கட்சி விசுவாசிகளாக வாழ்நாள் முழுவதும் வாக்களிப்பதைப் பார்திருக்கிறேன்.)

12. நான் ஓட்டுப் போட்டா மட்டும் இவர் ஜெயிக்கவா போறார் என்று நல்ல வேட்பாளரை ஒதுக்கி மற்ற ஒருவருக்கு ஓட்டளிப்பது.


13. சுயேட்சை வேட்பாளர் நல்லவராக இருந்தாலும் அவர் வென்றால் அரசு திட்டங்கள் நமது ஊருக்கு கிடைக்காது என்று அதிபுத்திசாலித்தனமாக யோசித்து வேரு ஒருவருக்கு வாக்களிப்பது.

14. இந்த வேட்பாளர் தான் என் வீடுதேடி வந்து வாக்கு கேட்டவர் என்ற நல்லெண்ண(?) அடிப்படையில் அவருக்கே வாக்களிப்பது.


15. இவற்றிற்கெல்லாம் மேலாக, என் ஓட்டு எபோதும் ஜெயிக்கும் வாக்காளருக்குத் தான் என்று வலிமையான கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பது. என் ஓட்டு எப்போதும் தோற்கக் கூடாது என்ற ஒரு பாமரத்தனமான எண்ணம்.

16. நல்லவரோ கெட்டவரோ... எங்கள் ஊரில் இவர் பெயர் பிரபலம் (அ) எங்கள் ஊரே இவரால்தான் பிரபலம் என்று வாக்களிப்பது. (பொங்கலூர் ப....., வெள்ளகோயில் சா....., வாழப்பாடி ரா....., வீரபாண்டி ஆ....., பொள்ளாச்சி ஜெ......., ஆற்காடு வீ...., திருப்பூர் சி...., பல்லடம் செ,ம....., திண்டிவனம் ரா....., திருச்சி சி.., ஸ்ரீவில்லிப்புத்தூர் தாமரை...., )


17. (இது தவிர வாக்காளரின் பெயர் என் பெயராக இருந்த்து;
அவர் எங்கள் ஊர்காரர்;
வாக்குச் சாவடியில் கண்ணைமூடி பட்டனை அழுத்தினேன்;
அந்த கட்சியின் சின்னம் எனக்கு பிடித்திருந்த்து எனவே ஓட்டு போட்டேன் என்றெல்லாம் கூட நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.)


வாக்களிக்கும் மக்களில் 99 சதவீத்த்தினர் இந்த காரணத்திற்காக மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்று நூறு சதவிகிதம் அடித்துச் சொல்ல்லாம்.

பார்த்தீர்களா நாம் ஒருவருக்கு வாக்களிப்பதற்க்கு எப்படி எல்லாம் யோசிக்கிறோம் என்று.

இப்படி யோசிக்காமல் வாக்களித்துத்தான் நாம் இன்னும் இதே நிலைமையில் இருக்கிறோம். நாம் ஆட்சியாளர்களை தவறாக தேர்ந்தெடுத்து விட்டு நம் எல்லா முன்னேற்றத்திற்கும் நாமாகவே முட்டிமோதி வளர்ந்து வருகிறோம். இன்று நீங்கள் இருக்கும் இடத்தை அடைய நீங்கள் செய்த முயற்சிகளே காரணம்.

ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஆட்சியாளரை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டால் போதும் உங்கள் முயற்சியால் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.


எவ்வளவு தான் விலைவாசி ஏறினாலும் நாம் அதை சமாளிக்கும் திறமை பெற்றிருக்கிறோம் பார்த்தீர்களா? ஆனால் நாம் என்றாவது விலைவாசியை குறைக்கும் அரசை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறோமா?

எல்லாவற்றிற்கும் அரசை குறைகூற மட்டும் தயாராகும் நாம், ஒரு நல்ல அரசை அமைக்க நம் ஆட்காட்டி விரலை தயார்செய்வதில்லையே.....!


நாம் தேர்வறையில் செய்யும் தவறை விட வாக்குச்சாவடியில் செய்யும் தவாறால் தான் நம் வாழ்க்கை புரட்டிப் போடப்படுகின்றன என்று நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.


வாக்களிக்கும் நாள் என்பது நம்மைப் பொருத்தவரை ஒரு விடுமுறை நாளாக மட்டுமே தானே நாம் பார்க்கிறோம். ஆனால் அது உங்கள் எதிர்காலத்தை ஏதோ ஒரு வழியில் பாதிக்கப் போகும் நாள் என்று என்றாவது நினைத்திருக்கிறோமா?

எந்த ஒரு அரசியல்வாதியையும் உண்மையில் குறைகூற நம்மில் எவருக்குமே தகுதியில்லை. எல்லாத்தவறும் நம்மேல் தான்.

எத்தனை காலத்திற்க்குத் தான் நாம் இன்னும் ஏமாந்து கொண்டே இருக்கப் போகிறோமோ தெரியவில்லை.


ஒரு நாள் செய்யும் தவறால் ஆண்டாண்டு காலமாக நாம் கஷ்டப்படுவதை தடுக்க வாக்களிக்கும் போது ஒரு கண நேரமாவது யோசியுங்களேன்... ப்ளீஸ்!!!!

புரூஸ் லீ...

· 3 கருத்துகள்

மும்பை பயங்கர வாதத் தாக்குதல்...

