ஊடக விபச்சாரம்!

· 0 கருத்துகள்

If one morning I walked on top of the water across the Potomac River, the headline that afternoon would read:  "President Can't Swim."  ~Lyndon B. Johnson

மகாபாரதம் என்னும் புனையப் பட்ட கதையில் பாரதப் போரில் துரோணரை மாய்க்க மாயக் கண்ணன் ஒரு திட்டம் தீட்டுவார். துரோணரின் மகனான அசுவத்தாமன் இறந்துவிட்டால் தான் துரோணர் தன் கையிலுள்ள ஆயுதத்தை கீழே போடுவார். 

அதற்காக அசுவத்தாமன் எனும் யானையை பீமனைக் கொண்டு அழித்து "அசுவத்தாமனைக் கொன்றேன்" "அசுவத்தாமனைக் கொன்றேன்" என்று பீமனை கூப்பாடு போட வைப்பார். இதைக் கேட்டு நிலை குழைந்து போன துரோணர் உண்மையை மட்டுமே பேசும் யுதிர்ஷ்டனிடம் "என் மகன் அசுவத்தாமன் இறந்து விட்டானா?" என்று கேட்பார். 

"ஆம் அசுவத்தாமன் எனும் யானை இறந்தான்" என்று பதிலளிக்கும் யுதிர்ஷ்டன் 'எனும் யானை' என்ற சொற்களை மட்டும் துரோணர் காதில் விழாதவாறு மெது வாகச் சொல்லுவான். அதைக் கேட்டு ஆயுதத்தை துரோணர் கீழே போட அவர் கதை அத்தோடு முடிந்து போகும். 

ஊடகங்கள் இப்போது இந்த யுதிர்ஷ்டனின் வேலையைத்தான் செய்கின்றன. உண்மையின் உரைகல்லாகவே தங்களைக் காட்டிக் கொண்டு ஊடக விபச்சாரம் செய்கின்றன. 

கட்சிக்கொரு ஊடகம், சாதிக்கொரு செய்தித் தாள் என்று ஆரம்பித்து விட்ட பிறகு இவர்களிடம் உண்மையை எதிர்பார்த்து ஏமாந்து போவது ஏனோ நாம் தான்.

ஒரு சார்புச் செய்திகள், இருட்டடிப்பு என்று ஊடக தர்மத்தை நிலை நாட்டி வந்த இவர்கள் இப்போது அடுத்த கட்டமாக கட்டப் பஞ்சாயத்தை ஆரம்பித்திருப்பது தான் அதிர்ச்சியைத் தருகிறது. செய்தியை வெளியிடுவதற்கு இவ்வளவு, வெளியிடாமல் இருப்பதற்கு இவ்வளவு என்று வெளிப்படையாக திருட்டில் இறங்கிவிட்ட இவர்களுக்கு கடிவாளம் இட வேண்டிய அரசோ இவர்களுக்கு பணத்தை வாரி இறைத்து தன் சொந்த இலாபத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. 

இணையவழி சமூக வலைத்தளங்களும் , முக நூலும் ஊடகங்களின் முகத்திரையை கிழித்து நிஜத்தை வெளியிடுகின்றன என்றால் அது தான் இல்லை. அவை ஊடகங்களின் செலவில்லா விளம்பரப் பலகைகள் ஆகிவிட்டனவே  தவிர இன்னும் நாம் உண்மையான செய்திகளை பெற்ற பாடில்லை.   

ஒரே நாளில் உங்களை ஒரு ஊடகம் தீவிரவாதியாகவும் மற்றொன்று மகாத்மாவாகவும் காட்டும் நிலையில் உங்களுக்கே நீங்கள் யார் என்ற குழப்பம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை. இப்படிப் பட்ட குழப்பமான சூழலில் தங்கள் சாதிக் கேற்ற, மதத்திற்க் கேற்ற, கட்சிக் கேற்ற ஊடகங்கள் சொல்வது தான் உண்மை என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் உங்களைப் போல் ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இல்லை எனலாம். 

தவறான வழியில் பயன்படுத்தப் படும் ஊடகச் சுதந்திரத்தை கடிவாளம் இட இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இயலாத காரியம் எனும் போது இதை இப்படியே விட்டால் ஜனநாயகத்திற்க்கே எதிராகப் போய்விடும் என்பது மட்டும் நிச்சயம். 

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Copyright © 2011 Mixx Blogger Template - Blogger Templates by BloggerReflex

Sponsored by: Trucks | SUV | Cheap Concert Tickets