· 4 கருத்துகள்

மும்பை பயங்கர வாதத் தாக்குதல் நிகழ்ந்து 26/11 உடன் ஒருவருட காலம்

நிறைவடைகிறது. சுமார் 195 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களின் உயிரை

பழிவாங்கிய நாளின் ஓராண்டு நினைவு தினம் வரும் 26 ம் நாள் அனுஷ்டிக்கப்

படுகிறது.அன்றைய தினத்தில் idea அலைபேசி நிறுவனம் இரவு 8.36 மணியிலிருந்து

(தாக்குதல் நடந்த நேரம் ) 9.36 வரை தன் நிறுவனத்திற்கு கிடைக்கும் மொத்த

தொகையையும் இந்திய பாதுகாப்பை பலப்படுத்த அரசுக்கு வழங்கப் போவதாக

அறிவித்துள்ளது.5 கோடி பயனாளர்களைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு சராசரியாக மற்ற

நாட்களில் ஒரு மணி நேரத்தில் 3 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும்,

இது வரும் 26 ம் தேதி மிகவும் அதிகரிக்கும் எனவும் அந்நிறுவனம்

கணக்கிட்டுள்ளது.இதற்காக இன்று (ஞாயிறு ) முதல் தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்

போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த செய்தியை மக்கள்

அனைவருக்கும் கொண்டு செல்ல நாமும் முயற்ச்சிப்போம்.26/11 அன்று ஒரு நிமிட மெளன அஞ்சலியை இறந்தவர்களுக்காகவும் ஒரு மணி

நேர வாதத்தை இருப்பவர்களுக்காகவும் செலவழிப்போம்.மீண்டுமொரு அசம்பாவிதம் நடக்காமலிருக்க நம்மாலான

உதவியைச்செய்வோம்.

DAYTRADING செய்யும் போது செய்யக் கூடாத சில விஷயங்கள்

· 5 கருத்துகள்

நான் கடந்த 3 வருடங்களாக DAY TRADING, LONG TERM , SHORT TERM என STOCK MARKT இல் பலவகையில் INVEST செய்து வருகிறேன். என் அனுபவத்தில் DAYTRADING செய்யும் போது செய்யக் கூடாத சில விஷயங்களை உங்களுக்காக எழுதுகிறேன்.

1. WORLD MARKET ஐ பார்த்துவிட்டு சிலர் காலை MARKET OPEN ஆன உடன் வாங்கவோ, விற்கவோ செய்வார்கள். இது மிக மிக தவறான முடிவாகும். இதில் சம்பாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்னைப் பொருத்தவரை 0% என்று தான் சொல்லுவேன்.2. உங்கள் BROKERAGE நிறுவனங்களிலிருந்து வரும் ஆலோசனைகளை அப்படியே ஏற்காதீர்கள்.3. STOP LOSS போடுவதும் போடாததும் உங்கள் இஷ்டம். ஆனால் TARGET VALUE விற்க்கு SQURE OFF செய்யுங்கள். உங்கள் இலாபத்தினை முதலிலேயே தீர்மானியுங்கள்.4. வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பார்கள். இது STOCK MARKT க்கு பொறுந்தாது. நீங்கள் எவ்வளவு வாய்ப்புகளை நழுவ விடுகிறீர்களோ அவ்வளவு விஷயங்களை நீங்கள் கற்பீர்கள். ஆனால் பணத்தை நழுவ விடாதீர்கள்.5. ஒன்றை முதலில் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் STOCK MARKET இல் போட்ட பணம் திருப்பதி உண்டியலில் போட்டது என்ற எண்ணம் வரும் வரை DAY TRADING செய்ய வேண்டாம்.6. முதலில் உங்கள் தேவைக்கேற்ற BROKERAGE நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் ஒன்றிரண்டு ரூபாயையும் BROKERAGE நிறுவனத்திடம் இழக்காதீர்கள். (மேலும் ஆலோசனைக்கு என் e- mail முகவரியை தொடர்பு கொள்ளலாம்.)7. 2% இலாபத்திற்கு மேல் DAY TRADING இல் எப்போதும் TARGET ஐ FIX செய்து SQURE OFF செய்ய வேண்டாம்.8. ஐரோப்பிய மார்க்கெட் OPEN ஆன பின் டிரேடிங் ஒரு வித மந்த நிலையில் தான் நடைபெறும். அதற்க்குப் பின் டிரேடிங் செய்வது அவ்வளவு நல்லதல்ல.9. சிலர் கவனக்குறைவாக BUY பண்ண நினைத்து SELL செய்து விடுவார்கள்; SELL பண்ண நினைத்து BUY செய்து விடுவார்கள். TRADING செய்யும் போது DECIMAL VALUE க்களை மாற்றி 250.4 என்பதிற்குப் பதில் 25.04 என்று கூட நீங்கள் டைப் செய்யலாம். கவனம்...10. கரண்ட் கட், INTERNET PROBLEM இவற்றிலிருந்து தப்பிக்க TRADING செய்யத் தெரிந்த நல்ல நண்பரை வெளியூரில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.11. வாங்கும் போதோ, விற்கும் போதோ MARKET RATE க்கு TRADING செய்ய வேண்டாம். (USE ‘LIMIT’ OPTION). ஏனெனில் நமக்கு இணையத்தில் வரும் அனைத்து தகவல்களும் 5 நொடியிலிருந்து 2 நிமிடம் வரை தாமதமாகத்தான் நமக்கு கிடைக்கும்.12. எது BASE VALUE எது TOP VALUE என்பது தெரியாமல் வாங்கவோ விற்கவோ கூடாது. இதனால் வாய்ப்பை நழுவவிட்டால் பரவாயில்லை... இன்றைக்கே இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் TRADING செய்வதை மறந்து விடுங்கள்.13. நீங்கள் நினைப்பது தான் STOCK MARKET இல் நடக்கும். ஆனால் நீங்கள் தொடந்து நஷ்டம் அடைந்து கொண்டே இருப்பீர்கள். அதற்காக நீங்கள் மாற்றுப் பாதையில் என்றுமே யோசிக்கக் கூடாது.14. DISCLAIMER: TRADE AT YOUR OWN RISK (வேரென்ன சொல்ல முடியும்...)
ALL THE BEST

அனுபவம்....

· 5 கருத்துகள்

இரண்டு வருடத்திற்கு முன் திருச்சியிலிருந்து இரவு பேருந்தில் தனியாக வந்து திருப்பூரில் இறங்கினேன்.


எங்கள் வீட்டிற்குச்செல்ல மற்றொரு டவுன் பஸ் ஏற வேண்டும்.


அதற்க்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்த்து.


இப்போது மணி இரவு இரண்டு.

அந்த பேருந்து நிலையத்தில் இன்னும் முப்பது பேர் காத்துக் கொண்டிருந்தனர்.


ஒருவர் 5 ரூபாய்க்கு காகித டம்ளரில் காபி வினியோகித்துக் கொண்டிருந்த்தார். வழக்கமாக நான் வெளியில் காபி, டீ குடிப்பது இல்லை. இரவு தூங்காத களைப்பில் எனக்கும் காபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. நானும் வாங்கி குடித்தேன்.


அந்த நள்ளிரவில் அவர் சுறு சுறுப்பாக காபி வினியோகித்துக் கொண்டிருந்தார். திருப்பூரைப் பொருத்தவரை அங்கு அனைவரும் நல்ல உழைப்பாளிகள். கடந்த 12 வருடங்களில் நான் அங்கு ஒரு பிச்சைக்காரனைக் கூட பார்த்த்தாக எனக்கு ஞாபகம் இல்லை.


ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேருந்து வந்தது. நான் இரங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கினேன். எங்கள் வீட்டிற்குச் செல்லும் சாலையில் இறங்கி நடந்தேன். ஒரே கும்மிருட்டு. யாருமே இல்லை.


திடீரென்று பின்னால் இருந்து யாரோ அழைக்கும் சத்தம். 35 வயது நிரம்பிய ஒரு பெண் தலையில் ஒரு மூட்டையையும் கையில் ஒரு பையையும் பிடித்தவாரு வந்து கொண்டிருந்தார்.


தம்பீ இதக்கொஞ்சம் பிடிங்க என்று அந்த பையை என் கையில் திணித்தார்.


நான் வந்த பேருந்தில் தான் அந்த பெண்ணும் வந்திருக்க வேண்டும்.இருவரும் நடக்க ஆரம்பித்தோம்.


பின் எங்கள் இருவரிடையேயான சம்பாஷனை இதோ...

(கிட்டத்தட்ட நினைவிருக்கிறது)எங்க போகனும் தங்கம்...?


இங்க தான்; அஞ்சே நிமிஷம் போயிரலாம்; நீங்க...? (இது நான்)


புதூருக்கு கண்ணு... (2 கி.மீ தொலைவு)


ஊருக்கு போயிட்டு வர்ரீங்களா....? (இது நான்)

இல்ல சாமி... வேல முடிஞ்சு இப்ப தான் வரேன்.


காத்தால ரேஷன்ல அரிசி வாங்கிட்டு கம்பெனிக்கு எடுத்துட்டு போயிட்டேன்.

தூக்க முடியல....

பையு கனமா இருக்க கண்ணு....?


இல்ல பரவாயில்லங்க.... இப்ப தான் வேல முடிஞ்சதா? (இது நான்)


ஆமாங்கண்ணு... காலையில 9 மணிக்கு போனா இப்ப தான் விடுவாங்க...

சனிக்கிழம வரைகும் இப்படி தான்...


எனக்கு இதைக் கேட்டதும் என்னவோ போலிருந்த்து.....

நீ வேலைக்கு போரயா தம்பீ.....?


இல்ல ஸ்கூலுக்கு போரேன். (ஏனோ காலேஜ் என்று சொல்ல தோணவில்லை)

பன்னெண்டாவது...

எம் பொண்ணு பத்தாவது படிக்கிரா...

(அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசவில்லை....)

இப்போது மணி 3.30 இன்னும் 5 மணி நேரத்தில் மீண்டும் அந்தப் பெண்

வேலைக்குச் சென்றிருக்க வேண்டும்.

அவளுடைய சம்பளம், கணவன் பற்றி கேட்கவேண்டும் போலிருந்த்து.

சம்பளம் என்ன இலட்ச ரூபாயா கொடுக்கப் போகிறார்கள்?

தினமும் 17 மணி நேரம் வேலை செய்கிறாள்; பின் யார் இருந்து என்ன பிரையோஜனம்?

சும்மா இருந்து விட்டேன்....

நான் தொடர்ந்து அவள் வீடு வரை போகலாம் என்று நினைத்தேன்.

வேணாஞ்சாமி... இள வயசு தனியா எப்படி திரும்பி வருவ என்றவாரே என்

கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்....


(அந்த பெண்ணின் முகம் கூட சரியாக ஞாபகம் இல்லை; அப்போதே மறந்து விட்டேன்; ஆனால் இந்த நிகழ்வை மறக்க முடியவில்லை; இதை எழுத வேண்டும் போல் இருந்த்து; எழுதி விட்டேன்)

.......................................................................................................................................................................

TELE PHONE BILL இல் ஆகஸ்ட் மாதம் 550 க்கு பதில் 1600 ரூபாயை போட்டு என் தலையில் மிளகாய் அரைத்திருந்தனர். அது தொடர்பாக திருப்பூர் ரயில் நிலையம் அருகில் இருந்த BSNL OFFICE க்கு போயிருந்திருந்தேன்.


நான் பார்க்க வேண்டிய அதிகாரி 10 மணிக்கு பதில் 11 மணிக்கு சாவகாசமாக வந்தார்.


வந்ததும் பக்கத்து அறையிலிருந்த பெண்ணிடம் கதையளக்க சென்று விட்டார். நான் பொறுமையாக உக்கார்ந்திருந்தேன். அவர் தன் அறைக்கு வந்ததும் நான் உள்ளே நுழைந்தேன்.


அவரது மேஜை மேலிருந்த PHONE அடித்துக் கொண்டே இருந்த்து. அதை கவனிக்காமல் COMPUTER ON செய்வதும் நான் கொடுத்த லெட்டரையும் , பில்லையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.


ஒரு வாரம் ஆகும் என்றார்.


தன் மேஜை மேலிருந்த ஃபோன் நம்பரை எனக்கு கொடுத்தார்.


நான் மெதுவாக பேச ஆரம்பித்தேன்.


சிறிது நேரத்தில் அனைவரும் எங்களையே பார்க்கும் படி கார சார மாக விவாதிக்க ஆரம்பித்து விட்டோம்.


கடைசியாக அவர் தன் மொபைல் எண்ணை என்னிடம் கொடுத்ததும் தான் நான் அங்கிருந்து வெளியேறினேன்.


(அதுவும் அவர் என் கல்லூரியின் முன்னாள் மாணவராம்... அது தெரிந்த பின் தான் தன் நம்பரைக் கொடுத்தார்.)

வீட்டிற்கு நடையைக் கட்டினேன்.


மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தேன்.


12 messages received.


Open செய்து பார்த்தேன்.


Congratulations….

Congratulations da machi…

Congrats da…


‘ ’

‘ ’

‘ ’

‘ ’


‘ ’


‘ ’


Treat eppa da….?


கடைசியாக இப்படி ஒரு மெசேஜ்


Machaan… result came da. U ve got selected in ESSAR STEELS da…

(Campus Interview வில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது...)

இப்போதே விழித்துக் கொள்வோம்....

· 1 கருத்துகள்

ஒரு பதிவரின் கருத்துக்களுக்கு நாம் எதிர்ப்பை பின்னூட்டத்தில் தெரிவிப்போம். அல்லது எதிர்ப்பதிவை எழுதுவோம். ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமாக என் பதிவிற்கு எதிர்ப்பதிவை நானே எழுதுகிறேன். என் முந்தய பதிவினை இங்கு அழுத்தி படித்துக்கொள்ளுங்கள்.


இதில் நான் இன்னும் 20-30 ஆண்டுகளில் உலகம் நம் இந்தியர்கள் கைகளில் என்று எழுதியிருக்கிறேன்.


இன்று நம் நாட்டில் 110 கோடி பேர் வாழ்கிறோம்.இந்த 110 கோடி பேரும் தினமும் மூன்று வேலை சாப்பிட வேண்டும்.


110 கோடி பேருக்கும் குடிக்க தண்ணீர் வேண்டும்.
நினைத்துப் பாருங்கள்; நாம் எவ்வளவு உணவைப் பயிரிட வேண்டும்;


எவ்வளவு தண்ணீரை நாம் சேமித்து வைக்க வேண்டும்.


2030 இல் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட அதிகமாகக்கூட இருக்கலாம்.


அப்போது நம் மக்கள் தொகை எப்படியும் 150 கோடியைத் தொட்டு விடும்.

(இந்தியாவின் doubling time அதாவது மக்கள் இரட்டிப்பாகும் ஆண்டுகள் 28 என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2038 இல் மக்கள் தொகை 200 கோடியாகக் கூட இருக்கலாம்.)

ஆக இத்தனை பேருக்கும் நாம் உணவையும் நீரையும் வழங்க வேண்டும்.

அதற்கான முயற்ச்சிகளை நாம் இப்போதே எடுக்க வேண்டும்.


நாம் அதைச் செய்கிறோமோ என்றால் நிச்சயமாக இல்லை....


வளர்ந்த நாடுகள் எல்லாம் இப்போதே விழித்துக் கொண்டு விட்டன.


அவர்கள் இப்போதே தண்ணீரை சேமித்து விவசாயத்தை ஊக்கு விக்க ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களது முதலீட்டை எல்லாம் நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் போட்டு அதைப் பன்மடங்காக்கும் வித்தையை கற்றுக்கொண்டு விட்டார்கள்.


FII எனப்படும் foreign institutional investors கள் நம் பங்குச்சந்தையை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டார்கள். பங்குச்சந்தையில் ஏற்றமோ இரக்கமோ இப்போது அவர்கள் கையில் தான்.


multi national company களுக்கு நான் நீ என்று ஒவ்வொரு மாநிலத்தரும் போட்டி போட்டுக் கொண்டு விவசாய நிலத்தை அவர்கள் தொழிற்சாலை அமைக்க கொடுத்து வருகிறோம்.அவர்கள் வருகை நம் நாட்டை நோக்கி இருப்பதன் காரணத்தை நான் முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் அதற்க்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.அவர்கள் நாட்டில் இப்போது தொழிற் சாலைகளை துவங்க கெடு பிடிகள் அதிகம்.

அது தவிர இந்தியா ஒரு பலமான வியாபாரச் சந்தையை பெற்றுள்ளது.


இந்தியச் சந்தைகளில் விலை போகாத பொருட்களே இல்லை எனலாம்.

அது தவிர அவர்கள் நாட்டை விட குறைந்த கூலிக்கு இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சுலபம்.இப்போதே ஜப்பானில் கப்பல் மேல் விவசாயத்தைத் துவங்கி விட்டார்கள்.நம் நாட்டில் டாலர் சிட்டியின் (திருப்பூரின்) நிலை என்ன தெரியுமா?


இங்கு விவசாய நிலத்தை அழித்து தொழிற் சாலை துவங்கி சாயக் கழிவால் நிலத்தடி நீரையும், ஆற்று நீரையும் மாசுபடுத்தி ஏற்றுமதி செய்யும் துணிகளை அனாவசியமாக $30 செலவில் வாங்கி போட்டுக்கொண்டு அவர்கள் விவசாயத்திற்கு கிளம்பிவிட்டார்கள்.
ஏன் அவர்களுக்கு தொழிற் சாலை அமைத்து பின்னலாடை தயாரிக்கத் தெரியாதா என்ன?ஆக மொத்தத்தில் நாம் அவர்கள் செல்லும் பாதைக்கு எதிர்த்திசையில் செல்கிறோம்.
அதாவது "கோழியை பிடிக்க நினைத்து வீட்டு கூரையை இடித்த கதை" என்பது இதுதான்.இப்போதே ஆறு வழிச் சாலைகள் அமைக்கிறேன் என்று சாலையோர மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள்;தொழிற்சாலை , வீடுகள் கட்டுகிறேன் என்று ஏரி, குளங்களை எல்லாம் மூடி விட்டார்கள்.விவசாய நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் சூறையாடி விட்டார்கள்.இப்போதே பணவீக்கம் கட்டுக்குள் இருந்தும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் அவற்றின் விலை ஏற்றம் நின்றபாடில்லை.எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதைச் சேமிக்க வழியின்றி எல்லாம் கடலுக்குத்தான் செல்கின்றன.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று இருந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்குமாம்.இதே பாதையில் நாம் பயணித்தால் அப்போரைத் துவங்கும் தலையாய பணி நம்மைத்தான் வந்து சேரும்.

உலகம் நம் இந்தியர்கள் கையில்...

· 4 கருத்துகள்

இன்றைய தேதியில் நம் நாட்டின் மக்கள் தொகை 114 கோடி என்கிறது ஒரு கணக்கெடுப்பு நிறுவனம். சிலர் 125 என்கிறார்கள். இன்னும் சிலர் 118 என்கிறார்கள். ஆகா மொத்தத்தில் நாம் 110 கோடியை தாண்டியாகிவிட்டது.


இது கவலைக்குரிய விஷயமாக நாம் நினைத்தாலும் உலக நாடுகள் நம்மை இதற்காக பொறாமையுடன் பார்க்கின்றன என்று நான் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?


ஆனால் உண்மை இதுதான்...1990களில் இந்தியாவுடனான உறவை வளர்த்துக்கொள்ள எந்த ஒரு மேற்க்கத்தைய நாடுகளும் அவ்வளவாக விரும்பவில்லை. (ரஷ்யாவைத் தவிர). பிற நாட்டுத் தலைவர்களின் கால் தடங்கள் இந்திய மண்ணில் பதிந்தகாக பெரியதொரு வரலாறு இல்லை. நம் நாட்டுத் தலைவர்கள் தான் வெளி நாட்டுப் பயணங்களில் பிற நாட்டு உறவை வளர்த்து வந்தார்கள்.ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்....அமெரிக்கா உட்பட எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனமும் அந்நிய முதலீட்டில் முதலில் பார்ப்பது நம்மைத்தான்.இதனால் தான் நம்மை சுற்றியுள்ள நாடுகள் அரிப்பெடுத்து எதற்கெடுத்தாலும் நம்மை சீண்டுகிறார்கள்.சரி நாம் விஷயத்துக்கு வருவோம்.எல்லா நாட்டு மக்கள் தொகை வளர்ச்சியையும் மூன்றாகப் பிரிக்கலாம்.வளரும் மக்கள் தொகை;


(இந்தியா, பிலிபைன்ஸ்,எதியோபியா)

நிலையான மக்கள் தொகை;


(அமெரிக்கா,கனடா, பிரான்ஸ் )
சுருங்கும் மக்கள் தொகை.


(ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்)இவை வயதின் அடிப்படையிலான மக்கள் தொகையைக் குறிக்கிறது...இந்த வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்து விட்டது. மனிதனின் வாழ் நாள் கணிசமான அளவு உயந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் இன்னும் முப்பது ஆண்டுகளில் வயதானோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கும் மேல் முதியவர்கள் தான் இருப்பார்கள்.
அவர்களைப் பராமரிக்கவே 20 விழுக்காட்டுக்கும் மேல் இளைஞர்கள் தேவைப்படும்.ஆனால் இங்கு தான் நம் இந்தியர்கள் போட்டியின்றி வென்று விட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகளில் நம் நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தான் முதியவர்கள் இருப்பார்கள்.


அதாவது நாம் உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்டிருப்போம்.

(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )அதாவது இன்னும் 20 -30 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் நாடு நம் நாடுதான்.அந்த இளம் தலை முறையினருக்கு போதுமான அடிப்படை வசதியையும்,கல்வியையும் வேலை வாய்ப்பையும் கொடுத்து விட்டால் போதும் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து உலகம் நம் இந்தியர்கள் கையில்...அதாவது நமக்கு தினமும் ஆறு மணிநேரம் தான் வேலை...


மாதக்கடைசியில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லலாம்....


இப்போது வெளிநாட்டினர் செய்வது போல் ஏடா கூடமான நிகழ்ச்சிகளை நடத்தி காசைக் கரியாக்கி கும்மியடிக்கலாம்...அதற்கான வேலைகளை நம் ஆட்சியாளர்கள் சிறப்பாகவே செய்து வருகிறார்கள்....
(கும்மியடிப்பதற்கு இல்லை... நாட்டை முன்னேற்றுவதற்கு...)நம் நாட்டின் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றி, முதலீட்டுக்கு ஏற்றவாறு மாற்றி வருகிறார்கள்.இந்நிலை தொடரும் போது நம் நாட்டின் GDP (மொத்த உற்ப்பத்தியின் அளவீட்டு எண்) 2015 இல் இத்தாலியையும், 2020 இல் பிரான்சையும், 2032 இல் ஜப்பானையும் விஞ்சிவிடுமாம்.வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 விழுக்காட்டுக்கு மேல் தான் இருக்குமாம்...உள்கட்டமைப்பு வசதி, ஆகாய மற்றும் கடல் போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு என்று எல்லா வசதிகளும் நிறைந்த இடமாக இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக சென்னை உருவெடுத்து வருகிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி....(பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன.....)

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!!!

· 6 கருத்துகள்

இந்த பதிவை காலையிலேயே போட்டுவிடலாம் என்று பார்த்தால் 8-10 கரண்ட் கட். ஆனால் பதிவு இதைப்பற்றித்தான்.


நான் மின்சார உற்ப்பத்தி குறைவால் கரண்ட் கட் இங்கு மட்டும் தான் என்று நினைத்தால் பாகிஸ்தானிலும் அப்படித்தானாம். இங்கு தினமும் இரண்டு மணிநேரம்; சில நேரம் மூன்று மணி நேரம் கூட...


பாகிஸ்தானில் எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.


ஆனால் இப்போது அவர்கள் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்கள்.


கரண்ட் கட் செய்வதிற்க்குப் பதில் கடிகார நேரத்தை மாற்றிவிட்டார்கள்.


புரியவில்லையா?


நேற்று முதல் பாகிஸ்தானில் எல்லா கடிகாரமும் ஒரு மணி நேரம் பின்னோக்கி பயணம் செய்து விட்டது. அதாவது ஒரு மணி நேரத்தை எல்லாரும் கடிகாரத்தில் குறைத்துக் கொண்டார்கள்.


இதில் என்ன லாபம் இருக்கிறது?


அப்படி கேளுங்கள்!!!தினமும் மின்சார செலவு அதிகம் ஆகும் நேரம் காலை 6-7.30


இப்போது கடிகாரத்தை மாற்றி வைத்தால் காலை வழக்கமாக 7.20 க்கு உதிக்கும் சூரியன் 6.20 க்கு உதிப்பது போலாகும். எனவே காலையில் எழுந்ததும் சூரியன் வந்தது போலாகும். எனவே மின்சார பயன்பாடு ஒரு மணி நேரம் சேமிக்கப்படும்.இது காலையில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோருக்கு உதவியாக இருக்குமாம்.கோடை காலத்தில் இந்த ஒரு மணி நேரத்தை சரி செய்து கொள்வார்களாம்.


(படத்தை பெரிது படுத்தி பார்க்கவும் )ஐரோப்பா கண்டத்தில் ஏற்கனவே இந்த முறை பின்பற்றப் படுகிறதாம். அவர்கள் வசந்த காலத்தில் ஒரு மணி நேரத்தை அதிகப் படித்திக் கொண்டு பின்னர் அதை இலையுதிர் காலத்தில் சரி செய்து கொள்வார்களாம்.நேற்று முதல் இது பாகிஸ்தானில் அமலுக்கு வருகிறதாம்.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!!!!நாமும் நம் 'கலைஞரிடம்' எடுத்துச் சொல்லி இந்த இரண்டு மணி நேர கரண்ட் கட் பிரச்சனைய குறைச்ச்சிருவோமா!!!!!

அட விடுங்கப்பா.... இதிலயுமா...

· 3 கருத்துகள்

நேற்றைய இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோணி(71) மற்றும் யுவராஜ் சிங்கின்(78) அதிரடியில் ஆஸ்திரேலியாவை பத்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வென்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிகி பாண்டிங் இடம் கேட்டபோது,


"எங்கள் அணி வீரர்களை குறைகூற முடியாது; அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்; ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்றார்."மேலும் அவர் கூறுகையில் "நேற்றைய பயிற்சியின் போது பிட்ச் மிகவும் சேறாக, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ; ஆனால் இந்திய வீரர்கள் வரும் போது இது பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டு விடும்; இது எங்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது " என்று குறை கூறியுள்ளார்.


நேற்றைய இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோணி(71) மற்றும் யுவராஜ் சிங்கின்(78) அதிரடியில் ஆஸ்திரேலியாவை பத்து பந்துகள் மீதமிருக்கையில் இந்தியா வென்றது. யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ரிகி பாண்டிங் இடம் கேட்டபோது, "எங்கள் அணி வீரர்களை குறைகூற முடியாது; அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்; ஆனால் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்றார்."


இது ஆஸ்திரேலிய நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.மேலும் அவர் கூறுகையில் "நேற்றைய பயிற்சியின் போது பிட்ச் மிகவும் சேறாக, பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது ; ஆனால் இந்திய வீரர்கள் வரும் போது இது பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டு விடும்; இது எங்களுக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது " என்று குறை கூறியுள்ளார்.இது பாகிதானின் ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு.அட விடுங்கப்பா.... இதிலயுமா...

கச்சா எண்ணெய்-2

· 1 கருத்துகள்

கச்சா எண்ணெய்-1

கச்சா எண்ணெய் உலகெங்கும் பரவலாகக் காணப்பட்டாலும் அதிக அளவில், குறைந்த உற்ப்பத்திச் செலவில், சில நாடுகளில் மட்டும் பிரித்தெடுக்கப்படுகிறது.

ஈரான், ஈராக், குவைத், கத்தார், Saudi அரேபியா, Venezuele
இவற்றில் மிக அதிக அளவிலும்
Indonesia, Libyan Arab Jamahiriya, United Arab Emirates, Algeria, Nigeria, Ecuador, Angola and Gabon
போன்ற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலும் உற்ப்பத்தி செய்யப்படுகின்றன.


ஆரம்ப நாட்களில் கச்சா எண்ணெய் வளமிக்க நாடுகள் தங்கள் தேவைக்கேற்ப கச்சா எண்ணையின் விலையினை நிர்ணயித்து விற்க்கத்துவங்கின.

சில நாடுகள் விலை குறைவாக விற்க வளர்ந்த நாடுகளால் நிர்பந்திக்கப்பட்டன.(இது போன்ற அரசியல் சமாச்சாரங்கள் நமக்கு இப்போதைக்கு வேண்டாம்.)

இந்நிலையில் பிரெஞ்சு காலனி ஆதிக்கம் நிறைந்த தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபரின் தீவிர முயற்சியால் OPEC (The Organization of the Petroleum Exporting Countries) உருவாக்கப்பட்டது. அமெரிக்க ஆதிக்கத்தினை எதிர்த்துக்கும் இயக்கம் என இது முன்பு பேசப்பட்டாலும் OPEC கச்சா எண்ணெய் தொடர்பாக சில முடுவுகளை எடுக்கத்துவங்கியது.

Iran,

Iraq,

Kuwait,

Saudi Arabia

and Venezuela

ஆகிய நாடுகளின் தலைவர்கள் OPEC ஐ உருவாக்கி கச்சா எண்ணையின் விலையினை நிர்ணயம் செய்தனர். இது உலக நாடுகளின் சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு நிலைப்பாட்டினை உருவாக்கியது.

கச்சா எண்ணெய் உற்ப்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் நாடுகளின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்தன.
ஆனாலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து டாலரில் விற்கப்பட்டது.

இது ஏன் தெரியுமா?

ஆரம்ப நாட்களில் வெளிநாடுகளுடனான வர்த்தகத்திற்கு பண்ட மாற்று முறையினைப் பயன்படுத்தினர். ஆனால் இது வணிகத்தில் இரு சாராருக்கும் இடையே ஒரு வித ஏற்ற தாழ்வான வர்த்தகத்தினை ஏற்ப்படுத்தியது.
பின்னர் வர்த்தகம் தங்கத்தில் நடைபெற்றது.
ஆனால் தங்கம் வர்த்தகத்திற்கு போதுமான அளவு உற்ப்பத்தி செய்யப்பட வில்லை. எனவே உலக நாடுகளிடையே வாணிகம் செய்ய ஒரு பொதுவான நாணயம் தேவைப்பட்டது. ஆனால் அந்த பொதுவான நாணயத்தின் மதிப்பில் ஒரு நிச்சயத்தன்மையும், நண்பகத்தன்மையும் தேவைப்பட்டது.

இதற்க்கு அந்த நாணயம் வளர்ந்த நாடுகளில் ஒன்றின் நாணயமாகத்தான் இருக்க முடியும். 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம், இராணுவம் என்று எல்லாதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்திவந்த அமெரிக்காவின் டாலரை பொது நாணயமாக ஏற்க மற்ற நாடுகளால் முடிவு செய்(விக்கப்)யப்பட்டது.

ஏனெனில் 1940-45 களில் நடைபெற்ற உலகப்போரில் எல்லா நாட்டு பொருளாதாரமும் பின்னோக்கிப் பயணம் செய்யில் அமெரிக்க டாலர் மட்டும் அவ்வளவாக வீழ்ச்சியடைய வில்லை. அமெரிக்க உலகப்போரில் அவ்வளவாக பங்கேற்காவிட்டாலும் (!!??) அந்த நாணயத்தின் மதிப்பில் ஏற்ற தாழ்வுகள் எக்காலத்திலும் குறைவாக் இருக்குமாறு அதன் ஆட்சியாளர்கள் அந்நாட்டை திறம்பட வளர்ச்சிப்பாதையில் செலுத்திவிட்டனர்.

கடந்த ஆண்டு இறுதியில் உலகமுழுதும் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியின் போதும் கூட டாலரின் மதிப்பில் மிகப்பெரிய அளவிலான ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பதை மறுக்க முடியாது.
ஆகவே தான் அனைத்து நாடுகளும் வர்த்தகத்திற்கு டாலரை ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.
இதன் காரணமாகத்தான் அந்நியச் செலாவணி என்றொரு நாணயப் பரிவர்த்தன முறையினை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கத் துவங்கின.


அந்நியச் செலாவணி பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்...
(தொடரும்....)

கச்சா எண்ணெய் -1

· 2 கருத்துகள்

(இது ஒரு தொடர் பதிவு.... இன்று முதல் ஆரம்பம் )


பஞ்ச பூதங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
எங்கோ படித்தது நினைவிருக்கிறது....

நிலம்,
நீர்,
காற்று ,
ஆகாயம்,
நெருப்பு.


இவற்றில் ஒன்று குறைந்தாலும் உலகில் எந்த ஒரு ஜீவராசியும் வாழ தகுதியற்றதாகிவிடும். அகவே தான் இவை பஞ்ச பூதங்கள்.
இவை இயற்கையால் உருவாக்கப்பட்டவை. நம்மால் உருவாக்கப்பட்டவை அல்லவே.19 ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வேண்டுமானால் நாம் மேற்க்கண்ட வரிகளை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்
ஆனால் இவற்றுடன் இப்போது ஆறாவதாக ஒன்றை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளோம்.


அது கச்சா எண்ணெய்;19 ம் நூற்றாண்டில் உபயோகமற்ற திரவம் என்று கருதப்பட்ட கச்சா எண்ணெய் மட்டும் இன்று இல்லாவிட்டால் நீங்களும், நானும் ஏன் நம் நாட்டு பிரதமரும் கூட பட்டினிதான்....உங்களால் எங்கும் செல்ல முடியாது;


உங்களுக்கு உணவு கிடைக்காது;


மருந்து கிடைக்காது;


போக்குவரத்து இல்லை;

உற்ப்பத்தி இல்லை;

முன்னேற்றம் இல்லை;

பிறகென்ன!!!


மீண்டும் உலகம் கற்க்காலத்திற்க்கு திரும்ப வேண்டியத்துதான்;கட்டிடங்களை இடித்து வயல்வெளியாக்க வேண்டும்;

சாலைகளை தகர்த்து வாய்க்கால்களை உருவாக்க வேண்டும்;

வீடுகளை இடித்து ஏரிகளை உருவாக்க வேண்டும்;
நடக்கிற காரியமா இது?நீங்கள் கூறலாம்....


மின்சாரம் உள்ளதே என்று!


ஏற்கனவே நாளுக்கு மூன்று மணிநேரம் அதற்க்கு ஓய்வு கொடுத்து விட்டார்கள்; மழைக்காலத்திலேயே இப்படி என்றால் கோடையில் கேட்கவும் வேண்டுமா?சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கலாம் என்றால் அந்த இலக்கை அடைவது மிகவும் கடினம்;
48000 ரூபாய் செலவில் சூரிய ஒளியினை மின்சாரமாக்கு இயந்திரத்தை அமைத்தால் ஒரு குடும்பம் அதனால் பயனடையுமாம்; இதில் அதனை பத்திரமாக பராமரிக்க வேண்டும்;எவ்வளவு செலவாகும்?


எவ்வளவு இடம் தேவைப்படும்?


hydro power:
இங்கு குடிப்பதற்கு நீர் இல்லை இனி எங்கு மின்சாரம் தயாரிக்க முடியும்?wind energy:
இந்த வருடம் கேள்விக்குறி...
வருங்காலமும் அப்படித்தான்.
ஆக கச்சா எண்ணெய் இல்லாவிட்டால் உலகம் பகலிலும் இருண்டுவிடும்;


இது படி பார்த்தால் கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் இன்னும் 50 வருடங்களுக்கு கவலையின்றி வாழும்.
அவர்கள் சொன்ன விலைக்குத்தான் நாம் வாங்க வேண்டும்;
சென்ற ஆண்டில் 147$ க்குச்சென்ற கச்சா எண்ணெய் விலை பின் 35$ க்கு குறைந்து தற்ப்போது மீண்டும் 80$ க்கு சென்று விட்டது.
இதற்காகத்தான் எப்போதும் பெட்ரோல் டீசல் விலைகளை ஏற்றி இதனால் மற்ற அத்தியாவசிய பொருள்களின் விலையும் ஏறி எல்லாம் கடைசியில் வந்து நம் தலையில் விழுகிறது...ஆனால் நாம் எதைப்பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை... இன்னும் 160 cc, 180 cc, 220 cc என்று பெற்றோலை உறிஞ்சும் வாகனங்களை வாங்குவதில் குறியாக இருக்கிறோம்;அலுவலகத்தினானாலும், வீட்டிலானாலும் காரிலும் A/C இல்லாமல் இருப்பதில்லை;வாரமொருமுறை வரும் குடிநீரையும் அது வந்தபின் வீணாக்குவோம்;தவறை நம் பக்கம் வைத்துக்கொண்டு அரசை குறை கூறுவதை என்று தான் நிறுத்தப்போகிறோமோ தெரியவில்லை;கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்தால் எதிர்காலம் நம் கையில்...

(தொடரும்.....)(அதிருக்கட்டும் நாம் ஏன் கச்சா எண்ணையை டாலரில் வாங்கு கிறோம் என்று தெரியுமா...????டாலர்; நாட்டின் பொருளாதார எதிர்காலம்; பணவீக்கம்; பங்கு சந்தை பற்றி வரும் நாட்களில் எழுதவிருக்கிறேன் ... காத்திருங்கள்.......)(ஓட்டு போடுபவர்கள் என்னை நண்பனாக (follower) ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)


நன்றி!

டைம் பாஸ்.....!

· 8 கருத்துகள்


உங்கள் புத்திசாலித்தனத்தினை பரிசோதிக்கும் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன...அதற்கான பதில்களை ஒவ்வொரு கேள்விக்கும் கிழே கொடுத்துள்ளேன். select all கொடுத்து பார்த்துக்கொள்ளுங்கள்...கேள்விகள்:

1. மூன்று பூனைகள் மூன்று எலிகளை தின்ன மூன்று நிமிடங்கள் ஆகும் என்றால் நூறு பூனைகள் நூறு எலிகளை தின்ன எத்தனை நிமிடங்கள் ஆகும்?

பதில்:

நூறு என்று நீங்கள் கூறியிருந்தால் உங்கள் தலையில் நீங்களே

குட்டிக்கொல்லுங்கள், சரியான விடை 'மூன்று'.2. டாக்டர் உங்களிடம் மூன்று மாத்திரைகளை கொடுத்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மாத்திரையை சாப்பிடச்சொல்கிறார். மூன்று மாத்திரைகளையும் உண்ண எவ்வளவு நேரம் ஆகும்?

பதில்: ஒன்றரை என்று சொன்னவர்கள் மறுபடியும் தலையில்

குட்டிக்கொல்லுங்கள், சரியான விடை 'ஒன்று'.3. ஜூலியின் அப்பாவிற்கு ஐந்து குழந்தைகள்

nana

nene

nini

nono

?

ஐந்தாவது குழந்தையின் பெயரைகண்டுபிடியுங்கள்...

பதில்:

nunu என்று பதில் சொன்னவர்கள் மீண்டும்..... வேண்டாம் இப்போது உங்கள் காதை

நீங்களே திருவிக்கொள்ளுங்கள். சரியான பதில் "ஜூலி"


4. நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். (நான் என்ன உசேன் போல்ட்டா என்று கேட்பது காதில் விழுகிறது. ஒரு பேச்சுக்குதானே......! சும்மா நெனைங்க!!!) நீங்கள் இரண்டாவதாக ஓடுபவரை முந்திச்சென்றால், இப்போது நீங்கள் எந்த இடத்தில் ஓடுகிறீர்கள்?


முதலிடத்தில் அல்ல; இரண்டாவது இடத்தில் தான்!!!!


5. அதே ஓட்டப்பந்தயத்தில், நீங்கள் கடைசி இடத்தில் இருப்பவரை முந்தி ஓடினால் இப்போது உங்கள் நிலை?

ஹா ஹா ஹா!!! கடைசியில் ஓடுபவரை எப்டிங்க முந்த முடியும்? அவரால்தான்

மத்தவங்கள முந்த முடியும்.6. கால்குலேடர எடுக்காம, நிதானமா யோசிக்காம சட்டுன்னு பதில சொல்லுங்க...

1000 உடன் 40 ஐ கூட்டுங்கள்;

மறுபடியும் 1000 ஐ கூட்டுங்கள்;

இப்போது 30 ஐ கூட்டுங்கள்;

மறுபடியும் 1000 ஐ கூட்டுங்கள்;

இப்போது 20 ஐ கூட்டுங்கள்;

மீண்டும் 1000 ஐ கூட்டுங்கள்;

அதோடு 10 ஐ கூட்டி பதிலை சொல்லுங்கள்.


பதில் 5000 என்று சொன்னவர்கள் தோப்புக்கரணம் போடவேண்டியதுதான். பதில் 41007. 30'பாதியால் ' வகுத்து 10 ஐ கூட்டினால் என்ன வரும்?


பதில்: 70 ( 30 வகுத்தல் ½ + 10)


இப்போ கொஞ்சம் மொக்கையான கேள்விகள்:


(டேய்...! நீ இதுவரைக்கும் சொன்னதே அப்டிதான் இருந்துச்சுன்னு சொல்லக்கூடாது.... ஆமா!!!)


8. நம்ம பிரதமரோட பேறு கி.பி.1952 ல என்ன?


அப்பவும் மன்மோகன் சிங்குதான்! அவரு இன்னும் பேர மாத்தல!

ஹி! ஹி!


9. நம்ம ஆளு ஒருத்தர் அமெரிக்காவுல கடையில போய் காப்பி ஆர்டர் பண்ணினார். சர்வர் காப்பிய டேபுள் மேல வச்சுட்டு போய்ட்டார். திடீர்னு நம்ம ஆளோட friend ஒருத்தர் கடைக்கு வந்தார். நம்மாளப் பார்த்ததும் இவருடன் அமர்ந்து விட்டார். பின்

what is before u? என்று கேட்டார். நம்ம ஆளு 'டீ' அப்டீன்னு பதில் சொன்னார். ஏன்?


ஏன்னா.... U க்கு முன்னாடி T தான...!!! ஹி! ஹி!


அப்டியே தலைல, காதுல கைல iodex தடவிக்கிட்டே எல்லாரும் ஓட்டுபோடுங்க பாப்போம்!!!


( சும்மனாச்சுக்கும்...! எனக்கு தெரியாதா நம்ம பதிவர்கள் எல்லாரும் புத்திசாளிங்கன்னு...!!!??? ஹி! ஹி! ஹி!)நம்ம எல்லாத்துக்கும் சரியா பதில் சொல்லிருவோம். அதனால இத உங்க வீட்டுல இருக்கற குழந்தைகள் கிட்ட கேளுங்க. அவுங்க தப்பா பதில் சொல்றதே ஒரு அழகுதான்.(ஓட்டு போடுபவர்கள் என்னை நண்பனாக (follower) ஏற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்)நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets